வருமான வரிச் சட்டம் 80 சி-யின்படி ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறுவதற்கு பி.பி.எஃப் மற்றும்

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் எது பெஸ்ட்?

வரதராஜன், கோயமுத்தூர்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘பி.பி.எஃப்-ல் முதலீடு செய்தால் 7.6% வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்று. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் நீண்ட காலத்தில் பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்து 12% வருமானத்தை எதிர்பார்க்க இயலும். எனவே, இ.எல்.எஸ்.எஸ் நல்ல வருமானத்தைத் தருவதாக இருக்கும். நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டையே தேர்வு செய்யலாம்.’’

வங்கி எஃப்.டி-யில் நான் போட்ட ரூ.20 லட்சம் விரைவில் முதிர்வடைய உள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகை மகன் படிப்புக்குத் தேவை. அதுவரை அந்தத் தொகையை பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? செய்யலாம் எனில், தகுந்த ஃபண்டுகளுக்கு ஆலோசனை கூறவும்.

நாகேந்திரன், சிவகாசி

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

‘‘ரூ.20 லட்சத்தைக் கல்விச் செலவுக்காக மியூச்சுவல் ஃபண்டில் ஐந்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்யும்போது, கடன் சார்ந்த ஃபண்டு களில் 60% (ரூ.12 லட்சம்), ஹைபிரிட் ஃபண்டுகளில் 30% (ரூ.6 லட்சம்), லார்ஜ்கேப் ஃபண்டுகளில் 10% (ரூ.2 லட்சம்) எனப் பிரித்து முதலீடு செய்யவும்.

ரூ.3 லட்சம் வீதம் எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் எல் & டி டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும்.

ரூ.2 லட்சம் வீதம் பி.ஓ.ஐ ஆக்ஸா மிட் & ஸ்மால்கேப் ஈக்விட்டி & டெப்ட் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட், பிரின்சிபல் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய அக்ரெசிவ் ஹைப்ரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். ரூ.1 லட்சம் வீதம், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவும்.’’

நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பி.எஃப் தொகை ரூ.10 லட்சம் என்னிடமுள்ளது. ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய நல்ல திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.

திருப்பதி, காரைக்குடி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

‘‘ஆண்டுக்கு 15% கூட்டு லாபம் காண்பது என்பது சுலபமான விஷயமில்லை. நிலம், வீடு போன்றவற்றில் அத்தகைய லாபம் பார்ப்பது மிக மிகக் கடினம். வேண்டுமென்றால், நல்ல ஈக்விட்டி ஃபண்டில் 10-15 வருடங்கள் முதலீடு செய்தால், 10-12% லாபம் சேர்ப்பது சாத்தியமாகலாம். இதற்கு மேல் எதிர்பார்ப்பை வைத்திருப்பது ஏமாற்றத்தில் முடியலாம். கவனமாக இருங்கள்’’.

என் வயது 35. தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளம் வாங்குகிறேன். மாதம் ரூ.14,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். பணவீக்கத்தைத் தாண்டி அதிக வருமானம் தரும் முதலீடுகளைக் கூறவும்.

செந்தில்குமார், திருச்சி

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், மதுரை

‘‘மாதச் சேமிப்பான 14,000 ரூபாயில் 12,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுக்கு ஒதுக்குவது நல்லது. இந்த 12,000 ரூபாயை தலா ரூ.3,000 என்ற கணக்கில் நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்யவும். இந்தத் திட்டத்தில் மிகக் குறைந்த அளவே ஏற்ற இறக்கம் இருக்கும். அவசரத்திற்குப் பணம் தேவைப்பட்டால் உடனே எடுத்துக்கொள்ளலாம். டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்யவும். இதனை ஓய்வுக்கால வருமானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக, எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்டில் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்யவும். இந்த இரு ஃபண்டுகளிலும் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும். இந்த ஏற்ற இறக்கம் நீண்ட காலத்தில் சரியாகி, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

மீதமுள்ள 2,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து, மாதம் ரூ.1,000 பிரீமியம் (வருட பிரீமியம் ரூ.12,000) கட்டும் விதமாக ஃபேமிலி மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கவும். திடீர் மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களுடைய முதலீட்டைப் பாதுகாக்க இந்த பாலிசி உதவும். இன்னொரு ஆயிரம் ரூபாய்க்கு (ஆண்டு பிரீமியம் ரூ.12,000), உங்கள் பெயரில் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை 25 ஆண்டுகளுக்கு, காப்பீட்டுத் தொகை ரூ.60 லட்சத்துக்கு எடுக்கவும். இந்த ஆயுள் காப்பீடு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவும்.’’

எனது பெற்றோரின் மெடிக்ளெய்ம் பாலிசிக்கு ஆண்டுக்கு ரூ.50,000 பிரீமியம் கட்டுகிறேன். இதன்மூலம் ரூ.30,000 வரை மட்டுமே வருமான வரிச் சலுகை பெற முடிகிறது. மீதமுள்ள ரூ.20,000 பிரீமியத்தை எனது சகோதரர் அவர் பங்காகக் கட்டினால் அதற்கான வரிச் சலுகையை அவர் பெற இயலுமா?

தங்கராஜ், கரூர்

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘வருமான வரிச் சட்டப்படி, பெற்றோர் கட்டும் பிரீமியத்திற்கு மகன்கள் இருவரும் பங்கிட்டுப் பணம் கட்ட முடியாது. அதே போல, மெடிக்ளெய்ம் பாலிசி பிரீமியத்திற்காக வரிச் சலுகை பெறுவதற்கென சில நிபந்தனை களும் உள்ளன. முதலாவது, அந்தத் தொகையானது, அந்த பிரீமியத்தைச் செலுத்துபவரின் வரி செலுத்தக்கூடிய வருமானத் திலிருந்து கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, அந்தத் தொகையை நேரடியாக அந்த இன்ஷூரன்ஸ் அலுவலகத் திற்கே செலுத்த வேண்டும். மூன்றாவதாக, அந்தத் தொகையை ரொக்கப் பணமாகச் செலுத்தக்கூடாது. இருவர் பங்கிட்டுப் பணம் செலுத்துவதில் இந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க இயலாது. எனவே, நீங்கள் சொல்வதுபோல் நடக்க வாய்ப்பில்லை.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.