Published:Updated:

"அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகள் இலவச மதிய உணவு தரவேண்டும்!" ரிஷி சுனக்கை நெருக்கும் கோரிக்கைகள்

ஜெய்ன் மாலிக்

"அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்க வேண்டும்" என்று பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், புதிய பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்கிற்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகள் இலவச மதிய உணவு தரவேண்டும்!" ரிஷி சுனக்கை நெருக்கும் கோரிக்கைகள்

"அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்க வேண்டும்" என்று பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், புதிய பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்கிற்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published:Updated:
ஜெய்ன் மாலிக்

பிரிட்டன் கடும் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்த 'லிஸ் டிரஸ்' குறுகிய நாள்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகth தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷி சுனக், தான் பதவி ஏற்றத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சரிக்கட்டும் மிகப்பெரிய பொறுப்பு அவர் கைகளில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனைச் சரி செய்யும் வேலைகளில் முக்கியத் தலைவர்கள் பலரும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பட்ஜெட் தாக்கல் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
இதனிடையே வறுமையினால் வாடும் சுமார் 8,00,000 குழந்தைகள் கடுமையான தகுதி விதிகள் (strict eligibility rules) காரணமாகப் பள்ளிகளில் தரப்படும் இலவச மதிய உணவைத் தவறவிடுகின்றனர் என்று குழந்தை வறுமை நடவடிக்கை குழுவின் ஆய்வு தெரிவித்திருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கடுமையான தகுதி விதிகள் (strict eligibility rules) படி பிரிட்டனில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 2-ம் ஆண்டு இறுதி வரை பள்ளியில் உணவை இலவசமாகப் பெறலாம், ஆனால் அதன் பிறகு அது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டது. இதனால் பல குழந்தைகள் பள்ளி உணவை இலவசமாகப் பெறமுடியாமல் வறுமையின் காரணமாக உணவின்றி தவித்து வருகின்றனர். எனவே இந்தக் கடுமையான சட்டங்களை மாற்றியமைத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி உணவை இலவசமாக வழங்கவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ள பட்ஜெட் தாக்கலில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், "பிரிட்டனின் 'கடுமையான தகுதி விதிகள் (strict eligibility rules)' காரணமாக வறுமையினால் உணவின்றி தவிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி உணவை இலவசமாக அளிக்கும் வகையில் நல்ல திட்டத்தை இந்த பட்ஜெட் தாக்கலில் கொண்டு வர வேண்டும்" என்று பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெய்ன் மாலிக்கின் கடிதம்
ஜெய்ன் மாலிக்கின் கடிதம்

இது பற்றிக் கூறியுள்ள ஜெய்ன் மாலிக், "பசி என்பது சமூகத்தின் கொடிய நோய். குழந்தைகள் வறுமையால் உணவின்றி தவிக்கிறார்கள். இதனால் அவர்களுக்குக் கவனக்குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் உணவகங்களில் உணவுகளைத் திருடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. ஏனெனில் அவர்கள் மிகுந்த பசியுடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இந்த நிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். பிராட்ஃபோர்டில் வளர்ந்ததால், நான் இலவச பள்ளி உணவை மட்டுமே நம்பியிருந்தேன். இந்தக் கடிதத்தை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் எந்தவொரு குழந்தையும் இந்தப் பசியையும் களங்கத்தையும் மீண்டும் அனுபவிக்க மாட்டார்கள் என்பதை நாம் அனைவராலும் உறுதிப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

மேலும், பிரதமர் என்ற முறையில் இந்த நிலைமையை மாற்ற உங்களுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தயவுசெய்து மனசாட்சியுடன் செயல்பட்டு நவம்பர் 17-ம் தேதி உங்கள் பட்ஜெட்டில் வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி உணவை வழங்க உறுதியளிக்க வேண்டும். அரசியல் பிரச்னை மற்றும் கொள்கைகளினால் எந்தக் குழந்தையும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.