வெளிநாடுவாழ் இந்தியர்கள் எங்கு முதலீடு செய்யலாம்?

சென்ற வாரம், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் எப்படி வங்கிக்கணக்கு தொடங்குவது, பணப்பரிவர்த்தனை வழிகள் யாவை எனப் பார்த்தோம். இந்த வாரம், அவர்களுக்கு இந்தியாவில் என்னென்ன இன்வெஸ்ட்மென்ட் வழிகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
பல என்.ஆர்.ஐ-களுக்கு, என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ கணக்கு தொடங்கியவுடன் முதல் முதலீடு வங்கி டெபாசிட்தான். இதில்

என்.ஆர்.இ டெபாசிட்களுக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. உள்நாட்டு மக்களுக்குக்கூட இந்த வரிவிலக்கு கிடையாது. இந்த டெபாசிட்களின் முதிர்வுகாலம் குறைந்தது ஒரு வருடம். உள்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வட்டிவிகிதத்துக்குச் சமமாக, இந்த டெபாசிட்டுக்கு வட்டி கிடைக்கும்.

உள்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் அரசாங்கம் தொடர்பான  பி.பி.எஃப் போன்ற சிறுசேமிப்புகளில் என்.ஆர்.ஐ-கள் முதலீடு செய்ய முடியாது. அதுபோல என்.ஆர்.இ சேமிப்புக்கணக்கில் இருக்கும் பணத்தை நிறுவன (கார்ப்பரேட்) டெபாசிட்களில், என்.ஆர்.ஐ-கள் முதலீடு செய்ய முடியாது. என்.ஆர்.ஓ அக்கவுன்டில் இருக்கும் பணத்தை கார்ப்பரேட் டெபாசிட்டுகளில் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

பணம் பழகலாம்! - 19

இதுதவிர, என்.ஆர்.ஐ-களுக்குக் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்ய மிகவும் எளிமையாக இருப்பது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்தான்.

என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ சேமிப்புக்கணக்குகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 19


கே.ஒய்.சி (KYC – Know Your Customer) படிவத்தைப் பூர்த்திசெய்ய, பான் கார்டு நகல், வெளிநாட்டு முகவரிக்கான நகல், பாஸ்போர்ட் மற்றும் விசா நகல் போன்றவற்றை மியூச்சுவல் ஃபண்ட் படிவத்தோடு கொடுக்க வேண்டும். இவற்றுடன் முதலீட்டுக்கான காசோலையையும் கொடுக்க வேண்டும்.

இவற்றை ஒருமுறை செய்த பிறகு, ஆன்லைன் மூலம் முதலீட்டைச் செய்துகொள்ளலாம். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் காத்திருப்புக் காலத்தைப் பொறுத்துப் பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ளன. உள்நாட்டவருக்கு மட்டுமல்ல, இன்று
என்.ஆர்.ஐ-களிடமும் இந்த முதலீடு செம பிரபலம்!

என்.ஆர்.ஐ-கள், பங்குச்சந்தை யிலும் நேரடியாக முதலீட்டை மேற்கொள்ளலாம். ஆனால், இதற்கு விதிமுறைகள் அதிகம். உங்கள் என்.ஆர்.இ./என்.ஆர்.ஓ வங்கிக்கணக்குடன் கூடுதலாக பி.ஐ.எஸ் (PIS – Portfolio Investment Scheme) என்ற கணக்கையும் வங்கியில் திறக்க வேண்டும். பிறகு, டிரேடிங் மற்றும் டீமேட் கணக்கை ஒரு முகவர் மூலம் திறந்துகொள்ள வேண்டும். அப்போதுதான்  நீங்கள் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். நேரடிப் பங்கு முதலீட்டைக்காட்டிலும் பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பல, என்.ஆர்.ஐ-களுக்குச் சரியானதாக இருக்கும்.

பணம் பழகலாம்! - 19

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் பி.எம்.எஸ் (PMS – Portfolio Management Services) திட்டங்களிலும் என்.ஆர்.ஐ-கள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு 25 லட்சம் ரூபாய்.

உள்நாட்டு மக்களைப்போல என்.ஆர்.ஐ-களிடமும் மிகவும் பாப்புலரான முதலீடுகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம்.

என்.ஆர்.ஐ-கள், விவசாய நிலங்களை வாங்க முடியாது. மனையிடங்கள், தனி வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கலாம். மத்திய அரசாங்கம் அவ்வப்போது வெளியிடும் கோல்டு பாண்டுகளை என்.ஆர்.ஐ-கள் வாங்க முடியாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டு வழங்கும் கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் முதலீட்டை ஆரம்பிக்கும்போதும் சரி, தொடர்ந்து முதலீடு செய்துவரும்போதும் சரி, ஒரு நிதி ஆலோசகருடன் கைகோத்துக் கொண்டால் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கலாம்!

-வரவு வைப்போம்...