Published:Updated:

`நீ ஒரு ஏமாற்றுக்காரன்...' - தன்னை ஏமாற்றிய காதலனைப் பற்றி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்த பெண்!

Mackay and Whitsunday Life

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் காதலனைப் பழிவாங்கும் நோக்கில் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

`நீ ஒரு ஏமாற்றுக்காரன்...' - தன்னை ஏமாற்றிய காதலனைப் பற்றி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்த பெண்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் காதலனைப் பழிவாங்கும் நோக்கில் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

Published:Updated:
Mackay and Whitsunday Life

ஆஸ்திரேலிய செய்தித்தாளான மேக்கே & விட்சண்டே லைஃப் (Mackay and Whitsunday) என்ற நாளிதழில் உள்ள நான்காவது பக்கத்தை அங்குள்ள மக்கள் படிக்கும்போது ஆச்சரியப்பட்டுள்ளனர். காரணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜென்னி என்ற பெண் தன்னை ஏமாற்றிய காதலனைப் பழிவாங்கும் நோக்கில் செய்திதாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தில் ’அன்புள்ள ஸ்டீவ், நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை இப்போது இந்த முழு நகரமும் தெரிந்துகொள்ளட்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விளம்பரத்திற்கான பணத்தை, காதலனின் க்ரெடிட் கார்டில் இருந்தே பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் & ஜென்னி யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருந்திருக்கின்றனர். இந்த விளம்பரம் குறித்துப் பல்வேறு மெசேஜ்களை, செய்தித்தாள் நிறுவனமான மேக்கே & விட்சண்டே லைஃப்பிற்கு அனுப்பியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக செய்தித்தாள் நிறுவனம் கூறுகையில், ஸ்டீவ் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் ஜென்னியிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். மேலும், ஜென்னியைப் பற்றிய எந்த விவரங்களையும் நாங்கள் வெளியிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.