Published:Updated:

`10 நாள்கள் டார்கெட்; மாஸ் டெஸ்டிங்’ - திரும்ப வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா பெரும் திட்டம்

சீனா
சீனா ( AP )

சீனாவின் வுகான் நகரில் உள்ள மொத்த ஒரு கோடி மக்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. இருந்தும் ஜனவரி மாதம் மத்தியில்தான் அங்கு தொற்று நோய் பரவியிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் அடுத்த 11 வாரங்கள் வுகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சீன அரசின் கடுமையான நடவடிக்கைகள், பல சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றால் அந்நாட்டிலிருந்து வைரஸ் விரட்டப்பட்டது. 3 மாதங்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு சீனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.

சீனா
சீனா
AP

இதையடுத்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கில் தளர்வு விதிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டனர். தற்போதுதான் அங்கு மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பொதுப் போக்குவரத்து, சுற்றுலாத் தளங்கள், வழிப்பாட்டுத் தளங்கள், உணவகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வுகானில் மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா

மேலும் வுகானினும், ஜிலின் மாகாணத்திலும் 50-க்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிகுறியே இல்லாமல் இருப்பதால் மேலும் பலருக்கு இது பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வைரஸ் பரவும் முன்பே அதைக் கண்டுபிடித்துத் தடுக்க ‘மாஸ் டெஸ்டிங்’ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது சீனா. இந்தத் திட்டத்தின் மூலம் வுகானில் உள்ள மொத்த 1.1 கோடி மக்களுக்கும் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யவுள்ளனர். அதையும் வெறும் 10 நாள்களுக்குள் முடிக்கவேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா - கொரோனா
சீனா - கொரோனா
AP

வுகானில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதன் படி மாவட்ட நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருந்தாலும் இல்லையென்றாலும் சோதனை செய்யவேண்டும். குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள இடங்கள், முதியவர்கள், நோயாளிகள், வெளியிடங்களிலிருந்து வுகான் திரும்பியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

இது பற்றிப் பேசியுள்ள, வுகான் பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பெங் ஜியோங்,``முதல் கட்ட பரவல் அதிகரித்தபோதே வுகானில் உள்ள 30 - 50 லட்சம் மக்களுக்குச் சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதனால் மீதமுள்ள 60 லட்சம் மக்களுக்கு மட்டுமே தற்போது சோதனை செய்தால் அது போதுமானதாக இருக்கும்.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
AP

இல்லையென்றால் மருத்துவப் பணியாளர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனக் குறிப்பிட்ட நபர்களை மட்டும் சோதனைக்கு உட்படுத்தலாம். ஆனால் அரசு மீண்டும் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. முழுச் சோதனை நிச்சயம் சாத்தியமற்றது. இதனால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வுகானில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவுவதால் அங்கு முழுமையான சோதனை நடத்தினால் வைரஸை வுகானை விட்டே விரட்டியடித்துவிடலாம் என சீன அரசு பிளான் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு
அடுத்த கட்டுரைக்கு