Published:Updated:

24 வயது; 7 அடி உயரம்; உலகின் உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்; இத்தனை ஏற்பாடுகளா! யார் இவர்?

ருமேசா கெல்கி

முதல் முறையாக விமானத்தில் பயணித்த உலகின் உயரமான டீனேஜ் பெண் என்ற பெருமையைப் பெற்றார் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி.

24 வயது; 7 அடி உயரம்; உலகின் உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்; இத்தனை ஏற்பாடுகளா! யார் இவர்?

முதல் முறையாக விமானத்தில் பயணித்த உலகின் உயரமான டீனேஜ் பெண் என்ற பெருமையைப் பெற்றார் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி.

Published:Updated:
ருமேசா கெல்கி
24 வயதாகும் ருமேசா கெல்கி ஜனவரி 1, 1997ம் ஆண்டு பிறந்தவர். துருக்கி நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர், பிறக்கும்போதே 'வீவர் சிண்ட்ரோம் (Weaver Syndrome)' என்ற அரியவகை மரபணு சிறப்பியல்புகளுடன் பிறந்தவர்.

எனவே கெல்கி, சாதாரண மனிதர்களைவிட அதிக உயரத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருப்பார். கேல்கி, உடல்ரீதியான சவால்கள் காரணமாக வீட்டில் இருந்தபடி தனது பெரும்பாலான படிப்புகளை முடித்தார். 'வெப் டெவலப்மண்ட் (Web Development) 'படித்த இவர், தற்போது 'Front-End Developer' ராக தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

 ருமேசா கெல்கி
ருமேசா கெல்கி

2014ம் ஆண்டு 2.15,16 செமீ (7'0.7") உயரத்துடன் `உலகின் உயரமான வாழும் பெண் டீனேஜர்' என்ற கின்னஸ் உலக சாதனை படைத்தார். மேலும், `மிகப்பெரிய கைகள் (பெண்)', 2022 இல் `நீண்ட விரல் (பெண்)' மற்றும் `நீண்ட முதுகு கொண்வர் (பெண்)' என்ற பிரிவுகளிலும் கின்னஸ் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, இதுபோன்ற சிறப்பியல்புகள் கொண்ட குழந்தைகள் மற்றும் மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்துதல், மரபணு மாற்றத்திற்குக் காரணமான `நான் வீவர் சிண்ட்ரோம் (Weaver Syndrome)' மற்றும் `ஸ்கோலியோசிஸ் (Scoliosis)' என்ற இரண்டு மரபணு மாற்றங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருபவர். மேலும் சிறப்பியல்புகள் கொண்ட குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியும் வருபவர்.

 ருமேசா கெல்கி
ருமேசா கெல்கி

இவரின் உயரம் அதிகமாக இருப்பதால் இதுவரை அவர் விமானத்தில் பயணித்தது இல்லை. எனவே கேல்கி விமானத்தில் பயணிப்பதற்காக தற்போது, இவருக்காக பிரத்தியேகமான முறையில் விமானத்தின் உட்கட்டமைப்பு மாற்றி, விமானத்தின் ஆறு இருக்கைகள் அகற்றப்பட்டு கெல்கியின் உயரத்திற்கு ஏற்ப சாயும் இருக்கை அமைக்கப்பட்டது. இந்த பிரத்தியேக விமானத்தில் கெல்கி மகிழ்ச்சியுடன் முதல்முறையாக விமானத்தில் பயணித்தார். இதற்காக ஏற்பாடுகளை துருக்கி ஏர்லைன்ஸ் சிறப்பாக செய்து கொடுத்தது. இதையடுத்து உலகின் உயரமான டீனேஜ் பெண்ணான ருமேசா கெல்கி, துருக்கியிலிருந்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்குப் பயணம் செய்தார். இதன் மூலம் முதல் முறையாக விமானத்தில் பயணித்த உலகின் உயரமான டீனேஜ் பெண் என்ற பெருமையைப் பெற்றார் ருமேசா கெல்கி.

ருமேசா கெல்கியின் இந்த முதல் விமானப் பயணம் ஏதோவொரு வகையில் நமக்கு சிறிய புன்னகையையும் ஒரு துளி நம்பிக்கையையும் அளிப்பதாக உணர வைக்கிறது.