Published:Updated:

``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி

ஜீலியஸ் அசாஞ்சே ( AP )

அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ப்ரிதி படேல் எடுப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி

அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ப்ரிதி படேல் எடுப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
ஜீலியஸ் அசாஞ்சே ( AP )

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியஸ் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும், அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் ப்ரிதி படேல் எடுப்பார் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட்டது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஏதுவாக இங்கிலாந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

ஜூலியன் அசாஞ்சே!
ஜூலியன் அசாஞ்சே!

கடந்த மாதம் அசாஞ்சே நாடு கடத்தப்படலாம் என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ``அசாஞ்சேவை நாடு கடத்துவது குறித்து இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பிரிதி படேல் முடிவு செய்வார். இருப்பினும், அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அவர் 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என்று தீர்ப்பளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜீலியஸ் அசாஞ்சே
ஜீலியஸ் அசாஞ்சே
AP

50 வயதான அசாஞ்சே, 2010-ல் ஆயிரக்கணக்கான அமெரிக்க ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். அதையடுத்து, உளவு சட்டத்தை மீறியது உட்பட 18 குற்றவியல் வழக்குகளில் அசாஞ்சே குற்றம்சாட்டப்பட்டு கைதாகி, 2019-லிருந்து லண்டன் சிறையிலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism