Published:Updated:

காதலுக்காக 3,000 மைல் தூரம் பயணித்த பெண் கொடூரமாகக் கொலை! - போலீஸ் விசாரணையில் சிக்கிய காதலன்

பெண் கொடூரமாகக் கொலை ( ட்விட்டர் )

மெக்ஸிகோ நாட்டிலிருந்து காதலனைச் சந்திக்க பெரு நாட்டுக்குச் சென்ற பெண் உறுப்புகள் திருடப்பட்டு மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுக்காக 3,000 மைல் தூரம் பயணித்த பெண் கொடூரமாகக் கொலை! - போலீஸ் விசாரணையில் சிக்கிய காதலன்

மெக்ஸிகோ நாட்டிலிருந்து காதலனைச் சந்திக்க பெரு நாட்டுக்குச் சென்ற பெண் உறுப்புகள் திருடப்பட்டு மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
பெண் கொடூரமாகக் கொலை ( ட்விட்டர் )

மெக்ஸிகோ நாட்டைச் சேந்தவர் பிளான்கா அரேலானோ (Blanca Arellano). இவருக்கு பெரு நாட்டைச் சேர்ந்த மருத்துவரான வில்லாஃபுர்ட்டு (Villafuerte) என்பவருடன் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சந்திக்க திட்டமிட்டு கடந்த 7-ம் தேதி மெக்ஸிகோவிலிருந்து விமானம் மூலம் 3,000 மைல்கள் கடந்து பெரு நாட்டுக்குச் சென்றிருக்கிறார் பிளான்கா அரேலானோ. அங்கு செல்வதற்கு முன்னாள் தன் உறவினரான கார்லாவிடம், வில்லாஃபுர்ட்டுடன் தன் உறவு நன்றாக இருப்பதாகவும், அவரைச் சந்தித்திக்கப் போவதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருக்கிறார்.

பிளான்கா அரேலானோ
பிளான்கா அரேலானோ
ட்விட்டர்

பெரு நாட்டுக்குச் சென்ற பிளான்கா அரேலானோவிடமிருந்து எந்தவிதத் தகவலும் இல்லாமல் இருந்திருக்கிறது. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

இந்த நிலையில், கார்லா தனது ட்விட்டர் பக்கத்தில், பிளான்கா அரேலானோவைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து, அவரைக் காணவில்லை எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தத் தகவல் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து, வில்லாஃபுர்ட்டின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து கார்லா பேசியிருக்கிறார்.

அப்போது வில்லாஃபுர்ட்டு, ``பிளான்கா அரேலானோ விரும்பிய வாழ்க்கையை என்னால் வழங்க முடியாது என்பதால், அவர் இங்கிருந்து செல்ல முடிவெடுத்தார். அதற்காக மெக்ஸிகோவுக்கு விமான டிக்கெட் எடுக்கச் சென்றார். அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். ஆனால் என்னுடன் அவர் இல்லை. எனக்கு வேறு எதுவும் அவரைப் பற்றி தெரியாது. ஒருவேளை அவருடைய போன் வேலை செய்யாமலோ அல்லது பேட்டரி தீர்ந்திருக்கலாம். அவர் பத்திரமாக வீடு திரும்புவார். நான் உறுதியாக நம்புகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பெரு நாட்டின் காவல்துறை விசாரணை
பெரு நாட்டின் காவல்துறை விசாரணை
ட்விட்டர்

இதற்கிடையே நவம்பர் 10-ம் தேதி, பெரு நாட்டின் ஹுவாச்சோ கடற்கரையில் முகம் சிதைந்து, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு அலங்கோலமான நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. அந்த சடலத்தின் விரல் பகுதியில் ஒரு வெள்ளி மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்த சடலம் பிளான்கா அரேலானோவுடையது என்பது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறை அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட வில்லாஃபுர்ட்டு
கைதுசெய்யப்பட்ட வில்லாஃபுர்ட்டு
ட்விட்டர்

அப்போதுதான் பிளான்கா அரேலானோவின் உடலின் உள் உறுப்புகள் எதுவும் இல்லை என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவரின் காதலன் வில்லாஃபுர்ட்டு வீட்டை சோதனை செய்ததில் வீட்டில் ரத்தக் கறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும், விசாரணையில் வில்லாஃபுர்ட்டு மருத்துவர் என்பதால், உடல் உறுப்பை திருடுவதற்காக பிளாங்கா அரேலானோவை வரவைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.