Published:Updated:

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு; `புளூ டிக்' பயன்படுத்த மாதம் இவ்வளவு ரூபாயா?

ட்விட்டர்

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதற்கான 'புளூ டிக்' குறியீட்டை பயன்படுத்த மாதம் 19.99 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு; `புளூ டிக்' பயன்படுத்த மாதம் இவ்வளவு ரூபாயா?

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதற்கான 'புளூ டிக்' குறியீட்டை பயன்படுத்த மாதம் 19.99 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய நிலையில் எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கியிருந்தார். இதனைத்தொடர்ந்து ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

தற்போது ட்விட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோருக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் புளூ டிக் இருக்கும். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறிக்கப்பட்டிருக்கும்.

ட்விட்டர்
ட்விட்டர்

இதுவரை இந்த புளூ டிக் குறிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் பயனர்களிடம் இருந்து எந்த ஒரு தொகையும் ட்விட்டர் நிறுவனம் வாங்காமால் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் இருந்து மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்க அதாவது இந்திய மதிப்பின்படி 1,647 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லையெனில், பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள நீலநிற புளூ டிக் அகற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.