டோல்கேட்: கலக்கும் தமிழகம்!
இந்தியாவிலேயே அதிக டோல்கேட் கொண்டது ராஜஸ்தான். 7,906 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை கொண்ட அந்த மாநிலத்தில் 71 டோல்கேட்கள் உள்ளன. 5,381 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன. 15,437 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ்ட்ராவில் 44 டோல்கேட்களே உள்ளன. கேரளாவில் 1,782 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், மூன்று டோல்கேட்களே உள்ளன!

பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ஹெச்.டி.எஃப்.சி!
ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் பங்குகள் கடந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டு, முதல் நாளிலேயே 65% விலை உயர்ந்தது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் உயரதிகாரி கள் பலரும் கோடீஸ்வரர் களாகி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் எம்.டி மில்ந்த் பார்வே-வுக்கு இந்த நிறுவனத்தின் 10.40 லட்சம் பங்குகள் ஒதுக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.188.76 கோடி. இந்த நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயினுக்கு 8.88 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.161 கோடி. இவர்களைத் தவிர, எட்டுப் பேர் இப்போது பல கோடிகளுக்குச் சொந்தக் காரர்களாக மாறியிருக் கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மியூச்சுவல் ஃபண்ட்: சிறு முதலீட்டாளர்களின் முதலீடு ரூ.10 லட்சம் கோடி!
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு, 2018 ஜூலையில் ரூ.23.05 லட்சம் கோடியாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு ரூ.10.09 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் நிர்வகிக்கும் தொகையும் ரூ.10.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது.