Published:Updated:

``பேய்தான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நினைத்தேன், ஆனால்..!"- `ஷாக்' கொடுத்த இளம்பெண்

`ஷாக்' கொடுத்த இளம்பெண்

இளம்பெண் சில தினங்களாக இரவு நேரங்களில் ஏதோ உருவம் தனக்கு முத்தம் கொடுப்பதைப் போலவும், தன்னுடைய மார்பகங்களை தொடுவதை போலவும் உணர்ந்திருக்கிறார்.

``பேய்தான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நினைத்தேன், ஆனால்..!"- `ஷாக்' கொடுத்த இளம்பெண்

இளம்பெண் சில தினங்களாக இரவு நேரங்களில் ஏதோ உருவம் தனக்கு முத்தம் கொடுப்பதைப் போலவும், தன்னுடைய மார்பகங்களை தொடுவதை போலவும் உணர்ந்திருக்கிறார்.

Published:Updated:
`ஷாக்' கொடுத்த இளம்பெண்

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் ஜோடி, அந்த நாட்டின் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்திருக்கின்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் காதல் ஜோடிகளிடம், ``இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறது. அதனால், அதை சரி செய்வதற்காக பரிகாரம் செய்துகொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

காதல் ஜோடி இரவு நேரங்களில் நிர்வாணமாக உறங்குவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இளம்பெண் சில தினங்களாக இரவு நேரங்களில் ஏதோ உருவம் தனக்கு முத்தம் கொடுப்பதைப் போலவும், தன்னுடைய மார்பகங்களை தொடுவதை போலவும் உணர்ந்திருக்கிறார். இது குறித்து தன் காதலனிடமும் அந்தப் பெண் அச்சம் தெரிவித்திருக்கிறார். இது தொடரவே... இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

பேய் பயம் (Phasmophobia)
பேய் பயம் (Phasmophobia)

அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பேய் அல்ல... வீட்டின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் அந்த இளம்பெண், ``இரவு நேரங்களில் ஏதோ ஒரு உருவம் என்னை முத்தமிட்டது போலவும், என்னுடைய மார்பகங்களை தொடுவதையும் உணர்ந்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கு அந்த உருவம் தெளிவாக தெரியவில்லை. ஒரு நிழலை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. இந்த அச்சுறுத்தல் தொடரவே.... என்னுடைய அறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினோம். அந்த அமானுஷ்யத்தை ஆராய்ந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

CCTV
CCTV

காரணம் சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்தான். ஒரு நாள் நள்ளிரவு 12:56-க்கு நான் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கை கதவைச் சுற்றி வந்து விளக்கை அணைத்தது. அந்தக் கை வேறு யாருமில்லை... ஹவுஸ் ஓனர்தான். அந்த நபர்தான் தொடர்ந்து இரவு நேரங்களில் எனக்கு தொல்லை கொடுத்தார் என்பது தெரியவந்தது. அதையடுத்து, அடுத்தநாள் வழக்கம் போல நான் தூங்குவது போல நடித்தேன்... வீட்டு உரிமையாளரும் என்னுடைய அறைக்கு வந்தார்.

கைது
கைது

உடனே நான் அந்த நபரை கையும், களவுமாக பிடித்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

இளம்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், அந்த நபரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்ததோடு... காதல் ஜோடி வீட்டுக்கு கொடுத்த முன்பணத்தை திரும்ப அளிக்கவும் வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.