மீண்டும் நிதி அமைச்சரானார் அருண் ஜெட்லி!

சிறுநீரகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுத்துக்கொண்டபின், மீண்டும் நிதி அமைச்சராகி இருக்கிறார் அருண் ஜெட்லி. மோடி அரசில் ஆரம்பம் முதலே நிதி அமைச்சர் பதவியை வகித்து வந்தார் ஜெட்லி. அவரை பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக எதிர்த்தபோதிலும், அவரிடமிருந்து அந்தப் பதவியை பா.ஜ.க-வினால் பறிக்க முடியவில்லை. அருண் ஜெட்லி மருத்துவச் சிகிச்சைக்காக சென்றபின், ப்யூஷ் கோயல் தற்காலிக நிதி அமைச்சரானாலும், அவரால் அந்தத் துறையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவர முடியவில்லை. உடல்நலம் தேறி வந்திருக்கும் அருண் ஜெட்லி இனி நாட்டின் நிதி நலத்தில் கவனம் செலுத்தட்டும்!

சாந்தா கோச்சாருக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ-வாக இருந்தபோது, தனது கணவரின் பிசினஸ் கூட்டாளியான வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் தந்தது பெரிய பிரச்னையாகி, தற்போது பல நிறுவனங்களின் விசாரணைக்குள்ளாகி இருக்கிறார் சாந்தா கோச்சார். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ பதவியை இழந்துள்ள நிலையில், அவர் கட்டாய விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவரை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பங்குச் சந்தை முதலீட்டாளர் நலன் தொடர்பாகச் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிதுள்ளன. சாந்தா மீது வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், இப்படியொரு நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது!

வாராக் கடனை விற்கத் தயாராகும் வங்கிகள்!

தங்கள் வசமுள்ள வாராக் கடனைத் தனியார் நிறுவனங் களுக்கு விற்க சில பொதுத் துறை வங்கிகள் முடிவெடுத்துள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா ரூ.5,558 கோடிக்கும், எஸ்.பி.ஐ ரூ.383 கோடிக்கும், அலகாபாத் பேங்க் ரூ.710 கோடிக்கும், தேனா பேங்க் ரூ.658 கோடிக் கும் வாராக் கடன்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப் போகின்றன. இந்தக் கடனை இனிமேல் வசூலிக்கவே முடியாது என்கிற நோக்கில்தான் இந்த முடிவினை எடுத்துள்ளன பொதுத்துறை வங்கிகள்!

செக்கினை மக்கள் மறந்தது ஏனோ?

செக் மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்து வருகிறது. வேகமான பணப் பரிமாற்றத்தில் தற்போது முதலிடத்தில் இருக்கிறது ஆர்.டி.ஜி.எஸ்-தான். இந்த ஆண்டில் இதுவரை நடந்த பணப் பரிமாற்றத்தில் 57.75% இந்த ஆர்.டி.ஜி.எஸ் மூலமே நடந்துள்ளது. ஆனால், 3.06% என்கிற அளவுக்கு மட்டுமே செக் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும், ஆப்-கள் மூலமாகவும் பலரும் பணத்தைப் பரிமாற்றம் செய்வதால், செக் மூலமான பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

தற்போது ரூ.24 லட்சம் கோடியாக இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் மொத்த சொத்து மதிப்பு இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று சொல்லியிருக் கிறார் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக்!

கோடிகளைக் குவித்த டிம் குக்!

கடந்த சில மாதங்களாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆப்பிள் உள்பட பல நிறுவனங்களில் பங்குகள் நல்ல விலையேற்றம் கண்டன. இந்த ஏற்றத்தின் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வுக்கு 120 மில்லியன் டாலர் மதிப்புக்குப் பங்குகள் கிடைத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தபோது, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 350 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது; இப்போது ஒரு லட்சம் கோடி டாலர் என்கிற அளவுக்கு வளர்த்தெடுத்த பெருமை டிம் குக்கையே சாரும். ஆனால், டிம் குக்கோ, ‘‘ஆப்பிள் இன்னும் பெரிய அளவில் வளர்வதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு’’ என்று சொல்லியிருக்கிறார்!

இந்தியாவை விட்டு வெளியேறிய இ-பே

அமெரிக்காவின் மிகப் பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான இ-பே, இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறது. இ-பே நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் 500 மில்லியன் டாலர் அளவுக்கு சில ஆண்டுகளுக்குமுன்பு முதலீடு செய்திருந்தது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்குமுன்பு வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து, இ-பே நிறுவனமும் தனது முதலீட்டை 1500 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறது.

ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டிய ரிலையன்ஸ்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல்முறையாக ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுவே முதல் முறை. ரிலையன்ஸுக்கு அடுத்தபடியாக ரூ.7.79 லட்சம் கோடியைத் தொட்டு, இரண்டாவது இடத்தில் இருக்கிறது டி.சி.எஸ்!

இந்தியா முழுக்கக் கட்டி முடிக்கப்பட்டபின் விற்பனை செய்யப்படாமல் பல லட்சம் வீடுகள் இருக்கின்றன. மும்பையில் 2 லட்சம், புனேயில் 95 ஆயிரம், பெங்களூருவில் 39 ஆயிரம், சென்னையில் 10 ஆயிரம் வீடுகள் காலியாக உள்ளனவாம்!

நடிகர்களில் அதிகம் சம்பாதிக்கும் அக்ஷய்!

உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஏழாவது இடத்தில் இருக்கிறார் இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்த ஆண்டில் இதுவரை 40.5 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார் அக்ஷய்.
இந்தி நடிகர்களில் அக்ஷய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சல்மான் கான். இவர், 38.5 மில்லியன் டாலரைச் சம்பாதித்து, ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் சொல்லியிருக்கிறது.