Published:Updated:

'மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன்!’ - கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்த தம்பதி

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சிகிச்சைபெற்றுவந்த தம்பதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 20 பேர், குணமுடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. Jinyintan மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் சிகிச்சைபெற்று வந்தவர்கள், உற்சாகமாக வெளியேறுகின்றனர். வுஹான் மாகாணத்தில்தான் இந்த வைரஸ் தாக்குதல் முதலில் அறியப்பட்டது. வுஹான் மாகாணத்தில் உள்ள நோயாளிகளுக்கு Jinyintan மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதேபோல், Zhongnan மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த தம்பதியினர் வீடு திரும்பியுள்ளனர். வுஹான் மாகாணத்தைச் சேர்ந்த வான் டியான்ஷெங் (Wan Tiansheng), அவரின் மனைவி, குழந்தை மூவரும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு, Zhongnan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சைபெற்றுவந்த வான், அவரின் மனைவி, குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர்.

`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்

இதுகுறித்துப் பேசிய வான், “நாங்கள் இருவரும் நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளோம். நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்ததாக உணர்கிறேன். கொரோனா வைரஸ் என்ற பெயரே இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், நான் பயப்படவில்லை. எங்களுக்கு காய்ச்சல் இருந்தது.

எங்கள் குடும்பத்தில் இருந்த மூன்று பேருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. மருத்துவர்கள் புதிதாக சில பெயர்களைச் சொன்னதும் என் மனைவி கொஞ்சம் பயந்துவிட்டாள். இது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான், பயப்பட வேண்டாம். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்கள் நல்ல மனநிலையில்தான் உள்ளனர். அவர்கள், மருத்துவர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். நாங்கள் மருத்துவமனையிலிருந்து இன்று விடைபெறுகிறோம்” என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
CNMD

இதுகுறித்துப் பேசிய Zhongnan மருத்துவர்கள், ``ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் மகனுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியானதையடுத்து, வுஹானில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்தோம். தற்போது அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோய் தாக்கத்தின்போது, உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் மிகவும் முக்கியம். இரண்டு வார கால தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும்” என்றனர்.

News credit- CGTN

`நான்தான் பேசுகிறேன்... மாஸ்க் எங்கே? வீடு திரும்புங்கள்!' - சீனாவைக் கண்காணிக்கும் ட்ரோன்கள் #Video
பின் செல்ல