Published:Updated:

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

கேள்வி - பதில்

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

கேள்வி - பதில்

Published:Updated:
கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

என் வீட்டைச் சீரமைக்கக் கூடுதலாக வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறேன். எனது பிரதான வீட்டுக் கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் வரிக்கழிவு பெறுவதுடன், கூடுதலாக இந்தக் கடனுக்காகச் செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.30,000 வரிக் கழிவு பெற முடியுமா?

ஆனந்த குமார், காரைக்குடி

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிக் கழிவு ரூ.2 லட்சம் என்பதில் அனைத்து விதமான வீட்டுக் கடன்களின் வட்டியும் அடங்கும். எனவே, வீட்டைச் சீரமைப்ப தற்காகக் கூடுதலாக வாங்கப்படும் வீட்டுக் கடனுக்குத் தனிப்பட்ட வரிக் கழிவு  கிடையாது.’’

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

சென்னையின் முக்கியப் பகுதியில் எனக்குப் பழைய வீடு ஒன்று இருக்கிறது. ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அந்த இடத்தை வாங்கிக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக, அவர்கள்  கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் தருவதாகவும் கூறுகிறார்கள்? இந்த ஒப்பந்தத்தை ஏற்கலாமா?

திருமுருகன், சென்னை

த.ஜீவா, வழக்கறிஞர்

‘‘உங்களது இடத்தை வாங்கக்கூடிய பில்டர் நம்பிக்கைக்குரியவர்தானா என்பதை அவரது முந்தைய ப்ராஜெக்டுகள் குறித்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரவும். அதில் திருப்தி ஏற்பட்டால் அடுத்ததாக, நீங்கள் பில்டருடன் இணைந்து ஜாயின்ட் டெவலப்மென்ட் அக்ரிமென்ட் செய்துகொள்ள வேண்டும். கட்டட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் பிரிக்கப்படாத பங்கு (UDS) பகுதியின் பாகப்பிரிவு குறித்துக் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, கட்டுமான ஒப்பந்தங்களைப் போடுவதில் அனுபவமிக்க வழக்கறிஞர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுச் செயல்படுவது நல்லது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

என் வயது 45. ரூ.10 லட்சத்தை டிவிடெண்ட் வழங்கும் நான்கு ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளேன். இவை லாபகரமாக இல்லை. இந்த ஃபண்டுகளிலிருந்து விலகி,  நீண்ட காலத்துக்கு ஹைபிரிட்   மியூச்சுவல் ஃபண்டுகளில் குரோத் ஆப்ஷனில்  முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆலோசனை கூறவும்.

வாசுதேவன், பொள்ளாச்சி

என்.விஜய்குமார், நிதி ஆலோசகர்

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, டிவிடெண்டை வைத்து, தேர்வு செய்வது தவறான முறையாகும். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் என்ன வருமானம் தந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஹைபிரிட் ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனிலிருந்து குரோத் ஆப்ஷனுக்கு மாறுவது சரியான தீர்வாக இருக்காது.

உங்களுடைய அஸெட் அலோகேஷனை (முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து மேற்கொள்வது) திட்டமிட்டுச் செயல் படுத்துங்கள். நீண்ட கால முதலீட்டுக் காலத்தைச் சரியாகத் தேர்வுசெய்யுங்கள்.

சரியான அஸெட் அலோகேஷன், நிதித் திட்டமிடல், பன்முகத்தன்மை வாய்ந்த போர்ட்ஃபோலியோ போன்றவற்றால் மட்டுமே முதலீட்டை லாபகரமாக மாற்ற முடியுமேயன்றி, டிவிடெண்ட் ஆப்ஷனிலிருந்து குரோத் ஆப்ஷனுக்கு மாற்றுவதால், எந்த மாற்றமும் வந்துவிடாது.’’

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

சமீபத்தில் இறந்த எனது அம்மாவின் ஆயுள் காப்பீட்டு பாலிசியிருந்து ரூ.10 லட்சம்  கிடைத்தது. இதற்கு வரி விதிக்கப்படுமா, வரிக் கணக்கு தாக்கலின்போது இதைத் தெரிவிக்க வேண்டுமா?

சக்திவேல், ராஜபாளையம்

எஸ்.பாலாஜி, ஆடிட்டர்

‘‘வருமான வரி சட்டப் பிரிவு 10(10D)-யின்படி, இறப்புக்குப்பிறகு ஆயுள் காப்பீட்டு பாலிசி யிலிருந்து கிடைக்கும்  இழப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கு வருமான வரி கிடையாது. வரிக் கணக்குத் தாக்கலின்போது கட்டாயம் இதைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தொகையை வேறு எதற்கேனும் பயன்படுத்தும் போது இந்த வருமானம் குறித்த கேள்வி எழாது.’’

நான் ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து விலகி, பி.எஃப் தொகையை கடந்த 2017-18-ம் ஆண்டு எடுத்துவிட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பணியாற்றிய நிலையில், பி.எஃப் தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்த வேண்டுமா,  வரிக் கணக்கு தாக்கலில் இதைத் தெரிவிக்க வேண்டுமா?


ராமகிருஷ்ணன், திருச்சி

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய நிலையில், பி.எஃப் தொகையை எடுத்துள்ளதால், அந்தத் தொகை சம்பளம் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, வரியைக் கட்ட வேண்டும். பி.எஃப் தொகைக்குக் கிடைக்கும் வட்டி, இதர வருமான மாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அதற்கும் தனியாக வரி செலுத்த வேண்டும்.’’

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

என்னுடைய பரம்பரை வீட்டில் சில  புதுப்பிக்கும் பணிகளைச் செய்தேன். அப்படியே என்னுடைய வருமானத்தைக் கொண்டு அதன் மாடியில் இரண்டு வீடுகளைக் கட்டியுள்ளேன். இந்த வீடுகள் என்னுடைய பரம்பரைச் சொத்தில் சேருமா அல்லது என்னுடைய சொத்தாகக் கருதப்படுமா?

திருச்செல்வன், கோயமுத்தூர்

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

‘‘தரைத்தள வீடும், வீடு அமைந்துள்ள நிலப்பகுதியும் பரம்பரைச் சொத்தில் தான் வருகிறது. எனவே, வீட்டின் மேலே மாடிகள் உங்களால் எழுப்பப் பட்டாலும்கூட அது பரம்பரைச் சொத்தாகவே கருதப்படும்.’’

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் மாதந்தோறும் பணம் எடுத்து வருகிறேன். இதில் எப்படி வருமானத்தைக்  கணக்கிடுவது?

நாகேந்திரன், திண்டிவனம்

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர்

‘‘கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களை  எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருந்து விற்று லாபம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து வருமான வரி மாறுபடும். மூன்று வருடங்களுக்குக் குறைவாக யூனிட்களை வைத்திருந்து விற்றால், அது குறுகிய கால முதலீடாகக் கணக்கில் கொள்ளப்படும். நமது மற்ற வருமானத்துடன்  சேர்க்கப்பட்டு, அடிப்படை  வருமான வரி வரம்புக்கேற்ப  வரி விதிக்கப்படும். இதுவே யூனிட்களை மூன்றாண்டுகளுக்கு மேலாக வைத்திருந்து விற்றால், அது நீண்ட கால முதலீடாகக் கணக்கிடப்பட்டு, பணவீக்க சரிக் கட்டலுக்குப் பின் 20% வரி கட்டினால் போதும்.’’

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

நான் தற்போது உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறேன். இதுகுறித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டுமா?

ரத்னகுமார், தென்காசி

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘ஏற்கெனவே எடுத்துள்ள பாலிசியில் கவரேஜ் தொகையை அதிகரிக்கும்பட்சத்தில், இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். பாலிசித் தொகையில் எந்த மாற்றமும் இல்லாமல் பாலிசியைப் புதுப்பிக்கும்போது இந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டிய தேவையில்லை. புதிதாக பாலிசி எடுக்கும்போது, இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும்.’’ 

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

படம்: வீ.நாகமணி

கூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism