Published:Updated:

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

Published:Updated:
முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!
முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

சிப்லா

இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சிப்லா லிமிடெட், இந்த நிதி  ஆண்டின் முதலாம் காலாண்டில் 10%  கூடுதல் லாபத்தை ஈட்டியுள்ளது.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 10.4% லாபம் உயர்ந்து, ரூ.451 கோடியை ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையானது 12% உயர்ந்து ரூ.3,846 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனத்திற்கான வருமானம் 22% உயர்ந்து ரூ.1,544 கோடியாக உள்ளது. வட அமெரிக்காவில் இந்த நிறுவனம் 4% வளர்ச்சியை எட்டியுள்ளது.  

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 26% வருவாய் அதிகரித்து ரூ.71,696.7 கோடி ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.57,125.8 கோடியை இந்த நிறுவனம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் எபிட்டா அளவானது 216% உயர்ந்து, ரூ.3,875.2 கோடியாக உள்ளது.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.1,225 கோடியாக இருந்தது. எபிட்டா மார்ஜின் 5.4% உயர்ந்து. 326 அடிப்படைப் புள்ளிகளாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 208% உயர்ந்து ரூ.744.6 கோடியிலிருந்து ரூ.2,293.3 கோடியாகியுள்ளது. சராசரி மொத்த ரீஃபைனிங் மார்ஜின் (ஜி.ஆர்.எம்) அளவானது 7.49 டாலர்/பி.பி.எல்-ஆக உள்ளது. சந்தை விற்பனை கடந்த ஆண்டைவிட 9.3% உயர்ந்து 10.97 எம்.எம்.டி-ஆக உள்ளது.    

அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் (APSEZ)

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன்(APSEZ) நிறுவனம் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த லாபத்தில் 9%  இழப்பைச் சந்தித்து ரூ.697.40 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.767.52 கோடியை ஈட்டியிருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயானது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,959.63 கோடியாக இருந்து ரூ.2,703.86 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்தச் செலவு கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,867.43 கோடியாக இருந்து தற்போது ரூ.1,781.46 கோடியாகக் குறைக்கப் பட்டுள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

கடந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 19.4%  அதிகரித்து, ரூ.258 கோடியாக உள்ளது. வருவாய் 12.4%  அதிகரித்து, ரூ.2,544 கோடியாக உள்ளது. எபிட்டா அளவானது 23.3%  அதிகரித்து, ரூ.389 கோடியாக உள்ளது. ஆபரேட்டிங் மார்ஜின் 80 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து, 15.3 சதவிகிதமாக உள்ளது.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பு ரூ.2 ஆக உள்ளது. இந்த ஆண்டில் இந்த நிறுவனமானது தனது நூற்றாண்டில் நுழைந்துள்ள சூழலில் மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பூகோளச்சூழல் காரண மாக அங்கெல்லாம் விற்பனையில் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிறுவனம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் விற்பனையில் அதிக கவனம் செலுத்துவதால், குறைந்த லாபம் தரக்கூடிய பால் வர்த்தகம் போன்றவற்றில் சற்று நிதானமானபோக்கில் ஈடுபட்டு வருகிறது.

ஓ.என்.ஜி.சி

இந்த நிறுவனத்தின் முழுமையான நிகர லாபமானது 4% உயர்ந்து ரூ.6,144 கோடியாக உள்ளது. இதன் வருவாயானது 13.5% உயர்ந்து, ரூ.27,213 கோடியாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் விலையானது 13%  உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 67 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், 75 டாலராக உயர்ந்துள்ளது.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமானது 29.43% உயர்ந்து, ரூ.14,732 கோடியாக உள்ளது. எபிட்டா மார்ஜின் 47.49 சதவிகிதத்திலிருந்து 54.14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஓ.என்.ஜி.சி-யின் மற்ற வருமானம், கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில், 82.6%  சரிவடைந்து ரூ.650 கோடியாக உள்ளது . இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங் களிலிருந்து கடந்த காலாண்டில் டிவிடெண்டு களைப் பெற்றது. இந்தக் காலாண்டில் செலுத்திய வரி 49% உயர்ந்து ரூ.3,463 கோடியாக உள்ளது.

வேதாந்தா

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

வேதாந்தா நிறுவனம் தனது முதலாம் காலாண்டில் 2%  லாபத்தை ஈட்டியுள்ளது. ஆனால், தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட தால் தென் இந்தியாவில் இதன் காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் இதே காலாண்டில் ரூ.15.01 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 14.8% உயர்ந்து ரூ.222.06 பில்லியனாக உள்ளது. காப்பர் மூலம் கிடைக்கும் வருவாய் 47.4% சரிந்து ரூ.27.97 பில்லியனாக உள்ளது. 

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன்  ஒப்பிடுகையில், 46.30% குறைந்து ரூ.701.09 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் நிகர லாபம் ரூ.1,305.60 கோடியாக இருந்தது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர இழப்பு ரூ.2,188.74 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த வங்கி தனது புரவிஷன் தொகையைக் கடந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்த ரூ.2,341.93 கோடி யிலிருந்து 42.52%  அதிகரித்து ரூ.3,337.70 கோடியாக உயர்த்தி யுள்ளது. மொத்த வாராக் கடன்களின் அளவானது 6.52 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 6.77 சதவிகிதமாகவும், கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 5.03 சதவிகிதமாகவும்  இருந்தது. இதன் நிகர வாராக்கடன் அளவானது  கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 2.30 சதவிகிதமாக இருந்து, 3.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 3.40 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் நிகர வட்டி வருமானமானது 11.93% அதிகரித்து, ரூ.5,166.80 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.4,616.14 கோடியாக இருந்தது. 

டெக் மஹேந்திரா

டெக் மஹேந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 12.4% உயர்ந்து ரூ.897.9 கோடியாக உள்ளது.

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.798.6 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த வருவாய் கடந்த  நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.7,336.1 கோடியாக இருந்தது, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 12.8% உயர்ந்து ரூ.8,276.3 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 26.5% குறைந்தும், வருவாய் 2.8% அதிகரித்தும் உள்ளது.  இதன் வருவாய் 7.5% அதிகரித்து, 1.22 பில்லியன் டாலராக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு 13 வாடிக்கையாளர்கள்  புதிதாக
இணைந்துள்ளனர்.  இத்துடன் இந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 926-ஆக அதிகரித்துள்ளது.

- தெ.சு.கவுதமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism