Published:Updated:

கதவுக்கு பிங்க் நிறத்தில் பெயின்ட்; பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிப்பு! - காரணம் என்ன?

பிங்க் நிறக் கதவு

வீட்டு முன்கதவின் நிறத்தை மாற்றாவிட்டால், 20,000 பவுண்டு அதாவது ரூ.19.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது நகர சபை நிர்வாகம்.

கதவுக்கு பிங்க் நிறத்தில் பெயின்ட்; பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிப்பு! - காரணம் என்ன?

வீட்டு முன்கதவின் நிறத்தை மாற்றாவிட்டால், 20,000 பவுண்டு அதாவது ரூ.19.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது நகர சபை நிர்வாகம்.

Published:Updated:
பிங்க் நிறக் கதவு

ஸ்காட்லாந்தின் எடின்பரோ நியூ டவுன் பகுதியில் 48 வயதான மிராண்டா டிக்சன் எனும் பெண் வசித்துவருகிறார். இவர் கடந்த ஆண்டு தன் பெற்றோர் தனக்கு அளித்த வீட்டை புனரமைத்துவந்தார். அதில் தனது வீட்டின் முன்பக்கக் கதவுக்கு பிங்க் நிற வண்ணம் பூசினார். ஆனால் நகர சபை அதிகாரிகள் அவர் பிங்க் நிறத்தில் வண்ணம் பூசியதை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பிங்க் நிறத்துக்கு பதிலாக வெள்ளை வண்ணம் பூசவும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து, அந்தப் பெண் யாரோ வேண்டுமென்றே தவறாகப் புகார் அளித்திருப்பதாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

பிங்க் நிறக் கதவு
பிங்க் நிறக் கதவு

இது தொடர்பாக அந்தப் பெண், ``இங்கு ஹில், ஹாரோகேட் போன்ற நகரங்கள் பிரகாசமான வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதனால் எனது வீட்டைக் கொஞ்சம் வித்தியாசமாக்க வேண்டும் என விரும்பினேன். அதனால் என் வீட்டு கதவுக்கு பிங்க் நிறத்தை பூசினேன். இந்த நிறத்தோடு எனது வீட்டின் முன்கதவைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். மேலும், எனது கதவு சமூக ஊடக பயனர்களிடையே பிரபலமாகிவிட்டது.

பிங்க் நிறக் கதவு
பிங்க் நிறக் கதவு

பல இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்தத் தெருவைக் கடக்கும்போது, ​​​​எனது வீட்டுக் கதவின் முன் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

ஆனாலும், நகர நிர்வாக சபை புதிய நிறத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை வண்ணம் தீட்ட மிராண்டா டிக்சனுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், வீட்டு முன்கதவின் நிறத்தை மாற்றாவிட்டால், 20,000 பவுண்டு அதாவது ரூ.19.10 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறது.