Published:Updated:

`ஆத்தீ... இம்புட்டுப் பெருசா?' உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்; புதிய கின்னஸ் சாதனை!

வியட்நாம் பாச் லாங் பாலம்

இந்த வகை பாலங்களில் இதுவே உலகில் மிக நீளமான பாலம் என கின்னஸ் அங்கீகாரம் வழங்கவுள்ளது.

`ஆத்தீ... இம்புட்டுப் பெருசா?' உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்; புதிய கின்னஸ் சாதனை!

இந்த வகை பாலங்களில் இதுவே உலகில் மிக நீளமான பாலம் என கின்னஸ் அங்கீகாரம் வழங்கவுள்ளது.

Published:Updated:
வியட்நாம் பாச் லாங் பாலம்

492 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் பாலத்தில் இருந்து கீழே பார்த்தால், கார்ட்டூன்களில் வருவதுபோல தலையைச் சுற்றி நட்சத்திரங்கள் பறக்கும். அந்தப் பாலமே ட்ரான்ஸ்பரன்டாக அமைந்து கீழே இருப்பது அப்படியே தெரிந்தால்... வியட்நாம் பாச் லாங் பாலம் வலுவூட்டப்பட்ட கண்ணாடிகளால் கட்டப்பட்டது. இந்தப் பாலம் இப்போது கின்னஸ் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வியட்நாமின் தலைநகரான ஹனோய்க்கு வடமேற்கில் அமைந்திருக்கும் சோன் லா (Son La) மாகாணத்தில் இந்தப் பாலம் அமைந்திருக்கிறது. 2073 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் கட்டட நிறுவனத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டது. அங்கிருக்கும் ரிசார்ட் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் இதே போலான சீனாவின் Guangdong பாலத்தைவிட நீளமானது.

வியட்நாம் பாச் லாங் பாலம்
வியட்நாம் பாச் லாங் பாலம்

சீனாவில் அமைந்திருக்கும் கண்ணாடிப் பாலத்தின் நீளம் 1726 அடிகள்.

நிறைய பேர் சென்றால் பாலம் எடை தாங்காது கண்ணாடிகள் நொறுங்கிவிட்டால்... பயப்படவே வேண்டாம். மூன்று தடிமனான லேயர்களில் வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள் பயன்படுத்தி இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு லேயரின் தடிமனும் 40 மி.மீ.

450 பேர் வரை ஒரே நேரத்தில் இந்தப் பாலத்தில் செல்ல முடியுமாம். இதன் தாங்கு திறனைச் சோதிக்க SUV வாகனம் ஒன்றை இதில் ஓட்டிப் பார்த்துள்ளனர். வியட்நாமில் அமைந்துள்ள மூன்றாவது கண்ணாடிப்பாலம் இது. இந்த வகை பாலங்களில் இதுவே உலகில் மிக நீளமான பாலம் என கின்னஸ் அங்கீகாரம் வழங்கவுள்ளது.

"பத்து அடிகள் வரைதான் உங்களுக்கு அந்த பயம் இருக்கும். அதன் பிறகு நீங்கள் ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்" என்கிறார்கள் இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism