Published:Updated:

பிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்!

பிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி

பிட்காயின் விலை உச்சத்தில் இருந்த போது, அதில் பெரும் பணத்தை முதலீடு செய்த பல வெளிநாட்டவர்கள் இன்று பெரும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். நாட்டிங்ஹாமில் இருக்கும் பீட் ராபர்ட்ஸ் பிட்காயின் விலை உச்சத்தில் இருந்தபோது 23,000 டாலர் போட்டார். இப்போது அதன் மதிப்பு வெறும் 4,000 டாலர்கள் மட்டுமே. சியோலில் இருக்கும் 45 வயது ஆசிரியர் 90,000 டாலரை பிட்காயினில் போட்டார். இப்போது அது வெறும் 10 ஆயிரம் டாலர் களாகக் குறைந்திருக்கிறது.

வெளிநாட்டில் மட்டுமல்ல, நம்மூரிலும் பலர் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் கள். கோவையைச் சேர்ந்த  தொழில்முனைவர் ஒருவர், கடந்த டிசம்பரில் ஒரு பிட்காயினை வாங்கத் தந்த தொகை ரூ.10 லட்சம். இந்த ரூ.10 லட்சம் குறுகிய காலத்திலேயே ரூ.20 லட்சமாக மாறும் என்று சிலர் ஆசை காட்டியதால், அவர் பணத்தைப் போட்டார். ஆனால், இன்றைக்கு 55% குறைந்து ரூ.4.5 லட்சமாக இருக்கிறது.

பிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்!

நம் நாட்டைப் பொறுத்தவரை, பிட்காயின் பரிவர்த்தனைக்கு அரசின் அங்கீகாரம் எப்போதும் கிடைத்ததில்லை. அரசு அனுமதி இல்லாமலே அது நடந்ததால், பிட்காயினில் பணத்தைப் போட்டு இழந்தவர்கள் எத்தனை பேர், அவர்கள் இழந்த தொகை எவ்வளவு என்பது குறித்த புள்ளி விவரங்கள் வெளிவராமலே இருக்கிறது. இதில் நஷ்டமடைந்தவர்கள் எங்கும் முறையிட முடியாத நிலையும் இருக்கிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.12.45 லட்சத்தி லிருந்து ரூ.4.27 லட்சமாகக் குறைந்து, இப்போது ரூ.4.50 லட்சம் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. பிட்காயினின் விலை இனி குறையாது; இப்போது பணத்தைப் போட்டால், நல்ல லாபம் பார்க்கலாம் எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். இதுபோன்ற ஆசை வார்த்தைகளில் சிக்கி, பணத்தைப் போடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்!

- ஆகாஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism