Published:Updated:

வேலை தேடி வந்தவரிடம் கேட்ட தவறான கேள்வி; இழப்பீடு வழங்கிய டாமினோஸ் நிறுவனம்!

டாமினோஸ், நேர்காணல் (Representation image)

நேர்காணலின்போது, ஒரு பெண்ணிடம் கேட்ட கேள்வி ஒன்றிற்காக, டாமினோஸ் பீட்சா விற்பனை நிறுவனம் அவருக்கு 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கியிருக்கிறது.

வேலை தேடி வந்தவரிடம் கேட்ட தவறான கேள்வி; இழப்பீடு வழங்கிய டாமினோஸ் நிறுவனம்!

நேர்காணலின்போது, ஒரு பெண்ணிடம் கேட்ட கேள்வி ஒன்றிற்காக, டாமினோஸ் பீட்சா விற்பனை நிறுவனம் அவருக்கு 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கியிருக்கிறது.

Published:Updated:
டாமினோஸ், நேர்காணல் (Representation image)

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஜேனிஸ் வால்ஷ் . இவர் டாமினோஸ் பீட்சா நிறுவனம் நடத்திய இன்டெர்வியூ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். பீட்சாவை டெலிவரி செய்யும் வாகன ஓட்டுனருக்காக நடத்தப்பட்ட அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இடையே, அவருடைய வயதையும் கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் அவரது வயதை கூறிவிட்டு சென்றுள்ளார். இதனிடையே அந்த பெண் அப்பணிக்கு தேர்வாகவில்லை என்று அந்நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வயது மற்றும் பாலினத்தின் காரணமாகத்தான் அவர்கள் தன்னை நிராகரித்து விட்டார்கள் என்று வால்ஷ் எண்ணியுள்ளார்.

டாமினோஸ் பீட்சா
டாமினோஸ் பீட்சா

இதனால் வால்ஷ் பேஸ்புக் மூலம் டாமினோஸ் பீட்சாவிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய வயது அடிப்படையில்தான் நீங்கள் என்னை நிராகரித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன், என அவர் தெரிவித்துள்ளார். இதன்பின்னர், அந்நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. மேலும் நேர்காணலின் போது ஒருவரின் வயதைக் கேட்பது முறையற்றது என்று தங்களுக்கு தெரியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தான் ஒரு பெண் என்ற அடிப்படையிலும் ஓட்டுனர் பணிக்கு தேர்வாகாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் உணர்ந்திருக்கிறார். வால்ஷுக்கு வடக்கு அயர்லாந்தின் சமத்துவ ஆணையமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டிராபேன் பகுதியில் இயங்கி வரும் டாமினோஸ் பீட்சா நிறுவனத்தின் சார்பில் ஜேனிஸ் வால்ஷ்ற்கு 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளனர்.