Published:Updated:

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

Published:Updated:
ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

தனியார் துறையில் பணியாற்றும் எனக்கு இப்போது வயது 45. நான் ஓய்வுக்காலத்துக்காக மொத்தமாக ரூ.6 லட்சத்தைப் பத்தாண்டு காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எப்படி முதலீடு செய்வது? எனக்கேற்ற ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

நாகராஜன், சேலம்

கனகா ஆசை, நிதி ஆலோசகர்

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

“ரூ.6 லட்சம் ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி லோ டியூரேஷன் ஃபண்டில் (லிக்விட் ஃபண்ட்) முதலீடு செய்யவும். அதிலிருந்து மாதம் ரூ.2,500 வீதம் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலம் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் வேல்யூ ஃபண்டு களுக்கு நீங்கள் விரும்புவதுபோல் பத்து வருடங்களுக்கு முதலீடு செய்யவும். பத்து வருட முடிவில் இந்த முதலீட்டுத் தொகையைக் கடன் சார்ந்த ஃபண்டுகளுக்கு மாற்றவும். அதன்பின், தொகுப்பு நிதியிலிருந்து உங்களது மாத வருமானத் தேவையின்படி, சிஸ்டமேட்டிங் வித்ட்ராயல் பிளான்மூலம் உங்களது வங்கிக்கணக்கில் சேரும்படி செய்யவும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

இன்னோவென்டைவ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லான்கோ இன்ஃப்ராடெக் ஆகிய நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்தும் பணி நடந்துவருவதால் இவற்றின் பங்கு விற்பனை நடக்கவில்லை. எதிர்காலத்தில் இவற்றின் பங்குகள் விற்கும் வாய்ப்பு உண்டா?

விஜயகுமார் நாதன், மெயில் வழியாக...

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“ஏதேனும் நிர்பந்தத்தின் காரணமாக ஒரு நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டால் அவற்றின் பங்குகளை மீண்டும் விற்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.”

நான் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.20,000, குழந்தைகளின் நலனுக்காக உழைக்கும் ஒரு என்.ஜி.ஓ அமைப்பிற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தேன். இதற்கு வரிச் சலுகை உண்டா?

சக்திவேல், நாகப்பட்டினம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு அளிக்கும் தொகையானது, வருமானவரிச் சட்டம் 80G-ன்படி, 100% வரிச் சலுகை பெறும். எனவே, 20,000 ரூபாயானது, உங்கள் வருமானத்திலிருந்து முழுமையாகக் கழித்துக்கொள்ளப்படும்.    
       
என்.ஜி.ஓ-வைப் பொறுத்தவரை, அவர்கள் வருமான வரிச் சட்டம் 80G பதிவு பெற்ற அறக்கட்டளை அமைப்பாக இருக்கவேண்டும். நாம் செலுத்தும் நன்கொடைக்கு அவர்களிட மிருந்து 80G ரசீது பெற்றுக்கொண்டு கணக்கில் காட்டினால் 50% வரிச் சலுகை உண்டு.

அதாவது, நன்கொடையாகக் கொடுத்த ரூ.10 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரத்துக்கு மட்டும் வரிச் சலுகை உண்டு. 80G ரசீது இல்லையென்றால் மொத்த நன்கொடைக்கும் வரிச் சலுகை கிடையாது.”

ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பாதிக்கும் நான்     ரூ.15 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளேன்.  அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ள நான், எனது மனைவிக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்க நினைக்கிறேன். எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கலாம், தனி பாலிசி எடுக்கலாமா அல்லது கூட்டு பாலிசி எடுக்கலாமா?

பிரபு, தஞ்சாவூர்

ஜே.சக்ரபாணி, பிராந்திய மேலாளர், தென்மண்டலம், எல்.ஐ.சி ஆஃப் இந்தியா, சென்னை

‘‘பொதுவாக, வருமானம் ஈட்ட தொடங்கும் போதே ‘போதுமான ஆயுள் காப்பீடு’ எடுப்பது அவசியமான ஒன்றாகிறது. ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் பத்து மடங்குக்கு மேல்  ஆயுள் காப்பீட்டுத்தொகை இருப்பதே சரியாகத் திட்டமிடப்பட்ட காப்பீடாக இருக்கமுடியும். எனவே, திருமணமாகும்வரை தள்ளிப்போடாமல் முதலில் உங்களது ஆயுள் காப்பீட்டுத் தொகையை ரூ.35 லட்சமாக உயர்த்துவது நல்லது.

திருமணத்திற்குப்பிறகு, உங்களது மனைவியின் பணி, நிதி நிலவரத்தைப் பொறுத்துக் காப்பீட்டுத் தொகையையும், தனித்தனி பாலிசியா அல்லது கூட்டு பாலிசியா என்பதைத் தீர்மானிக்கலாம்.’’

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

என் வயது 35. என்னிடமுள்ள 20 லட்சம் ரூபாயைப் பங்கு சார்ந்த ஃபண்டுகளிலும், கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் 70:30 என்ற விகிதத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன். இதற்கேற்ற முதலீட்டு ஆலோசனை கூறுங்கள்.

மகேஷ் குமார், சிவகாசி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“நீங்கள் குறிப்பிட்டுள்ள 70:30 விகிதாசாரத்தில் முதலீடு செய்யும்போது, குறைந்தபட்சம் ஏழு வருடங்களுக்காவது முதலீட்டைத் தொடர  வேண்டும். அடுத்ததாக, பங்குச் சார்ந்த ஃபண்டு களில் ஒரே தவணையாக முதலீடு செய்யாமல், சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலமாக மாதாமாதம், ஒரு வருட காலத்திற்கு விரிவாகப் பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த நிறுவனங்களின் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, பிற்பாடு அந்த முதலீட்டை வேறு ஃபண்டுகளுக்கு மாற்றலாம்.

20 லட்சம் ரூபாயில் 70 சதவிகிதமான 14 லட்சம் ரூபாயை நான்காகப் பிரித்து, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளான ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட் மற்றும் ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய இரண்டு லார்ஜ்கேப் ஃபண்டிலும், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி மற்றும் மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி மல்டிகேப் ஆகிய இரண்டு மல்டிகேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவும்.

கடன் சந்தை ஃபண்டுகளைப் பொறுத்தவரை, ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் மீதமுள்ள 6 லட்சம் ரூபாயை இரண்டாகப் பகிர்ந்து முதலீடு செய்யலாம்.”

இரண்டாண்டு காலத்திற்கு வங்கி வைப்பு நிதியில் ரூ.1.4 லட்சம் முதலீடு செய்திருந்தேன். அந்தத் தொகை முதிர்வடையும்போது என்னிடம் தெரிவிக் காமலேயே டிடிஎஸ் பிடித்தம் செய்துவிட்டு, அதற்கான சான்றிதழ் அளித்தார்கள். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில் தற்போது என்ன செய்வது?

காயத்ரி, சென்னை

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“நீங்கள் படிவம் 15H / 15G கொடுக்க மறந்திருப்ப தால்தான் வங்கியில் டிடிஎஸ் பிடித்தம் செய்திருக் கிறார்கள். தற்போது உங்களுடைய மொத்த வருமானம் 2,50,000 ரூபாய்க்குள் இருக்கும்பட்சத்தில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையை ரீஃபண்ட் பெற்றுக் கொள்ளலாம்.”

ஆதித்ய பிர்லா சன்லைஃப்  ஃப்ரன்ட்லைன் லார்ஜ்கேப் ஃபண்ட் மற்றும் கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.2,500 வீதம் மொத்தம் 5,000 ரூபாயை ஓராண்டாக முதலீடு செய்துவருகிறேன். இதனை மேலும் 20 வருடங்கள் தொடர விரும்புகிறேன். இந்தத் திட்டத்திலேயே தொடரலாமா? மேலும் ஒரு 5,000 ரூபாயை முதலீடு செய்ய ஏற்ற திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.

கே.சுந்தர், சென்னை

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“நீங்கள் தற்போது முதலீடு செய்துவரும் ஃபண்ட் திட்டங்கள் சரியானவையே. இந்த ஃபண்டுகளில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாம். மேலும், முதலீடு செய்ய விரும்பும் 5,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து, ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.2,500 முதலீடு செய்து வரவும்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism