தேனி அருகே ஐந்து ஏக்கரில் நவீன தொழில்நுட்ப முறையில் நான் திராட்சை சாகுபடி செய்துவருகிறேன். இந்தத் திராட்சையை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். எந்தெந்த நாடுகளில் இதற்கு வாய்ப்புள்ளது, எப்படி ஏற்றுமதி செய்ய வேண்டும்?

சுரேஷ் குமரன், தேனி

அசோகன் ஆர்.ராஜா, செயல் அதிகாரி, சென்டர் ஃபார் இந்தியன் டிரேட் அண்டு எக்ஸ்போர்ட் புரோமோஷன்

‘‘தாம்ஸன், சரத் (விதை இல்லாதது), சோனாகா, தாஸ்-இ-கணேஷ் போன்ற திராட்சை வகைகள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. முக்கியமாக நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, சவூதி அரேபியா, பங்களாதேஷ், தாய்லாந்து, பெல்ஜியம், இலங்கை முதலிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன. விதையற்ற திராட்சையை அதிகமாக ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் முதன்மையாக உள்ளது நம் இந்தியா. திராட்சை ஏற்றுமதியில் நம் நாடு பத்தாவது பெரிய நாடாக உள்ளது.

இரட்டை அடுக்குகள் கொண்ட தடிமனான உள்பக்கம் லேமினேட் செய்யப்பட்ட 2 கிலோ / 5 கிலோ கொள்ளளவுள்ள அட்டைப் பெட்டி களில் 0-1°C குளிர்பதன கன்டெய்னர்களில் திராட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் திராட்சையின் அளவு 15 மில்லி மீட்டர் முதல் 18 மில்லி மீட்டர் வரை இருப்பது அவசியம். திராட்சை ஏற்றுமதி செய்வதற்கு விலைப்பட்டியல், பேக்கிங் லிஸ்ட், பைட்டோ சானிட்டரி சான்றிதழ், ஜிஏபி சான்றிதழ், ஹெல்த் சான்றிதழ், இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டு இருப்பின் அதற்கான ஆர்கானிக் சான்றிதழ் மற்றும் உலகத் தர நிர்ணய அளவிற்கு உட்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடு மற்றும் அதற்கான சான்றிதழ் அவசியம். திராட்சை ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமான அபேடா-வில் (APEDA) பதிவு செய்திருப்பது அவசியம்.’’

என் வயது 30. ஓய்வூதிய முதலீட்டுக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் சரியானதாக இருக்குமா? 58 வயதில் ரூ.1.5 கோடி என்ற இலக்கை எட்ட ஏற்ற ஃபண்டுகளையும், அதற்கான முதலீட்டுத் தொகையையும் கூறவும்.

மகேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

‘‘58 வயதில் ரூ.1.5 கோடி என்ற இலக்கை எட்ட மாதாமாதம் எஸ்.ஐ.பி முறையில் சுமார் 6,500 ரூபாயை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இந்தத் தொகையை ஸ்மால், மிட், லார்ஜ் & டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் முதலீடு செய்து, அது ஆண்டுக் கூட்டு வளர்ச்சியாக 12% வருமானம் கிடைத்தால், 28 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி இலக்கினை அடைய வாய்ப்புள்ளது.

இந்த 6,500 ரூபாயையும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. இ.எல்.எஸ்.எஸ் என்பது வருமான வரிச் சலுகை அளிக்கும் ஃபண்ட் ஆகும். இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஓராண்டில் 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். வரிச் சேமிப்பு ஆண்டிற்கு எவ்வளவு தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு அந்தத் தொகையை மட்டும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் (ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் ஃபண்ட்) முதலீடு செய்து மீதியை இரண்டாகப் பிரித்து எஸ்.ஐ.பி முறையில் இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், எல்&டி எமர்ஜிங் பிசினஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’

ஓய்வூதியம் பெற்றுவரும் நான் இந்த நிதியாண்டில் செப்டம்பரில் சீனியர் சிட்டிசன் வயதை எட்டவுள்ளேன். இந்த நிதியாண்டின் இறுதியில் வரித் தாக்கல் செய்யும் போது சீனியர் சிட்டிசனுக்கான வரிச் சலுகைகளை நான் பெற இயலுமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘வருமான வரிச் சட்டத்தின்படி, ஒருவருடைய வயது நடப்பு நிதியாண்டில் அறுபதை எட்டும் பட்சத்தில் அவர் அதே நிதியாண்டில் சீனியர் சிட்டிஷன் என்று கருதப்படுவார். அதேபோல, அவரது வயது என்பதை எட்டினால் சூப்பர் சீனியர் சிட்டிசன் என்று கருதப்படுவார். இதன்படி, இந்த செப்டம்பரில் அறுபது வயதை எட்டும் நீங்கள், சீனியர் சிட்டிசனுக்கான வரிச் சலுகைகளைப் பெற முடியும்.’’

ஓராண்டுக்குமுன் தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றேன். தற்போது குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் மூலம் மேலும் ஒரு தளம் கட்ட விரும்புகிறேன். இது சாத்தியமா?

நாகராஜ், சென்னை

ஆர்.கணேசன், முதன்மை செயல் அதிகாரி, நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

‘‘வீட்டின் கீழ்தளத்திற்கு ஒரு வங்கியிலும், மேல்தளத்திற்கு இன்னொரு வங்கியிலுமாக வீட்டுக் கடன் வாங்க முடியாது. வேண்டுமானால் ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனைப் பொதுத் துறை வங்கிக்கு மாற்றம் செய்துவிட்டு, அதே வங்கியில் டாப்-அப் கடன் வாங்கி, மேல் தளத்தைக் கட்டலாம். அப்படி ஒரு பொதுத்துறை வங்கிக்கு மாற்றும்போது முன்கூட்டியே கணக்கு முடிப்பதற்கான தொகையை (preclosure charges) தனியார் வங்கிக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல், இன்னொரு தளத்திற்கான டாப்-அப் கடன் வாங்க வேண்டுமெனில், அந்தக் கூடுதல் கடனையும் அடைக்கும் அளவிற்கு வருமான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். கடந்த ஓராண்டில் நன்முறையில் வீட்டுக் கடன் அடைக்கப்பட்டு வந்திருக்கிறதா என்பதைக் கவனிப்பார்கள். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் டாப்-அப் கடன் கிடைக்கும்.”

அரசு ஓய்வூதியம் பெற்றுவரும் எனது தந்தை கடந்த 2018 மே ஒன்றாம் தேதி மரணமடைந்தார். அவரது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

பாலாஜி, ஆடிட்டர்

‘‘வருமான வரிச் சட்டம், செக் ஷன் 159-ன்படி வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். சட்டப்படியான வாரிசு என்ற வகையில் நீங்களே வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம். அப்படி வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு வருமான வரித்துறை போர்ட்டலில் தாங்கள் நீங்கள் சட்டப்படியான வாரிசுதாரர் என்பதைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழ் உள்பட, நீங்கள்தான் வாரிசு என்பதை உறுதிப்படுத்த ஆதாரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். உங்களுக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஆன்லைனிலேயே உங்கள் தந்தையின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.’’

என் வயது 45. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பணி ஓய்வின்போது 20 லட்சம் ரூபாய் சேர்க்க முதலீட்டு ஆலோசனை கூறவும்.

கண்ணன், புதுக்கோட்டை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

‘‘இன்னும் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குள் நீங்கள் பணி ஓய்வு பெறுவீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்கள் இலக்கான ரூ.20 லட்சம் அடைவதற்கு மாதம் சுமார் ரூ.7,000 முதலீடு செய்ய வேண்டியிருக்கும் (வருடம் 12% லாபம் கிடைக்கும் என்கிற அனுமானத்தில்). ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப், மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஆகிய ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு செய்ய நீங்கள் பரிசீலிக்கலாம்.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.