Published:Updated:

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

Published:Updated:
வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

மிகவும் வித்தியாசமான காலகட்டத்தில், தங்கம் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்துவருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை (சுமார் 32 கிராம்) 44 டாலர்களும், ஆறு மாத காலத்தில் 103 டாலர்களும், ஒரு வருட காலத்தில் 63 டாலர்களும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் 103 டாலர்களும் குறைந்துள்ளது.

இதே காலத்தில், உள்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை  அதிகரித்திருக்கிறது. 2017 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,736-ஆக இருந்தது. இந்த ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியன்று ரூ.2,807-ஆக இருந்தது. ஒரு மாதத்துக்குமுன் ரூ.2,913-ஆக இருந்தது.

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

ஆக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துவந்தாலும், நம் நாட்டில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதையே கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தங்கத்தைப் பொறுத்தவரை, சர்வதேசச் சந்தை விற்பனையில் கிடைக்கும் பலன் எதையும் நம் நாட்டில் இருக்கும் சாதாரண மக்களால் அனுபவிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், தங்கத்தின் விலைப்போக்கு இனி எப்படி இருக்கும் என்கிற கேள்விகள் பலருக்கும் இப்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இனி பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

விலையேற்றும் டாலர்

சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், நம் நாட்டில் அதன் விலை குறையாமல் தொடர்ந்து உயர முக்கியமான  காரணம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதே. இந்த ஆண்டின் ஜனவரி 2-ம் தேதியன்று ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 63.46-ஆக இருந்தது, இன்றைக்கு 68.63-ஆக உயர்ந்திருக்கிறது.

நாம் பயன்படுத்தும் தங்கத்தில் பெரும்பகுதி வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யும்போது அமெரிக்க டாலரைக் கொடுத்துத்தான் வாங்க வேண்டிய கட்டாயம். இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அதிக விலை தந்து தங்கத்தை வாங்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

டாலருக்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பு?

சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால், அதாவது, 1971-ம் ஆண்டுக்கு முன்புவரை தங்கமும் அமெரிக்க டாலரும் நிகராக ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட்டது. 1971-ம் ஆண்டுவரை, அமெரிக்காவின் நிதிக் கொள்கைகள் டாலருக்கு எத்தகைய பாதிப்பும் வராத அளவிற்கு வைத்திருந்தன.

அதன்பிறகு, இந்தக் கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டபிறகுதான், தங்கத்தின் மதிப்பும், டாலரின் மதிப்பும் சந்தை வர்த்தகத்திற்கு உட்பட்டும், பல்வேறு நாடுகளின் தேவைக்கு உட்பட்டும் தனித்தனியாக வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தன.இரண்டையும் தன்னிச்சையான போக்கில்  சந்தையின் போக்கிற்கு விடப்பட்டதால், இரண்டுமே அதிக ஏற்ற, இறக்கங்களுடன்  எதிரெதிர்த் திசையில் வர்த்தகமாகி வருகின்றன. 

டாலரின் மதிப்பு என்பது சர்வதேசச் சந்தையில் வர்த்தகத்திற்கு உட்பட்டது.  பல நாடுகள் தங்களின் முக்கிய கரன்சியாக டாலரையும்,  அதனடிப்படையில் பொருள் களின் விலையையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்தன.

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

இதனால், இந்தியா உள்பட வளரும் நாடுகள், உலக அளவில்  கமாடிட்டிப் பொருள்களை  வாங்குவதற்கும், இறக்குமதி செய்வதற்கும் அமெரிக்க டாலரை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கவேண்டிய அவசிய மாகிறது. இதன் காரணமாக, இயல்பாகவே டாலரின் மீதான தேவை எப்போதுமே காணப் படுகிறது. உலக நாடுகள் டாலரை  வர்த்தக நாணயமாக ஏற்றுக் கொள்ளும் வரை, டாலரின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

சர்வதேச விலைச் சரிவுக்கான காரணங்கள்

அமெரிக்காவின் பொருளாதாரம், கடந்த 10 வருடங் களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், தற்போது, வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. எனவே, அங்கே தங்கம் வாங்குவதற்கு ஆளே இல்லை. தவிர, அமெரிக்காவில் பணவீக்கமும் சற்று அதிகரித்தி ருக்கிறது. அத்தியாவசியமான பொருள்களின் விலை உயர்ந்திருக்க, தங்கம் வாங்க வேண்டும் என எந்த அமெரிக்கரும் நினைக்கிற மாதிரி தெரியவில்லை.

மேலும், அமெரிக்காவின் ஜி.டி.பி-யும் வளர்ச்சி கண்டுவருகிறது. எனவே, அங்குள்ள முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவே விரும்புகிறார்களே தவிர, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை.

இந்தக் காரணங்கள் அனைத்துமே டாலரை மேல்நோக்கி நகரச் செய்துள் ளது. அமெரிக்க ஃபெடரலும் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக் கைகளை எடுக்க ஆரம்பிக்கிறது.இவற்றின் மூலம் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்போது, தங்கத்தில் செய்துள்ள முதலீடுகளை விற்று,  டாலரில் முதலீடு செய்துவருகிறார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து, அதனால் தங்கத்தின் விலையும் உயரக் காரணமாக அமைந்துவிடுகிறது. 

டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள் அனைவரின் பார்வையும், டாலரை ஒரு சிறந்த முதலீடாகவே கருத வைக்கின்றன.இதனால் டாலரின் தேவை அதிகரித்து, அதன் மதிப்பும் உயரவே செய்கிறது.

குறைந்தது இறக்குமதி

  டாலரின் மதிப்பு அதிகரித்ததன் விளைவாக நம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கம் வாங்கு பவர்களின் எண்ணிக்கை குறைந்தி ருக்கிறது. இதனால், வெளிநாடுகளி லிருந்து தங்கத்தை இறக்குமதியாகும் அளவும் குறைந்துள்ளது.

 இந்த நிதியாண்டில், முதல் காலாண்டின் இறக்குமதியானது, சென்ற வருடம் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 8% குறைந்து காணப்பட்டாலும், 2018-ன் மொத்த இறக்குமதி சென்ற வருடத்தையொட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்ற வருடம் 763 டன்களாகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் 700 முதல் 800 டன்களுக்குள்ளாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களின் சராசரி தேவையானது 840 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

ரூபாய் 5%, தங்கம் 30%

டாலரின் மதிப்பு உயரும்பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைகிறது. இந்த வருடத்தில் மட்டும் 5 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில்,  தங்கத்தின் விலையானது 2011-ம் ஆண்டின் அதிகபட்ச விலையோடு ஒப்பிடும்போது 30 சதவிகிதத்துக்கும்  மேலாக இறக்கத்தைச் சந்தித்தாலும், இந்திய விலையில் 7% மட்டுமே குறைந்துள்ளது. இதனால், தற்போது தங்கத்தின் விலை சர்வதேச அளவில்  ஒரு ட்ராய் அவுன்ஸ் 1,225 டாலருக்கும் குறைவாக வர்த்தகமாகி வருகிறது. அதேசமயம், 24 காரட் தங்கத்தின் இந்திய விலை ரூ.24,000 என்ற அளவில் காணப்படுகிறது.

தங்கம் வாங்க இது சரியான நேரமா?

தங்கம் விலை நம் நாட்டில் உயர்வதற்கான காரணங்களைப் புரிந்துகொண்டோம். இப்போதைய நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரமா என்று பலரும் கேட்கலாம். தனிப்பட்ட தேவைக்கு, ஆபரணமாகத் தங்கத்தை வாங்கலாம். அரசு தங்கப் பத்திரங்களிலோ அல்லது இ.டி.எஃப் மூலமாகவோ முதலீடுகளைச் செய்யலாம். ஆனால், முதலீட்டின் மூலம் உடனே லாபம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.

விலை அதிகரிக்குமா?

இப்போதைய நிலையில், விலை ஏற்றம் என்பது சர்வதேசக் காரணங்களால் மட்டுமே முடிவு செய்யப்பட இருக்கின்றன. உள்நாட்டில் விலை அதிகரித்துக் காணப்படுவதற்கு, தேவை (நுகர்வு)அதிகரித்துள்ளது என்பதல்ல காரணம். டாலரின் மதிப்பு உயர்வு அல்லது ரூபாயின் மதிப்பிறக்கம்தான் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது. தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது, அதை வாங்குபவர்களின் சக்தியும் குறைகிறது. தவிர, உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் தற்போது அதிக லாபம் தருவதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்றுக் குறைந்தே காணப்படுகின்றன. ஆகையால், இப்போதைய நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புச் சரிவு மட்டுமே தங்கத்தின் சர்வதேச விலையை மேல்நோக்கி செல்வதற்குக் காரணமாக இருக்க முடியும்.

இது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என்றாலும், அமெரிக்க அதிபர் எடுக்கக்கூடிய பொருளாதார  நடவடிக்கைகள் மற்றும் அதன் தாக்கங்களை அடுத்த ஆண்டு முதல் நிறுவனங் களின் நிதி அறிக்கைகளிலும், வேலைவாய்ப்புகளிலும், அமெரிக்காவின் வர்த்தகம் சார்ந்த புள்ளிவிவரங்களிலும் எதிர்பார்க்கலாம்.

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

உயரும் பங்குச் சந்தை

மேலும், அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாக ஏற்றம் பெற்றுவருவது காளையின் பிடியில் இருப்பதை உணர்த்தினாலும், சந்தை மூலம் கிடைக்கும் லாபம் எந்தளவுக்கு இருக்கும் என யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இன்றைய நிலையில் அமெரிக்க அதிபர் எடுத்துவருகிற ‘வர்த்தகப்போர்’ காரணமாக மொத்தமுள்ள அமெரிக்க மாநிலங்களில் 67%-க்கு மேற்பட்ட மாநிலங்களில் ஸ்டீல், அலுமினியம், கார், ஆகாய விமானம் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் விளக்குகின்றன.

2009-ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10% இருந்தது, தற்போது நான்கு சதவிகிதமாகக் குறைக்கபட்ட நிலையில், வர்த்தகப்போரின் விளைவாக, வருகிற ஆண்டுகளில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தால், அமெரிக்க ஃபெடரல் எடுத்து வரும் நடவடிக்கைகள் (வட்டியை உயர்த்துவது) தடைபடும். இதனால், டாலரின் மதிப்பு உடனடியாக இறக்கம் காண்பதற்கு வாய்ப்புண்டு. இவை யெல்லாம் சங்கிலித் தொடர் போல் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற வாய்ப்பிருக்கிறது.  இதன் பின்விளைவுகள்தான், தங்கத்தை அடுத்த கட்டத்துக்கு அதாவது, மேல்நோக்கி நகர்தலுக்கு முக்கிய உந்துகோலாக இருக்கும். 

எவ்வளவு உயரலாம்?

கடந்த ஐந்து வருட தங்கத்தின் சராசரி விலை (பார்க்க, முன்பக்கமுள்ள வரைபடம்) 1250 டாலர்களை ஒட்டி வர்த்தகம் நடைபெற்று வருவதையும், 2018-ம் ஆண்டின் அதிகபட்ச விலையாக 1400 டாலர்களை ஒட்டி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒட்டுமொத்த சராசரி எதிர்பார்ப்பாக 1300 முதல் 1350 டாலர்களில் வர்த்தகம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டில் சர்வதேசச் சந்தையில் ஒரு ட்ராய்  அவுன்ஸ் தங்கம் விலை அதிக பட்சமாக 1,350 டாலர்களாகவும், இந்திய சந்தையில் 24 காரட் தங்கம் அதிகபட்சமாக சவரன் ஒன்றுக்கு ரூ.26,000 என்கிற அளவிற்கும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism