Published:Updated:

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

Published:Updated:
முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

முந்தைய அத்தியாயத்தில்,  பணச் சொத்து மற்றும் மூலதனச் சொத்து எனச் சொத்துகளின் வகைகளை நாம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், சொத்துகளை அது தருகிற வருமானத்துக் கேற்றவாறு வளர்கிற சொத்துகள் (Appreciating assets) மற்றும் தேய்மானம் அடைகிற சொத்துகள் (Depreciating Assets) என இரு வகைப்படுத்தி, அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

 நீங்கள் சேர்த்து வைக்கும் பணம் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எனவே, பல்வேறு சொத்துகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. அப்படிப் புரிந்துகொண்டால் தான், நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிற பணம் தேய்மானச் சொத்துகளில் சிக்கி, காணாமல் போக வாய்ப்பிருக்காது. சரி, எவை வளர்கிற சொத்துகள் என்று சொல்லாம்?

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

வளர்கிற சொத்துகள்

 வளர்கிற சொத்துகள் என்பதற்கு அர்த்தம் நாளுக்கு நாள் அதன் மதிப்பு அதிகரிப்பதுதான். நமது அனுபவத்திலிருந்து, ஆர்.டி., பி.பி.எஃப் போன்ற குறிப்பிட்ட பணச் சொத்துகள்கூட வளர்கிற சொத்துகள்தான் என்றுதான் நாம் புரிந்துவைத்திருக்கிறோம். நிலம் மற்றும் சொத்தின் மதிப்பு எப்படி நாளுக்கு நாள் அதிகரிக்கிறதோ, அதே போன்றுதான் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகளின் மதிப்பும் அதிகரிக்கின்றன. பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை மட்டும் அவை கொண்டிருக்கவில்லை. கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் அனைத்து வகையான சொத்துகளிலேயே, ஈக்விட்டி ஃபண்டுகள் போன்ற சில பிரிவு சொத்துகள் சிறந்த வருவாயைக் கொடுத்துள்ளன.

இங்கே ஜான் என்பவரின் கதையைப் பார்ப்போம். அவர் 2006-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கு மனை ஒன்றை வாங்கினார். 2013-ம் ஆண்டில், அந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு   விற்குமாறு சிலர் அவரிடம் கேட்கின்றனர். அதாவது, ஏழு ஆண்டுகளில் அந்த மனையின் மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இது, ரியல் எஸ்டேட் துறையில் பெறக்கூடிய மிக வேகமான வளர்ச்சிகளில் ஒன்றாகும். அந்த மனை, ஆண்டுக்கு 26% வருவாய் வளர்ச்சி பெற்றதாக மாறியுள்ளது.

ஆனாலும், அந்த மனையை இன்னும் சில ஆண்டுகள் கழித்தே விற்பது என ஜான் முடிவு செய்தார். 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் விலை குறைந்த தால், அவர் அதை 2018-ம் ஆண்டில் ரூ.20 லட்சத்துக்கு அதாவது, ஆண்டுக்கு 12% வருவாய் அடிப்படையில் விற்றார்.

அதேநேரம், 2006-ல், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தார் ஜான். 2013-ல், அவரது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், மனையின் விலையான ரூ.25 லட்சத்துடன் ஒப்பிட்டால், ஆண்டுக்கு 13% வருவாய் அடிப்படையில் ரூ.12 லட்சமாக வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டில் ஜான் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு, ஆண்டுக்கு 16% வருவாய் அடிப்படையில் வளர்ந்து ஆண்டுக்கு ரூ.30 லட்சமாக வளர்ச்சியடைந்தது.

இந்த இரண்டு அம்சங்களிலும் உண்மையான வருவாய், அந்தந்தச் சொத்துகளின் தன்மை மற்றும் டிமாண்ட் அண்டு சப்ளை அடிப்படையில்  வெவ்வேறு காலங்களில் வெவ்வேறாக இருந்தன.

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

மொத்தத்தில், 2006-ம் ஆண்டு ஜான் செய்த ரூ.10 லட்சம் முதலீடு, 2018-ம் ஆண்டில் ரூ.50 லட்சமாக வளர்ச்சியடைந்து, ஆண்டுக்கு 14% அடிப்படை யிலான கூட்டு வருவாயை அவருக்கு அளித்துள்ளது. எனவே, வெவ்வேறு வகையான சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாய் மாறுபாடானதாகவும், முன்கூட்டியே சொல்ல முடியாததாகவும் இருக்கும் என்பதால், உங்களது  முதலீட்டு சார்ந்த அறிவு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, பலவிதமான சொத்துகளும் உங்கள்  போர்ட்ஃபோலியோவில் இருக்கிறமாதிரி பார்த்துக் கொள்வது நல்லது.

தேய்மானம் அடைகிற சொத்துகள்

தேய்மானம் என்பதன் அர்த்தம், நாளுக்கு நாள் சொத்தின் மதிப்பு அல்லது விலை  இழப்பு ஏற்படுவதாகும்.  கார், லேப் டாப், மொபைல் போன் வாங்குவது அல்லது அலங்காரம்/புதுப்பித்தல் செய்வதற்கான செலவு களைச் செய்வதை நமக்கான சொத்தாகக் கருத விரும்பினா லும்,  இந்த முதலீடுகளெல்லாம்  அடிப்படையில் தேய்மானம் அடைகிற சொத்துகளாகும். இவற்றுக்காக நீங்கள் பணம் செலுத்திய அந்தக் கணத்திலிருந்தே அவை, அவற்றின் மதிப்பை இழக்கத் தொடங்குகின்றன.

எனவே, நீங்கள் வாங்குகிற எந்த ஒன்றும் அதன் மதிப்பை மேம்படுத்துவதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது அவசியம். அதாவது, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்கள் பணத்தைக் கொண்டு நீங்கள் வாங்குகிற எந்த ஒன்றும் பிராண்டுக்காக அல்லாமல், அதன் மதிப்பு பின்னர் அதிகரிக்கும் விதமாக இருக்கும் என்று பார்த்து வாங்குங்கள்.

தேய்மானம் அடைகிற சொத்துகளை ஒருபோதும் கடன் வாங்கி வாங்கக்கூடாது என்பது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல,  கட்டாயம் பின்பற்ற வேண்டியதும் ஆகும். நீங்கள் வாங்கிய பொருளின்  தேய்மான விகிதம், உங்கள் கடனுக்கு நீங்கள் செலுத்துகிற வட்டியால் இன்னும் வேகமடையும்.

உங்களுடைய வாகனம் அல்லது கேட்ஜெட் ஒவ்வோர் ஆண்டும் 15% தேய்மானம் அடைந்து, உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் 10 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில், அது தனது மதிப்பை ஒவ்வோர் ஆண்டும் 25% அளவுக்கு இழக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

மறைந்திருக்கும் பிரச்னைகள்

அதேசமயம், வளர்கிற  சொத்துகள் அனைத்துமே உண்மையில் வளர்வதில்லை. உதாரணமாக, நீங்கள் ஒரு கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டின்  ஒரு டிவிடெண்ட் அல்லது டிவிடெண்ட் - மறுமுதலீட்டு திட்டத்தில் தவறாக முதலீடு செய்கிறீர்களென்றால், காலப்போக்கில் அது வளர்ச்சி யடைவதற்கான வாய்ப்பை நீங்களே தடுக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இந்தத் திட்டங்களில் இடை யிடையே டிவிடெண்ட் வழங்கப் படுவதால், முதலீட்டின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

மேலும், இந்த டிவிடெண்டுகள்மீது டிவிடெண்ட் விநியோக வரி (dividend distribution tax (DDT) பிடிக்கப்படுவதால், முதலீட் டாளர்களின் கையில் கிடைக்கும் வருமானமும் குறைகிறது. இந்த    டி.டி.டி கடன் ஃபண்டுகளில் 28%, ஈக்விட்டி ஃபண்டுகளில் 10% என உள்ளது. 

அதேநேரத்தில், முதலீட்டு வளர்ச்சித் திட்டங்களில் (Growth schemes), டிவிடெண்ட் விநியோக வரி (DDT) கிடையாது என்பதால், அந்தத் திட்டத்தில் வருவாய் ஒட்டு மொத்தமாக வளர்ச்சி அடையும். எனவே, குரோத் ஆப்ஷன் ஃபண்டுகள்தான் உண்மையிலேயே வளர்கிற சொத்துகளாகும்.

முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

இதேபோன்றுதான், உங்கள் மகளின் திருமணத்துக்காக நீங்கள் தங்கத்தைச் சேமித்து வரும்பட்சத்தில், வாங்கும்போதும் (சேதாரம், செய்கூலி, ஜி.எஸ்.டி), பின்னர் விற்கும்போதும் (மீண்டும் சேதாரம்) இரண்டுமுறை பண இழப்புக்கு உள்ளாகிற நகைகளாக வாங்காமல், மத்திய அரசு வெளியிடும் அரசு வெளியிடும் தங்கக் கடன் பத்திரம் (Sovereign Gold Bond)  அல்லது கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளாக வாங்கலாம்.

 அப்படி வாங்கினால், உங்கள் மகளின் திருமணத்தின்போது, பழைய நகைகளைக் கொடுத்து, அதில் 25% பண இழப்புடன் சமீபத்திய டிசைன் நகைகளை வாங்குவதற்குப் பதிலாக, உங்களது இ.டி.எஃப் ஃபண்டுகளை விற்று, பண இழப்பு எதுவும் இல்லாமல் புதிய நகைகளை வாங்கலாம்.

சரியான சொத்தைத் தேர்வு செய்யுங்கள்

உங்களது வேலை / தொழில் மூலம் நீங்கள் சம்பாதிக்கத் தொடங்கும் காலத்திலிருந்தே, வளர்கிற சொத்துகளில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. இந்த முறையில் நீங்கள் முதலீடு செய்யும்பட்சத்தில், உங்கள் பணம் உங்களுக்காகக் கடுமையாக உழைத்து, அதைப் பல மடங்காக உங்களுக்குத் திருப்பித் தரும். அப்படியல்லாமல், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியைத் தேய்மானம் அடைகிற சொத்துகளில் முதலீடு செய்தீர்கள் என்றால், உங்களுடைய பணம் பன்மடங்காகப் பெருகுவதை நீங்களே தடுக்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும்.

அடுத்த அத்தியாயத்தில், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

(ரகசியம் தொடரும்)

தமிழில்: பா.முகிலன்