Published:Updated:

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

நான் என் தங்கையின் திருமணத்திற்கு சீதனமாகக் கொடுக்கும் பணம், பொருள்களுக்கு அவர் வரி கட்ட வேண்டுமா?

செந்தில் குமார், அருப்புக்கோட்டை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாமல் திருமணத்திற்காக மனமுவந்து தரப்படும் சீதனம் சட்டப்படி குற்றமாகாது. அந்தச் சீதனத்தை வருமான வரிக் கணக்கில் காட்டி வரி கட்ட வேண்டும்.’’

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

வயது 34. இரண்டு லட்சம் ரூபாயை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் பத்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்யும்படி ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

கனகராஜ், ஈரோடு

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்


‘‘வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் மூன்று ஆண்டுகளுக்கு லாக்-இன் பீரியட் இருக்கிறது. வரி விலக்கு அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் மட்டுமே பெறமுடியும். இன்வெஸ்கோ இந்தியா டாக்ஸ் பிளான், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர், ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு, எல் & டி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

இரு சக்கர வாகனம் வாங்கும்போது, வாகன உற்பத்தி நிறுவனம் இலவசமாக ஹெல்மெட் கொடுக்க வேண்டும் என்கிறான் என் நண்பன். இது உண்மையா?

சுந்தர், அண்ணாநகர், சென்னை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

‘‘மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1989 138(F) பிரிவு, மோட்டார் சைக்கிள் வாங்கும்போது, மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் கட்டாயம் இலவசமாக ஹெல்மெட் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது. இந்தப் பிரிவை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதை அந்தந்தப் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் டிவிஷன் பெஞ்ச், வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களை உற்பத்தி செய்யும்போது, அவற்றில் ஹெல்மெட்டை வைப்பதற்கான வசதியுடன் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை மோட்டார் வாகன நிறுவனங்கள்  பின்பற்றுவதாகத் தெரியவில்லை.’’

நான் ஒரு ஆசிரியை. மாதம் 2,000 ரூபாய், 5 ஆண்டுகளுக்கு  மியூச்சுவல் ஃபண்டில் முதன்முறையாக முதலீடு செய்ய விரும்புகிறேன். வங்கி, அஞ்சலகச் சேமிப்புகளைவிட அதிக வருமானம் தரும்  முதலீட்டுத் திட்டங்களைக் கூறவும்.

காஞ்சனா, மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


‘‘ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்டில் நீங்கள் 2,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும். ஓரிரு வருடங்களில் உங்களால் இந்தத் தொகையை அதிகரிக்க முடியும் என்றால் நல்லது.

’’போலீஸாகப் பணிபுரியும் எனது ஆண்டு வருமானம் ரூ.3.40 லட்சம். வயது 34. நான் 50 லட்சம் ரூபாய்க்குத்  தனியார் நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளேன். நான் திடீரென மரணமடைந்தால் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கு  என் குடும்பத்தினர் வருமான வரி கட்ட வேண்டுமா?

பன்னீர்செல்வம், சென்னை

கே.ஆர் சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘இழப்பீடாகப் பெறப்படும் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு முழுமையான வருமான வரி விலக்கு உண்டு. வரி கட்டத் தேவையில்லை.’’

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

எட்டு ஆண்டுகளுக்குமுன் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டேன். இந்த விவரத்தை எனது பாலிசியில் தெரிவிக்க வேண்டுமா?

மாரியப்பன், செங்கல்பட்டு

மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்


‘‘இந்த விவரத்தை பாலிசி எடுக்கும்போது தெரிவிக்கவேண்டும். ஆனால், சிக்குன்குனியா என்பது வைரஸ் பாதிப்பினால் வரும் ஒரு காய்ச்சல் மட்டுமே என்பதால், இது வியாதி என்ற வகையில் சேராது. ஒருவேளை, அந்தக் காய்ச்சல் காரணமாக வேறு ஏதேனும் உடல் உபாதையோ, ஊனமோ ஏற்பட்டிருந்தால், அது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.’’

வீட்டு வாடகை ரூ.20,000 செலுத்திவருகிறேன். என் அலுவலகத்திலிருந்து வீட்டு வாடகைப்படியும் மாதந்தோறும் தருகிறார்கள். ஆனால், எனது படிவம் 16-ல் வீட்டு வாடகைப்படிக்கான வரிக்கழிவு விடுபட்டுள்ளது. எனது வருமான வரித் தாக்கலில் வீட்டு வாடகைப்படியை க்ளெய்ம் செய்ய முடியுமா?

நாகராஜன், திருநெல்வேலி

ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்


‘‘நிச்சயமாக க்ளெய்ம் செய்ய முடியும். படிவம் 16-ல் விடுபட்ட வீட்டு வாடகைப்படியை வரித்தாக்கல் செய்ய எந்தத் தடையும் இல்லை. வருமான வரிச்சட்டம் விதி 10-ன்கீழ் தகுந்த தொகையைக் கணக்கிட்டு அதன்படி கழிவு பெறலாம்.’’

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

வயது 23. தனியார் துறையில் பணிபுரியும் நான் மாதம் 5,000 ரூபாயை 29 வயது வரை திருமணச் செலவுக்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். நல்ல  ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

வில்சன், நாகர்கோவில்

கனகா ஆசை, நிதி ஆலோசகர்


‘‘மாதந்தோறும் 5,000 ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி  ஃபண்டு களில் பிரித்து முதலீடு செய்தால் சுமார்  12% வருமானம் எதிர்பார்க்கலாம். ஆக்சிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட்,  கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ஆகியவற்றில் தலா 2,000 ரூபாயும், எல் & டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்டில் 1,000 ரூபாயும் முதலீடு செய்யவும்.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

படம்: என்.ஜி.மணிகண்டன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.