புத்தகத்தின் பெயர்: தி சிக்ஸ் ஃபண்டமென்டல் ஆஃப் சக்சஸ் (The Six Fundamentals of Success: The Rules for Getting It Right for Yourself and Your Organization)

ஆசிரியர்: ஸ்ட்ராட் ஆர் லீவின் (Stuart Levine)

பதிப்பகம்: Crown Business

வெற்றிக்கான ரகசியங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் நம் எல்லோருக்குமே உண்டு. இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் ‘தி சிக்ஸ் ஃபண்டமென்டல்ஸ் ஆஃப் சக்சஸ்’ என்னும் புத்தகம், வெற்றியைத் தேடித்தரும் ஆறு அடிப்படை வழிகளை உங்களுக்குச் சொல்லித் தரும் புத்தகம் ஆகும்.

‘‘தனிநபரானாலும் சரி, நிறுவனமானாலும் சரி எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் இந்தக் காலத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ட்ராட் ஆர் லீவின், தன்னுடைய அனுபவத்தில் நூற்றுக்கும் மேலான வெற்றிக்கான விதிகளைக் கண்டறிந்து அவற்றை ஆறு அடிப்படை விதி களாகப் பிரித்துத் தந்திருக்கிறார். அந்த விதிகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

* வெற்றிக்கான முதல் விதி

‘‘நீங்கள் பணியிடத்தில் மதிப்புக் கூட்டும் வேலையைச் செய்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து உறுதிசெய்துகொள்ளுங்கள். பணியிடத்தில் மதிப்புக் கூட்டும் வேலையைச் செய்வது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும் நிறுவனத்தில் லாபத்துக்குப் பஞ்சம் இருக்காது. அப்படி மதிப்புக் கூட்டுதல் பணியை நீங்கள் செய்யும்போது உங்கள் மதிப்பும் உயரும்.

பணியிடத்தில் ஒரு முதலாளி சிந்திப்பதைப் போல் சிந்தித்துச் செயல்படுங்கள். குறைந்தபட்சம் மதிப்புக் கூட்டும் ஒரு முக்கிய வேலையை ஒரு நாளில் முடியுங்கள். கம்பெனியின் பணம் வீணாவதைத் தடுக்க முயலுங்கள். இதுபோன்ற வேலைகளைச் செய்யும்போது கம்பெனியும் வளரும். நீங்களும் வளர்க்கப்படுவீர்கள்.

உங்களுடைய பாஸிற்கு வருமானம் அதிகரிப்பதைவிட மகிழ்ச்சியான விஷயமென்று ஒன்றும் இருக்கப்போவதில்லை. அதனால் இதனைச் செய்வதன் மூலமே நீங்கள் உங்களை கம்பெனிக்குள் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

‘‘அட, நானெல்லாம் ரொம்பக் கடைநிலை ஊழியன் சார்” என்ற சாக்குப்போக்கெல்லாம் சொல்லா தீர்கள். எல்லா நிலைகளிலுமே கம்பெனியின் லாபத்தை அதிகரிக்கச் செய்வதற்கான வாய்ப்புகளும் வழிகளும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக, உங்களுடைய நிறுவனம் எதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நிறுவனம் எப்படிச் சம்பாதிக்கிறது, எங்கே செலவு செய்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மதிப்புக் கூட்டு தலுக்கான காரியங்களில் இடைவிடாது கவனம் செலுத்துங் கள். வாடிக்கையாளரின்மீது முழு அன்பைச் செலுத்துங்கள். உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவும் அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே நீங்கள் கம்பெனிக்கு அதன் வருமானத்தை உயர்த்த உதவும் முக்கியக் காரணியாக இருக்கும். எந்த நிலையில் பணியில் இருந்தா லும் முன்னேற்றம் தரும் புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்த ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

* வெற்றிக்கான இரண்டாவது விதி

‘‘உங்களுக்கு மேலும்கீழும் பணி புரிபவர்களிடமும், நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் நபர்களிடமும் தொடர்ந்து தொடர்பில் (கம்யூனிகேஷன்) இருங்கள். எல்லோருடனும் நல்லதொரு தொடர்பு வைத்துக் கொள்வது பல விஷயங்களை உங்களுக்கும், அவர்களுக்கும் தெளிவாக விளக்க உதவும்.

கம்யூனிகேஷன் என்றதும் எல்லோரும் ஒரு இ-மெயில் அல்லது அலுவலக நோட்டீஸ் என்று நினைத்துக்கொள்கின்றனர். நேரடித் தொடர்பு என்பதே கூட்டாக வேலை செய்யும்போது ஒத்துழைப்பைத் தரவல்லது. ஏனென்றால், நாம் மெயிலில் அனுப்பிய விஷயத்தை வேறுவித மாக மற்றவர்கள் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளும்போது அதன் விளைவு கள் மிகமிக மோசமாகவே இருக்கும். நல்லதொரு தொடர்பு (கம்ப்யூனிகேஷன்) என்பது அடுத்த வர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டபின், செய்யப் படும் ஒன்றாகும். இது பல மாய ஜாலங்களை உருவாக்கவல்லது’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

நன்றி சொல்வதில் தொடங்கி, இ-மெயிலுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் எழுதுவது, நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் உடனிருப்பவர் களுடன் பகிர்ந்துகொள்வது போன்றவற்றின் அவசியத்தை விரிவாக விளக்கும் ஆசிரியர், மிக முக்கியமாக, கோபத்தையும் உருப் படியான வழியில் வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.

* வெற்றிக்கான மூன்றாவது விதி

மீட்டிங்குகளை மிகமிகக் குறிக்கோள் சார்ந்ததாக நடத்து வது / நடந்துகொள்வது, தவறு களில் இருந்து கற்றுக்கொள்வது, ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போது ஆரம்பத்திலிருந்தே யார் எதற்குப் பொறுப்பு என்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுவது, யதார்த்தத்தைத் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது, உடன் பணிபுரிப வர்களைச் சொந்தமாகச் செயல்பட விடுவது, மீட்டிங்குகள் எனர்ஜியை அதிகரிக்க உதவுமாறு பார்த்துக்கொள்வது, கம்பெனி பணத்தைச் சொந்தப் பணம் போல் நினைத்துப் பாதுகாப்பது, கம்பெனிக்காக எடுக்கும் ரிஸ்க்குகளை நன்றாக மேலாண்மை செய்வது போன்ற பல விஷயங்களை அடுக்குகிறார் ஆசிரியர்.

* வெற்றிக்கான நான்காவது விதி

‘‘நீங்கள் செய்யும் வேலையும் நேர்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவு வதுடன், உங்களை நீங்களே மதிப்பீடு செய்யும் போது பெருமிதமடையும்படியாகவும் இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

* வெற்றிக்கான ஐந்தாவது விதி

‘‘உறவுகளை வளர்த்தெடுப்பதில் நீங்கள் உறவு முறை ரேடார் ஒன்றைக் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நமக்கு உதவியாக இருப்பவர்கள், நாளைக்கு இருக்கக்கூடியவர்கள் எனப் பல்வேறு விதமான மனிதர்களைப் பிரித் தெடுத்து அவர்களுக்குத் தேவையான பணி களையும் உதவியையும் உங்களால் செய்ய முடியும். பிறந்த நாள், திருமணநாள், மற்றவர்களின் குழந்தைகளின் பெயர்கள் போன்றவற்றை மறந்துவிடாமல் இருங்கள். முக்கியமான தருணங் களில் ஸ்பெஷலான விஷயங் களைச் செய்து அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நபராக இருக்க முயலுங்கள். உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் இப்படி உறவுகளைப் பேணிக் காத்தல் என்பது மிகமிக அவசியமான ஒன்றாகும். அதுவே மனநிறைவுடன் பணியாற்றும் பணியாளர்களை உங்களுக்குத் தரும். பணியாளர் மனநிறைவே வாடிக்கையாளர் மனநிறைவுடன் இருக்க உதவும். வாடிக்கையாளர் மனநிறைவு என்பதே நிறுவனத்திற்கு லாபத்தைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

* வெற்றிக்கான ஆறாவது விதி

‘‘அடுத்தவர்களின் எண்ணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். லாபமே பிரதானம் என்கிற நோக்கத்தில் செய்யப்படும் தொழிலில் அடுத்தவர்களைப் புரிந்துகொள்ளுதல் சாத்தியமா என்பீர்கள். அவசரமும், இயந்திரகதியும் உங்க ளுடைய உற்பத்தித்திறனைக் குறைக்குமே தவிர அதிகரிக்க உதவாது. தொழிலைத் தாண்டிய பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

புரிந்துகொள்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்க வேண்டும். தனிமனிதரானாலும் சரி, ஒட்டுமொத்த வெளியுலகமானாலும் சரி, தொடர்ந்து அவை மாறிக்கொண்டே இருக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. எனவே, எனக்கு இவரைப் பற்றி, இவர்களைப் பற்றி, உலகத்தைப் பற்றிப் புரிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்வது தவறு என்று சொல்லும் ஆசிரியர், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்துகொள்ளுங்கள். அதேசமயம், எண்ணியவை எல்லாம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் சந்திக்கும் தோல்விகளே நம்மை வைரம் பாயச் செய்யவல்லது என்பதையும் நினைவில் வையுங்கள் என்கிறார். அகம்பாவம், அகங்காரம் என்ற இரண்டையும் விட் டொழியுங்கள். ஏனென் றால், இவை இரண்டும் நல்லுறவை மொத்தமாகக் கெடுக்கும் காரணிகள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களாலும் சில விஷயங்களைச் செய்யமுடி யாமல் போகும். அப்போது அதை ஒப்புக்கொள்ளத் தவறாதீர்கள்.

தொழில் என்பது எப்போதும் குழப்பமாகவே இருக்கும் ஒரு விஷயம். அதனால் பல விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது கூட நிதானமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். கவனத்தைத் திசை திருப்பக்கூடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற அவர்களை மறத்தல் என்ற கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், யாராலும் உங்க ளுடைய வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதில் உறுதியாக இருங்கள் என்பதைச் சொல்லி முடிக்கிறார்.

வெற்றிக்கான ஆறு வகை நடைமுறைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை வெற்றிபெற விரும்பும் அனைவரும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்