Published:Updated:

30,000 கிமீ; சிங்கப்பூர் டு அண்டார்டிகா; அதிக தூரம் சென்று உணவு டெலிவரி செய்து சாதனை படைத்த பெண்!

மானசா கோபல்

சிங்கபூரைச் சேர்ந்தப் பெண் ஒருவர் சுமார் 30,000 கிலோமீட்டர் வரைப் பயணித்து உணவு டெலிவரி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

30,000 கிமீ; சிங்கப்பூர் டு அண்டார்டிகா; அதிக தூரம் சென்று உணவு டெலிவரி செய்து சாதனை படைத்த பெண்!

சிங்கபூரைச் சேர்ந்தப் பெண் ஒருவர் சுமார் 30,000 கிலோமீட்டர் வரைப் பயணித்து உணவு டெலிவரி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
மானசா கோபல்

பொதுவாக உணவு டெலிவரி சேவை நகரத்தின் குறிப்பிட்ட தூரத்திற்குள்தான் வழங்கப்படும். ஆனால், வியக்க வைக்கும் வகையில் சிங்கபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 30,000 கிலோமீட்டர் வரை பயணித்து உணவு டெலிவரி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கபூரைச் சேர்ந்த மானசா கோபல் என்ற பெண் அண்டார்டிகாவில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்து வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர், 2021ம் ஆண்டு முதல் ஸ்பான்ஸர்களைத் தேடி வந்துள்ளார். பின்னர் இறுதியாக, சிங்கப்பூரைச் சேர்ந்த 'foodpanda' என்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மானசாவின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு தற்போது உதவி செய்துள்ளது.

இந்நிலையில் மானசா, சிங்கப்பூரில் இருந்து ஹாம்பர்க், தென் அமெரிக்காவில் அர்ஜெண்டினா தலைநகர் பியுனஸ் ஏர்ஸ் மற்றும் உஷுவாயா வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணித்து அண்டார்டிகாவில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், "இன்று, சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவுக்கு ஸ்பெஷல் உணவு டெலிவரி செய்தேன்! இதற்கு உதவிய foodpanda நிறுவனத்திற்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.