Published:Updated:

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?
பிரீமியம் ஸ்டோரி
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

கேள்வி - பதில்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

கேள்வி - பதில்

Published:Updated:
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?
பிரீமியம் ஸ்டோரி
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?

நேதாஜி, திருவாரூர்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


‘‘18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், இதுநாள் வரை சிறார் நீதிமன்றத்தில் விசாரித்து, வாகனத்தை ஓட்டியவருக்கு அபராதம் மட்டும் விதித்து வந்தனர். சமீபத்தில், சென்னை அம்பத்தூரில் 16 வயதான மாணவர் ஒருவர், இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்று இன்னொருவர்மீது மோதியதில் விபத்தில் சிக்கியவரும் உயிரிழந்தார்; வாகனத்தை ஓட்டிய சிறுவனும் உயிரிழந்தார். இந்த வழக்கில், அந்த வாகனத்தின் உரிமையாளராகிய சிறுவனின் அம்மாவின்மீது பல பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

ஆக, விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு மட்டுமல்லாது, அந்த வாகனத்தின் உரிமையாள ரையும் அந்த விபத்துக்குப் பொறுப்பாளியாக்கி, அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. விபத்துக்கான இழப்பீட்டையும் வாகன உரிமையாளர்தான் தரவேண்டும்.’’

ஜீவனாம்சமாகக் கிடைத்த தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? என் மகள் தனக்குக் கிடைத்த ஜீவனாம்சத் தொகையைப் பெற்று, என் மனைவிக்கு அளித்தால் அப்போதும் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்குமா?

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?



ரகுவரன், கோயமுத்தூர்

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘ஜீவனாம்சத் தொகையை மொத்தமாக ஒரே தவணையாகத் தந்துவிட்டால், அதற்கு வருமான வரி கிடையாது. ஆனால், அந்தத் தொகையை மாதாமாதம் தந்தால், அதனை இதர வருமானம் என்ற வகையில் கணக்கிட்டு, வரி செலுத்த வேண்டும். ஜீவனாம்சமாகக் கிடைத்த தொகையை மகள் தனது தாய்க்குக் கொடுக்கும்போது அதற்கு எந்த விதமான வரியும் கிடையாது.’’

என் வயது 32. நான் ரூ.25 லட்சம் தொகையை முதலீடு செய்ய உள்ளேன். டிவிடெண்ட் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். அதற்குச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைச் சொல்லுங்கள்.

முத்துகுமார், சேலம்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?



எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்


‘‘குறுகிய கால முதலீடு எனில், ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். பணி ஓய்வு பெற்றவர்களும், குறுகிய கால முதலீட்டாளர்களும் இந்த ஃபண்டில் முதலீடு செய்து, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட, சிறிதளவு அதிக வருமானம் பெறலாம். 

ஐந்தாண்டுகளுக்கு மேலான நீண்ட கால முதலீடு எனில், ஹெச்.டி.எஃப்.சி புரூடென்ஸ் ஃபண்ட்,  சுந்தரம் பேலன்ஸ்டு ஃபண்ட், டாடா பேலன்ஸ்டு ஃபண்ட், ரிலையன்ஸ் டாப் 200 ஆகிய ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு சுமார் 10% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.’’

எனக்கும் என் இரண்டு சகோதரர்களுக்கும் பரம்பரைச் சொத்தாக நான்கு வீடுகளைக் கொண்ட கட்டடம் ஒன்று 2014-ம் ஆண்டில் கிடைத்தது. அந்தக் கட்டடத்திற்கான நிலம், 1977-ம் ஆண்டு வாங்கப்பட்டு, 1978-ல் கட்டடம் கட்டப்பட்டது. அதிலுள்ள ஒரு வீட்டை விற்றுக் கிடைத்த ஒரு கோடி ரூபாயை வைத்து மீதமுள்ள  மூன்று வீடுகளை எடுத்துக் கட்டினோம். தற்போது எனது பங்காகக் கிடைக்கும் ஒரு வீட்டை விற்றால் அதற்கு எப்படி வரி விதிக்கப்படும்?

கோதண்டராமன், மதுரை

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?



எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘பரம்பரைச் சொத்தான ஒரு வீட்டை விற்றுவிட்டு, அந்தத் தொகையில் இன்னொரு வீடு கட்டினாலோ,   வாங்கினாலோ அதற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியிருக்காது. ஆனால், அது வணிக நோக்கான பில்டிங்காக இருந்தால், வரி கட்ட வேண்டியிருக்கும். 

அதேபோல், அந்தத் தொகையில் மூன்று வீடுகள் கட்டினால், அந்தச் செலவுக்கேற்ப வரி விதிக்கப்படும். ஒருவேளை அந்த மூன்று வீடுகளும் ஒன்றுக்கொன்று உள்ளுக்குள் கதவு இணைப்போடு இருந்தால் ஒரே வீடாகக் கருத வாய்ப்புண்டு. அப்படி இல்லாத நிலையில், அந்த வீடுகளில் ஒன்றை விற்றால், அந்த விற்பனைத்தொகைக்கேற்ப வரி விதிக்கப்படும். இப்படிப் பல்வேறு காரணி களைப் பொறுத்து கட்ட வேண்டிய வரியானது கணக்கிடப்படும். எனவே, நீங்கள் ஒரு ஆடிட்டரை அணுகி, உங்கள் செயல்பாடுகளை விளக்கிச் சொல்லி ஆலோசனை பெறுவது நல்லது.’’ 

என்னுடைய வயது 49. பணியிலிருந்தபோது விபத்தில் என் கணவர் உயிரிழந்ததால், அவருடைய காப்பீட்டுத் தொகை ரூ.14 லட்சம் எனக்குக் கிடைக்க இருக்கிறது. என் மகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரூ.8,000 மாதச் சம்பளத்தில் அதே நிறுவனத்தில் வேலை தரவுள்ளார்கள். நான் தையல் தொழில் செய்து மாதம் ரூ.4,000 சம்பாதிக்கிறேன். என் மகன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த பணத்தை மீண்டும் இன்ஷூரன்ஸி லேயே முதலீடு செய்யும்படி சொல்கிறார் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட். வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்யும் படியும், நிலத்தில் முதலீடு செய்யும்படியும் உறவினர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். என் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் மற்றும் எனது ஒய்வுக் காலத்திற்கான செலவுகளை எதிர்கொள்ளத் தகுந்த ஆலோசனை கூறுங்கள்.

தனலட்சுமி, தஞ்சாவூர்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?



எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


‘‘முதலில் உங்கள் மூவருக்கும் ஃபேமிலி ஃபளோட்டர் மருத்துவக் காப்பீடு  ரூ.5 லட்சத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள் (இதற்கான ஆண்டு பிரீமியம் 25,000).

இரண்டாம் ஆண்டிலிருந்து லிக்விட் ஃபண்டிலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு இதற்கான பிரீமியத்தைக் கட்டலாம். அவசரத் தேவைக்காக வங்கிச் சேமிப்பு கணக்கில் ரூ.50,000 போட்டு வைக்கவும். ரூ.7 லட்சத்தை வங்கி வைப்பு நிதியில் (3 வருட எஃப்.டி-க்கு வட்டி வருமானம் 7%) முதலீடு செய்தால், உங்களுக்கு மாத வட்டியாக ரூ.4,000 கிடைக்கும்.

மகளின் திருமணத்திற்காக ரூ.2 லட்சத்தை 5 முதல் 6 வருடங்கள் வரை ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் பேலன்ஸ்டு ஃபண்டிலும், மகனின் கல்லூரிப் படிப்புக்காக 3 வருடங்கள் ரூ.2 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள்.

ஆண்டுக்குச் சராசரியாக 12-14%  கிடைக்க வாய்ப்புள்ளது.

மீதமுள்ள ரூ.2.25 லட்சத்தை எளிதில் பணமாக்கக்கூடிய லிக்விட்  ஃபண்டில் (டாடா லிக்விட் ஃபண்ட்) முதலீடு செய்துகொள்ளவும். அதனை எஸ்.டி.பி முறையின் மூலம் மாதம் ரூ.2,000 வீதம் 112 மாதங்கள் வரை டாடா ரிட்டயர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்டில் முதலீடு செய்துகொண்டால், ஓய்வுக்காலத்தில் ஓரளவு நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம். உங்கள் மகள் வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்கள் மகளை பேலன்ஸ்டு ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்யச் சொல்லவும். டி.எஸ்.பி பிளாக்ராக் பேலன்ஸ்டு ஃபண்டில் மாதம் 1,000 ரூபாய்க்கு எஸ்.ஐ.பி தொடங்கச் சொல்லி, முதலீடு செய்யும் பழக்கத்தை முதல் சம்பளத்திலேயே தொடங்க வலியுறுத்துங்கள்.’’

வயது 36. எனது அலுவலகத்தின் சார்பாக 40 லட்சம் ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்காக மேலும் 30 லட்சம் ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு பாலிசி எடுக்கலாமென இருக்கிறேன். எனது முடிவு சரியானதா?

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?


ரிஷி, சென்னை

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்


‘‘தனிப்பட்ட முறையில் கூடுதலாக  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது தவறில்லை. 50 லட்சம் ரூபாய் வரை பாலிசி எடுப்பதற்கு வருமான அத்தாட்சி  தேவையில்லை. ஏற்கெனவே 40 லட்சம் ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு பாலிசியிருப்பதால், அடுத்து எடுக்கும் பாலிசியை டேர்ம் பாலிசியாக எடுப்பது நல்லது. இதன்மூலம் இயற்கையான மரணத்திற்கும் இழப்பீடு கிடைக்கும்.’’

-தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism