சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. இன்னும் எந்த அளவுக்கு ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. பங்குகளின் பிஇ-யைப் (PE) பார்க்கும்போது அவற்றின் விலை அதிகம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிலையில், புதிதாக முதலீடு செய்வதற்கு ஏற்ற தருணமா?

இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் பங்கு சார்ந்த முதலீட்டில் ஒரே முறையில் முதலீடு செய்வது நல்லதல்ல என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அப்படியானால், இப்போதுள்ள நிலையில் இந்தச் சூழலில் எப்படி முதலீடு செய்வது என்பது முக்கியமான கேள்வி.

எல்லாச் சூழலிலும் முதலீடு செய்ய சந்தையில் திட்டங்கள் இருக்கவே செய்கிறது. இப்போதுள்ள சூழலில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கேட்கிறீர்களா? ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் எனப்படும் பங்கும், கடனும், கலந்த கலப்பினத் திட்டம்தான் என்பதே நான் சொல்ல விரும்பும் பதில்.

கலப்பினத் திட்டம்

இந்தக் கலப்பின வகைகளில் நான்கு வகைகள் உள்ளன. 1. கன்சர்வேட்டிவ் ஹைப்ரீட் (Conservative Hybrid), 2. ஈக்விட்டி சேவிங்ஸ் (Equity Savings Fund), 3. டைனமிக் அஸெட் அலோகேஷன் (Dynamic asset allocation), 4. அக்ரஸிவ் ஹைப்ரீட் (Aggressive Hybrid).

கன்சர்வேட்டிவ் ஹைப்ரீட்

இதில், ரிஸ்க் குறைவாக இருந்தாலும் லாபமும் குறைவாக இருக்கும். இதில் வரும் லாபத்திற்கு வரி சற்று அதிகமாக இருக்கும். வரி என்ற நோக்கில் பார்க்கும்போது, இந்தத் திட்டம் அவ்வளவு பயனளிப்பதில்லை. அதே சமயம், கடைசியாக உள்ள அக்ரஸிவ் திட்டம் பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டமாகக் கருதப்படுவதால், வரி குறைவு.

இந்தத் திட்டத்தில் பங்கு அதிகமாக உள்ளது. இதனால் ரிஸ்க் அதிகமாகிறது. லாபம் அதிகமாக இருக்க வேண்டும். அதே சமயம், ரிஸ்க் மற்றும் வரி குறைவாக இருக்க வேண்டும் என்று பார்த்தால், அதற்கு நம் கண்முன் முதலில் வருவது ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டமே.

ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டம்

இதுவும் ஒரு கலப்பினத் திட்டமே. இந்த திட்டங்களில் மூன்று வகையான முதலீட்டு முறைகளில் முதலீடு செய்யப்படுகிறது. முதல் வகையில் நேரடியாக பங்குகளில் சுமார் 35%, கடன் பத்திரங்களில் 33%, டெரிவேட்டிவ் (Derivative arbitrage) என்கிற யூக வணிக வகையில் 32% என முதலீடு செய்யப்படுகிறது.

இதில் மூன்றில் ஒருபகுதி, பங்குகளில் முதலீடு செய்வதால், சற்று லாபம் கூட வர வாய்ப்புள்ளது. அதேசமயம், டெரிவேட்டிவ்ஸ் முதலீடு பங்கு கள் முதலீடு என்ற வகையில் வருவதால், இதற்கு வரி குறைவு.

டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஜ்

இரண்டு சந்தைகளில் வர்த்தக மாகும் பங்குகளின் விலை சற்றுக் கூடி, குறைந்திருக்கும். இந்த இரு சந்தைகளில் விற்கப்படும் பங்கு களில் எதிர்மறையான முதலீடு செய்யப்படும்போது அதாவது, ஒன்றில் வாங்கி, மற்றொன்றில் விற்பது போன்ற சந்தை பரிவர்த் தனையில் லாப வாய்ப்புகள் நடைமுறையில் உள்ளது. அந்த நடைமுறையைப் பயன்படுத்துவது டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஜ் என்பதாகும். எதிர்மறையாக முதலீடு செய்வதால், ரிஸ்க் மிகவும் குறைவாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு பங்குகளைச் சார்ந்தே இருப்பதால், இது பங்கு முதலீடாகக் கொள்ளப்படும். பங்கில் முதலீடு, ஆனால் பங்கிற்கான ரிஸ்க் குறைவு என்பதே இதன் சிறப்பம்சம்.

ஆக இந்தத் திட்டங்களில், லாபம் கூடுதலாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. வரிச் சுமை குறைவாக இருக்கும். இவற்றில் ரிஸ்க் குறைவு.

லாப விகிதங்கள்

சராசரியாக 10 சதவிகிதத்துக்கு சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ லாபம் கிடைக்க ஏதுவாக உள்ளது. (பார்க்க, ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகளின் வருமானப் பட்டியல்) லாபம் 12% வரை கிடைக்க வாய்ப்பிருப்பது தெரிகிறது. லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான். வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் லாபத்தைவிட, சற்று அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது முக்கியமான விஷயம்.

அதிக முதலீடுகள் செய்யப்படும் திட்டம்

இந்த வகை திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது. 2015-ல் சுமார் ரூ.5,000 கோடியாக இருந்தது, தற்போது ரூ.22,126 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

முடிவாக, எஃப்.டி-யையும், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் திட்டத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தால், ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டம் ஒருபடி மேலே சென்று முதலீட்டாளர்களுக்கு நன்மை தர வாய்ப்புள்ளது (பார்க்க மேலே உள்ள ஒப்பீடு).

வங்கி எஃப்.டி-யில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்த ஃபண்ட் திட்டங்களைப் பரிசீலனை செய்து முதலீட்டு முடிவை எடுக்கலாமே.