இண்டெக்ஸ்
நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் இன்னமும் வந்துகொண்டிருக் கின்றன. இருந்தாலும், பங்குச் சந்தையின் கவனம் முழுவதும் மிட்கேப் பங்குகள் பக்கம் திரும்பியிருக்கிறது. சில திருப்திகர மான முடிவுகள் வெளியானபின், காலாண்டு முடிவுகள் குறித்துக் கலவையான கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இது, இந்த மாதத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை உருவாக்கக் கூடும். மிட்கேப் குறியீடுகள் கீழிறங்கியுள்ள நிலையில், தரமான மிட்கேப் பங்குகள் சிலவற்றை வாங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்தமான மே மற்றும் ஜூன் மாதங்களுக்குப்பிறகு, சில பங்குகளின் சிறப்பான செயல்பாட்டுக்குப்பின் ஏறக்குறைய 800 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலிருந்த உயர்வுக்குப்பின்னர் சில வலுவான நிலையைக் காணும் என நாம் எதிர்பார்க்கலாம்.
நிஃப்டியின் இன்ட்ரா டே சார்ட்டுகள் வலுவற்ற நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்த்துகின்றன. இந்த வலுவற்ற நிலை, நிஃப்டியை வாங்குவதற்கான ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்கக்கூடும். அதாவது, 11300 புள்ளிகளுக்கு இறங்கக்கூடும். தொடர்ந்து ஓர் ஏற்றமான போக்கு வரும் வரை, குறிப்பிட்ட பங்குகளை வாங்கி, விற்கும் போக்கு நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஏனெனில், இன்னமும் காலாண்டு முடிவுகள் வெளியாகி கொண்டிருப்பதால், அவை நமக்கு இருபக்கப் போக்குக்கான வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேங்க் நிஃப்டி மேலே சென்றபின், எஸ்.பி.ஐ காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்ததால், வலுவான விற்பனையை எதிர்கொண்டது. முன்னணி நிறுவனப் பங்குகளிடமிருந்து உருவான கலவையான விலைப்போக்குகளுடன், பேங்க் நிஃப்டி சுமுகமான போக்கைக் கொண்டிருக்கவில்லை. அதன் நகர்வு 28000 -க்குக் கீழ் சென்றதால், சில கடுமையான சரிவுகளும் ஏற்பட்டன.
பேங்க் நிஃப்டியில் நாம் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். வரும் வாரத்தில் பேங்க் நிஃப்டி மேலே செல்வதற்கான இடத்தைக் கொண்டிருப்பதுடன், 28500 புள்ளிகளை நோக்கிச் செல்வதற்கான வலுவை யும் கொண்டுள்ளது. இன்னும் சில ஏற்றமான போக்கை உருவாக்கக்கூடிய மாற்றத்தைக் குறியீடுகளில் எதிர்பார்க்கலாம்.
நிஃப்டியில், ஜூன் மாதத் தொடக்கத்தி லிருந்தே நாம் மிகவும் எச்சரிக்கையுடன் வாங்கும் முறையிலேயே இருந்தோம். லாங்க் பொஷிசன், உரிய முறையில் மாற்றியமைக்கப் பட்ட ஸ்டாப்லாஸ்களுடன் உருவாக்கப்பட்டு இருந்தால், அதனைத் தொடரலாம். தற்போதைக்கு அந்த ஸ்டாப்லாஸ்களை 11170 / 27300 என்ற நிலைக்கு நம்மால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
சென்டிமென்டுகள் சோதனைக்கு உட்படும் நிலையில் இருக்கின்றன என்பதுடன், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சில புறத்தூண்டல்களையும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலையில், குறிப்பிட்ட சில பங்குகளை வாங்கி விற்கும் போக்கு அணுகு முறையாகத்தான் இருக்கிறது என்பதுடன், அடுத்த சில தினங்களுக்கான செயல்பாடு களையும் நமக்குத் தொடர்ந்து வழங்குகிறது.

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (TEJASNET)
தற்போதைய விலை: ரூ.283.50
வாங்கலாம்
தேஜாஸ் நெட்வொர்க்ஸ், இணைய நெட்வொர்க் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பிராட்பாண்ட் நெட்வொர்க் விரிவாக்கத்திற்குப்பிறகு இந்த நிறுவனம், வலுவான வளர்ச்சியைத் தொட்டு உள்ளது. இதன் பங்குகள் தற்போது நிலையான இறக்கத்தில் இருந்தாலும், தினசரி சார்ட்டில் ஒரு டபுள் பாட்டம் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. இதன்படி, பங்கு விலை இறக்கம் முடிந்து நன்றாக ஏறக்கூடும். கடந்த சில நாள்களாக பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பங்கினைத் தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.270-க்கு கீழே வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.325.
இன்டெலக்ட் டிசைன் அரெனா (INTELLECT)
தற்போதைய விலை: ரூ.245.50
வாங்கலாம்
ஐ.டி நிறுவனமான இன்டெலக்ட் டிசைன், உலகின் முதலாவது ஒருங்கிணைந்த வர்த்தக நிதி மற்றும் விநியோகச் சங்கிலி நிதித் தளத்தை நடைமுறைப்படுத்த ஓர் ஆசிய வங்கியுடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜூலை 2017-ம் ஆண்டின் மத்தியில், இந்த நிறுவனப் பங்கு விலை ஏற்றம் கண்டது. அதன் பிறகு இறக்கம் கண்டது. மேலும், திரும்பத் திரும்ப இறங்கி ஏறுவதால் வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான செய்திகள், நடுத்தர அளவிலான ஐ.டி பங்குகளின் விலையில் ஏற்றத்தைக் காட்டியுள்ளது. இதன் காரணமான விலைகளில் வலுவான பிரேக் அவுட்டைக் காணமுடிகிறது. மொமென்டம் இண்டிகேட்டர்கள் வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பதையே காட்டுகின்றன. தற்போதைய விலையில் மற்றும் ரூ.220-க்கு இறங்கும் வரை முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.200-க்குக் கீழே வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.285.

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் (CAPF)
தற்போதைய விலை: ரூ.585.65
வாங்கலாம்
இந்த நிறுவனப் பங்கு, 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சில நிலையான இறக்கத்தைக் கண்டது. தற்போது தெளிவானதொரு மீட்சியைக் கண்டுள்ளது. சமீபத்திய காலாண்டு நிதிநிலை முடிவுகள் பங்கு விலையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நிரூபித்துள்ளது. தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக மேல் நோக்கி உயர்ந்து வரைபடத்தில் ஈர்ப்புடன் காணப்படுகிறது.
தற்போது குறைந்த அளவிலேயே இந்தப் பங்குகளுக்கான தேவை தொடர்கிறது. சராசரி அளவை விட்டு மேலே ஏறும்போது, விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும். தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.550-க்கும் கீழே வைத்துக்கொள்ளவும். இன்னும் மூன்று மாதங்களில் ரூ.665-க்கு உயரக் கூடும்.
தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
பக்கத்திற்கு செல்ல படங்களை க்ளிக் செய்யவும்

