Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், தொடர்ந்து ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டம் என்ற இறங்குமுகமான உருவமைப்பைத் தோற்றுவித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில், இந்த இறக்கம் மிக முக்கியமான ஆதரவு எல்லைக்கு அருகில் வந்துள்ளது.

தங்கத்தின் வார வரைபடத்தைப்  பார்க்கும் போது, 29150 என்ற புள்ளி கடைசி ஆதரவாக இருப்பதுபோல் உள்ளது. ஆனாலும், கடந்த சில வாரங்களாக, தங்கம் இந்த இறக்கத்திலிருந்து மீளுவதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லலாம். அதாவது, ஒரு பாட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகிறது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் விலைப் போக்கு குறித்து நாம் சென்ற வாரம் சொன்னது… “தங்கத்திற்கு தற்போது 29620 என்பது மிகமிக வலுவான தடைநிலை ஆகும்.  உடனடி ஆதரவு 29230 ஆகும். இதற்கு கீழ் இன்னும் சரியலாம்.’’
தங்கம், முந்தைய வாரத்தின் முடிவில் வலிமையாக இறங்க முயற்சி செய்தது. அப்போது, நாம் கொடுத்திருந்த ஆதரவான 29230-ஐ உடைத்து இறங்கினாலும், அன்றே அந்த இறக்கத்திலிருந்து மீண்டு, முடியும்போது 29275 என்ற புள்ளியில் முடிந்தது. அந்த நகர்வு ஒரு டோஜி போன்ற உருவமைப்பைத் தோற்றுவிப்பதற்கு வழி வகுத்துள்ளது. இதன் அடிப்படையில்தான் சென்ற வார நகர்வு நிகழ்ந்துள்ளது. 

ஒரு டோஜி அமைப்பு தோன்றியபிறகு, திங்களன்று டோஜியின் உயர்வைத் தாண்டி 29435 என்ற புள்ளியில் முடிந்ததால், தங்கம் அடுத்தகட்ட உயர்வுக்கு வலிமை சேர்த்தது. செவ்வாயன்று இன்னும் சற்றே ஏறி 29542 என்ற எல்லையில் முடிந்தது. அடுத்து புதனன்று 29627 என்ற எண்ணில் முடிந்தது. இவ்வாறு அடுத்தடுத்த நாள்களில் ஏறுமுகமாக இருந்துவந்தது. ஒரு பெரிய இறக்கத்தின் புல்பேக் ரேலியைப்போல காட்சியளித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி என்ன நடக்கலாம்? தங்கத்தின் இந்த புல்பேக் ரேலி 29800-ல் வலுவாகத் தடுக்கப்படுகிறது.   இதைத் தாண்டினால் புதிய ஏற்றம் வரலாம்.  கீழே 29350 என்பது மிக மிக முக்கிய ஆதரவு எல்லை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது...  “கடுமையான இறக்கத்திற்குள்ளான வெள்ளி, தற்போது  36480-ஐ ஆதரவாகவும், மேலே 37160-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.”

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த 36480 என்ற ஆதரவு எல்லையை உடைக்காமல் காப்பாற்றி வருவது, ஒரு சாதகமான அம்சம்.   அதேபோல, மேலே நாம் கொடுத்திருந்த தடை நிலையான 37160 இன்னும் வலிமையாத்தான் உள்ளது. ஆனால், திங்கள், செவ்வாய் என்று 37085 வரை ஏறினாலும், புதனன்று இன்னும் சற்றே ஏறி நாம் கொடுத்துள்ள தடைநிலையான 37160-ஐ தாண்டி 37190 வரை சென்றாலும், அதன்பின் தாக்குப் பிடிக்கமுடியாமல், இறங்கி 36923-ல் முடிந்தது. அதன்பின் இறக்கம் பலமானதாக மாறி கீழே 36572-ஐ தொட்டது. இருந்தாலும், நாம் கொடுத்துள்ள 36480 என்ற ஆதரவு தக்கவைக்கப் பட்டுள்ளது.   

இனி என்ன செய்யலாம்? நாம் வெள்ளியின் ஆகஸ்ட் கான்ட்ராக்டின் விலையைப் பார்த்து வந்துள்ளோம்.  அது இனி டெலிவரி பீரியட்டுக்குள் நுழைவதால், இனி நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.
தற்போதைய தடைநிலை 37630 ஆகும்; கீழே 37350 உடனடி ஆதரவு எல்லை ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘கச்சா எண்ணெய்க்கு 4525 என்பது மிக மிக வலுவான ஆதரவு நிலையாகும். மேலே 4650 உடனடித் தடைநிலையாகும்.’’

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த ஆதரவான 4525-ஐ வலிமையான ஆதரவாக எடுத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தது. சென்ற வாரம் செவ்வாயன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4650-ஐ உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்தது. புதனன்று அதன் ஏற்றம் இன்னும் வலிமையாக மாறி 4773 என்ற உச்சத்தைத் தொட்டது. இன்னும் ஏற்றம் வலிமையாகவே உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? நல்ல ஏற்றத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் 4850-ஐ உடனடித் தடைநிலையாகவும், கீழே 4660-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.

மென்தா ஆயில்

டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லித்தரும்  போது, ஒரு ஏற்றத்தின் இறக்கத்தை ரிட்ரேஸ்மென்ட் என்று சொல்வோம். அந்த ரிட்ரெஸ்மென்ட் என்பது சிலசமயம் ஏற்றத்தின் இறக்கமாக இல்லாமல், பக்கவாட்டு நகர்வில்கூட இருக்கலாம் என்றும் சொல்லித் தருவோம்.  அதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதுபோல், மென்தா ஆயில், கடந்த வாரம் ஒரு ஏற்றத்திற்குப் பிறகு, பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் இன்னும் பக்கவாட்டு நகர்வில்தான் உள்ளது. எனவே, முன்பு நாம் கொடுத்திருந்த 1590 என்ற ஆதரவு இன்னும் நியாயமானதே. ஆனாலும், விலை நகர்வில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்ப தால், ஆதரவுநிலையை 1610 என்று உயர்த்துகிறோம். அதேசமயம், தடைநிலையையும் கொஞ்சம் உயர்த்தி 1700 என்று எடுத்துக் கொள்ளலாம்.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த இரண்டு எல்லைகளையும், தாண்டாமல் அதற்கு இடையிலேயே சுழன்று வந்துள்ளது. திங்களன்று 1664-ல் ஆரம்பித்து, பின் 1648-ல் முடிந்துள்ளது. இது ஒரு ஸ்பின்னிங் டாப் ஆகும். செவ்வாயன்று 1655-ல் ஆரம்பித்து, கீழே 1628 வரை சென்றாலும், நாம் கொடுத்திருந்த ஆதரவான 1610-ஐ உடைக்கவில்லை. முடியும் போது 1658-ல் முடிந்து, ஒரு டோஜி உருவ அமைப்பைத் தோற்றுவித்தது.

ஸ்பின்னிங் டாப், டோஜி போன்றவை காளை களுக்கும், கரடி களுக்கும் வலுவான சண்டையைக் குறிக்கிறது. அல்லது ஒரு நிச்சமற்றதன்மையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அடுத்து புதன், வியாழன் மற்றும் வெள்ளி என்று மூன்று நாள்களும் ஸ்பின்னிங் டாப் வகை கேன்டிகளே தோன்றின. அவை நிச்சயமற்ற தன்மையை உறுதி செய்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் ஒரு ஆகஸ்ட் கான்ட்ராக்ட் முடிவை நோக்கி வருவதால், இனி செப்டம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். எனவே, இனி தடைநிலை 1740 என்ற புள்ளியிலும், கீழே ஆதரவு எல்லையை 1650 என்ற புள்ளியிலும் வைத்து வியாபாரம் செய்யலாம்.

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் இறங்கு முகமாக உள்ள நிலையில், 23580 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. கீழே 23190 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.”

காட்டன், தொடர்ந்து படிப்படியான இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த இறக்கத்திற்கு முக்கிய ஆதரவாக நாம் கொடுத்திருந்த 23190 என்ற எல்லை தக்கவைக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் திங்களன்று இந்த ஆதரவிலிருந்து ஏற ஆரம்பித்து, உச்சமாக 23500 என்ற எல்லையைத் தொட்டது. அடுத்து செவ்வாயன்று தொடர்ந்து ஏறி உச்சமாக 23590 என்ற எல்லையைத் தொட்டு, முடியும்போது 23480 என்ற எல்லையில் இறங்கி முடிந்துள்ளது. எனவே, நாம் கொடுத்திருந்த தடைநிலையும் வலுவானதாகவே இருந்துள்ளது. அடுத்தடுத்த நாள்கள் காட்டன் இறங்க ஆரம்பித்தாலும், நாம் கொடுத்திருந்த 23190 என்ற ஆதரவு தக்கவைக்கப்பட்டு, முடியும்போது 23270 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் தற்போது 23200 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 23440 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்ற வாரம் சொன்னது... ‘‘தற்போது சென்னா 4410 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகவும், கீழே 4290 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த எல்லைகள் வியாபாரிகளுக்குச் சிறப்பான வாரமாகவே அமைந்துள்ளது. நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4410 வலுவானதாகவே அமைந்திருந்தது. திங்கள் மற்றும் செவ்வாயன்று சென்னா, இந்த இரண்டு எல்லைகளுக்கு இடையே சுழன்றாலும், புதனன்று கீழ் எல்லையான 4290-ஐ உடைத்து இறங்கியது. முடியும்போது 4266 என்ற புள்ளியில் முடிந்தது. வியாழனன்று இன்னும் பலமாக இறங்கி 4143 என்ற புள்ளியைத் தொட்டது. வெள்ளியன்று இன்னும் இறங்கி 4086-ல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? நல்ல இறக்கத்தில் இருந்துவரும் சென்னா, கீழே 4040 என்ற ஆதரவைக் கொண்டுள்ளது. மேலே 4190 என்பது உடனடித் தடைநிலையாகும்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism