Published:Updated:

வேலை நேரத்தை வீணடிப்பதைக் காட்டிக்கொடுத்த சாஃப்ட்வேர்; இழப்பீடாக ரூ.3 லட்சம் அபராதம் கட்டும் பெண்!

வொர்க் ஃப்ரம் ஹோம்

கனடாவில், வொர்க் ஃப்ரம் ஹோம் பணியின்போது அலுவலக நேரத்தை வீணடித்த பெண்ணுக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

வேலை நேரத்தை வீணடிப்பதைக் காட்டிக்கொடுத்த சாஃப்ட்வேர்; இழப்பீடாக ரூ.3 லட்சம் அபராதம் கட்டும் பெண்!

கனடாவில், வொர்க் ஃப்ரம் ஹோம் பணியின்போது அலுவலக நேரத்தை வீணடித்த பெண்ணுக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

Published:Updated:
வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்தியா மட்டுமல்லாது கிட்டத்தட்ட உலகளவில் பல நாடுகளில் பணியாளர்கள் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதில் கொரோனா தொற்று ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அதுதான் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைப் பார்க்கக்கூடிய `வொர்க் ஃப்ரம் ஹோம்.' கொரோனா தொற்று குறைந்து பெரும்பாலும் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாலும், அலுவலக பணியாளர்கள் பலரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதையே விரும்புகின்றனர்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

காரணம், அலுவலகத்துக்குச் செல்லும் பயணநேரம் மிச்சம், அவ்வப்போது சில செலவுகள் மிச்சம், குறிப்பாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட அலுவலகத்துக்குள் வேலைபார்ப்பதைவிடவும், வீடு என்ற விடுதலைக்குள் வேலை செய்வது பெரும் நிம்மதியைத் தருகிறது. இருப்பினும் இதிலும் சிலர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன் எனக் கூறி, சிலர் வெட்டியாக நேரத்தை வீணடிப்பார்கள். இப்படி ஏமாற்றுவதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கம்பெனிகள், பணியாளர்களை சாஃப்ட்வேர்களில் லாக்-இன் செய்யச்சொல்வார்கள்.

அதில்தான் தற்போது, கனடாவைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர், வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அலுவலக வேலை நேரத்தை வீணடித்து ஸ்பை சாஃப்ட்வேர் மூலம் மாட்டிக்கொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கார்லீ பெஸ்ஸி (Karlee Besse) என்ற பெண், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கம்பெனியொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு, தான் காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இதற்காக தன்னுடைய முன்னாள் முதலாளி 5,000 கனேடிய டாலரை (ரூ.3,04,525) இழப்பீடாக தரவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஸ்பை
ஸ்பை
Pixabay

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில், இவர் 50 மணி நேரத்துக்கு மேலாக லாக்-இன் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தை வேலை செய்யாமல் வீணடித்ததாகவும் கம்பெனி கூறியது. இது எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்று பார்க்கையில், அவரின் லேப்டாப்பில், வேலை செய்வதைக் கண்காணிக்க டைம்கேம்ப் (TimeCamp) என்ற சாஃப்ட்வேரை கம்பெனி நிறுவியிருக்கிறது. இந்த சாஃப்ட்வேர், அவருக்கு ஒதுக்கப்பட்ட கோப்புகள் அதிக அளவில் தேங்கியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

கோப்புகளை பணியாளர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும், அவர் லாக்இன் செய்யும் நேரமும் சாஃப்ட்வேரில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம், பெஸ்ஸியின் டைம்ஷீட்களுக்கும், சாஃப்ட்வேர் பதிவுகளுக்கும் வேறுபட்டு இருப்பது தெரியவருகிறது. மேலும் அந்த நிறுவனம், லேப்டாப்பில் பணியாளரின் தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வேலைப் பயன்பாட்டை சாஃப்ட்வேரால் கண்காணிக்க முடியும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து பெஸ்ஸியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அதே ரூ.3 லட்சத்தை தன்னுடைய முன்னாள் முதலாளிக்கு இழப்பீடாகத் தருமாறு பெஸ்ஸிக்கு அபராதம் விதித்தார்.