Published:Updated:

``உங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்ப வேண்டாம்” - ரஷ்ய தாய்மார்களிடம் உக்ரைன் அதிபரின் கோரிக்கை

உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமையன்று, ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் தங்கள் மகன்களைப் போருக்கு அனுப்புவதைத் தடுக்குமாறு அழைப்புவிடுத்தார்.

``உங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்ப வேண்டாம்” - ரஷ்ய தாய்மார்களிடம் உக்ரைன் அதிபரின் கோரிக்கை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமையன்று, ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் தங்கள் மகன்களைப் போருக்கு அனுப்புவதைத் தடுக்குமாறு அழைப்புவிடுத்தார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தப்பட்ட வீரர்கள் இருப்பதாகவும், அவர்களில் பலர் உக்ரைனால் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட தங்கள் மகன்களின் நிலை தெரியாமல் அவர்களின் தாய்மார்கள் பதிவிட்ட சமூக வலைதளப் பதிவுகள் அதிகரித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியானது.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா உக்ரைனின் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்திவருகிறது. ரஷ்ய நாட்டை ஆக்கிரமித்ததிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களை ஒன்று திரட்டிவருகிறார்.

உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர்
Michael Probst

``உக்ரைன் ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளது. உக்ரைன் நிலப்பரப்பை எப்போது விடுவிப்போம் எனச் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாகச் செய்வோம். நாங்கள் எங்கள் வெற்றியை நோக்கி நகர்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமையன்று, ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் தங்கள் மகன்களைப் போருக்கு அனுப்புவதைத் தடுக்குமாறு அழைப்பு விடுத்தார். ``நான் இதை ரஷ்யத் தாய்மார்களுக்கு மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாகத் தங்கள் மகன்களைப் போருக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தப்பட்ட தாய்மார்களுக்கு, போருக்காக உங்கள் மகன்களை எங்கள் நாட்டுக்கு அனுப்பாதீர்கள்” என அவர் டெலிகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் .

file photo
file photo
Zoya Shu

மேலும், ``உங்கள் மகன் எங்கிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் மகன்கள் உக்ரைனுக்கு எதிராகப் போரிட அனுப்பப்படுவார்கள் என்ற சந்தேகம் இருந்தால் உடனே அவர்கள் கொல்லப்படுவதையோ அல்லது பிடிபடுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

``உக்ரைன் ஒருபோதும் இப்படிப்பட்ட பயங்கரமான போரை விரும்புவதில்லை. ஆனால் எங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism