‘‘விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் யோசனை மத்திய அரசுக்கு எப்போதும் இருக்கிறது’’ எனச் சொல்லி யிருக்கிறது நிதி ஆயோக் அமைப்பு. இது குறித்து நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) நடத்திய சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 7% பேர், நிதி ஆயோக்கின் முடிவு வரவேற்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சர்வேயில் 47% பேர், இது எதிர்க்கத்தக்கது என்று சொல்லியிருக்கின்றனர். இயற்கையின் பல பாதிப்புகளைத் தாண்டித்தான் விவசாயிகள் விவசாயம் செய்துவருகிறார்கள். விளைச்சல் இவ்வளவு கிடைக்கும் என்றோ, விளைபொருள்களுக்கு இவ்வளவு விலை கிடைக்கும் என்றோ உறுதியில்லாத நிலையில், விவசாயத்துக்கு வரி விதிப்பது எந்த வகையில் சரி என்று கேட்பதில் தவறில்லை. சிறு விவசாயிகளுக்கு இது நிச்சயம் பொருந்தும். ஆனால், பெரும் விவசாயிகளுக்கு..?

இந்த சர்வேயில் 46% பேர், விவசாயத்தின் மூலம் வருமானம் வந்தால் வரி விதிக்கலாம் என்று சொன்னது ஆச்சர்யமே. மாதச் சம்பளக்காரர்கள் குறிப்பிட்ட தொகைக்குமேல் வருமானம் ஈட்டி னால், வரி கட்ட வேண்டும் என்பது போல, விவசாயத்தின் மூலம் நல்ல வருமானம் வந்தால் வரி விதிக்கலாம் என்று சொன்னது கவனிக்கத்தக்கது. எனினும், அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் முக்கியமான ஓட்டு வங்கியாக இருப்பதால், விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கப்படுவது சந்தேகமே!

- ஏ.ஆர்.கே