Published:Updated:

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

Published:Updated:
முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

டந்த அத்தியாயத்தில் தேயும் சொத்து மற்றும் வளரும் சொத்து குறித்துப் பார்த்தோம். இந்த வாரம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் தன்மை பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அது என்ன அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள், இந்தச் சொத்துக்கள்  எல்லாம் உண்மையிலேயே அசையுமா, அதை நம் கண்ணால் பார்க்க முடியுமா என்றெல்லாம் சிலர் கேலி செய்து சிரிப்பினை வரவழைப்பார்கள். நாம் வாங்கும் எந்தச் சொத்தாக இருந்தாலும், அதனை நினைக்கிறபோது விற்றுப் பணமாக்கக்கூடிய தன்மை (liquidity) கொண்டிருக்க வேண்டும். இந்த அம்சம் மிக மிக முக்கியம். எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துகள் எல்லாம் அசையும் சொத்துகள் (Movable assets) என்றும், மற்றவை அசையா சொத்துகள் (Immovable Assets) என்றும் அழைக்கின்றனர். 

அசையும் சொத்துகள்

வங்கி எஃப்.டி, ஆர்.டி & தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மற்றும்  மூலதனச் சொத்துகளான ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிறுவனப் பங்குகள் போன்றவை அசையும் சொத்துகள் ஆகும்.
நம் வாழ்க்கையில் இரண்டு சமயங்களில்  பெரும்பாலான மக்கள் தங்களது போர்ட் ஃபோலியோவில் அதிக அளவில் அசையும் சொத்துகளை வைத்திருக்க விரும்புவார்கள். ஒன்று, கனவு வீடு ஒன்றை வாங்கும்போது; இரண்டாவது, குழந்தைகளின் கல்வி / திருமணம் நடக்கும்போது.

ராபர்ட், தனது கனவு இல்லத்தைக் கட்டி வருகிறார். குறிப்பிட்ட சில கட்டுமானப் பொருள் களின் விலை எதிர்பாராதவிதமாக அதிகரித்ததால், அவரது புது வீட்டுக்கான பட்ஜெட் 20% அதிக மாகிவிட்டது. இந்தப் பணப் பற்றாக்குறையைத் தீர்க்க ராபர்ட்டுக்குத் தற்போது கூடுதல் பணம் தேவை. அவருக்கு மற்ற சொத்துகள் இருக்கிற போதிலும், அவரது கனவு வீட்டைக் கட்டி முடிக்க, உடனடியாக ரொக்கமாக மாற்றக்கூடிய வகையில் எந்தச் சொத்தும் இல்லை.

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

இங்கேதான் பங்குச் சந்தை மூலதன முதலீடுகள் (Capital Market Investments), பிசிக்கல் சொத்துகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.  ஏனெனில், அதை நீங்கள் விற்க முன்வந்தால், வாங்கிக் கொள்வதற்கு எப்போதுமே ஒருவர் (Buyer) தயாராக இருப்பார். அவற்றை எந்த நேரத்திலும் விற்க முடியும். அத்துடன் அந்தப் பரிவர்த்தனை மூலமான ரொக்கப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு 2-3  நாள்களில் வந்துவிடும். 

அடுத்ததாக, பிரியாவை எடுத்துக்கொள்வோம். இவர் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு தாய். தன் மகளின் கல்லூரிச் செலவுக்காக, மாதம் 12,000 ரூபாயை ஐந்தாண்டு காலத்துக்கு, 2013-ம் ஆண்டி லிருந்து ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்தார். ஐந்தாண்டுகள் முடிவில் அதாவது, 2018-ல் அவரது முதலீடு ரூ.10 லட்சமாக (ஆண்டுக்கு 15% வருவாய்) வளர்ந்து, மகளின் கல்லூரிச் செலவைச் சமாளிக்க கைகொடுத்தது.

அதே காலகட்டத்தில், பிரியாவின் தோழி அனு, ஐந்து லட்சம் ரூபாயில் மனை ஒன்றை வாங்கி முதலீடு செய்தார். 2013-ல் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி நின்றுபோனதால், அவரது நிலத்தின் மதிப்புபோது அளவில் உயராமல் போனதுடன், 2018-ல் அவருக்குத் தேவைப்படுகிற நேரத்தில் அவரால் அந்த நிலத்தை விற்க  முடியாமலும் போனது.

தனது மகளின் கல்விச் செலவுக்காக அந்த நிலத்தை அசையும் சொத்தாக மாற்ற விரும்பிய அனுவுக்கு இது நெருக்கடியான காலகட்டம். எனவே, கடன் வாங்குவதைத் தவிர, அவருக்கு வேறு வழியில்லை. எனவே, ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிற மாதிரியான அசையும் சொத்துகளை ஒருவர் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அசையா சொத்துகள் இருப்பின், நிதித் தேவை ஏற்படுகிற கொஞ்ச காலத்துக்குமுன், அதாவது     1 - 2 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே அவற்றை அசையும் சொத்தாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

அசையா சொத்துகள்

அசையா சொத்துகளை உடனடியாகப் பணமாக மாற்ற முடியாது. சொத்து, நிலம், வேளாண் சொத்துகள்,  கலைப் பொருள்கள், வியாபாரம் (கடை, பள்ளிக் கூடம், விற்பனை உரிமை அல்லது ஷோரூம்) போன்றவை இதில் அடங்கும். இந்தச் சொத்துகளை ஒருவரது சுறுசுறுப்பான வாழ்க்கைக் கட்டத்தில்தான் பயன்படுத்த முடியும். ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டால், வயோதிகம் தொடர்பான பிணிகள் காரணமாகவோ அல்லது பிள்ளை களுடன் வெளிநாட்டில் வசிக்க நேர்ந்தாலோ அசையா சொத்துகளை நிர்வகிப்பதே பெரும் சுமையாக மாறிவிடும். எப்போதும் மாறிக் கொண்டிருக்கிற விதிமுறைகள் & டிஜிட்டலாக்க முயற்சிகளுக்கேற்ப மாற்றுவதற்காகப் பல்வேறு அரசு அலுவலகங்களைத் தேடி ஓடுவது பெரும் சிரமமாகிவிடும்.

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சங்கர். அவரது மகன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டை  வாடகைக்கு விட்டு அதனை நிர்வகிப்பதுடன், மகனுக்குச் சொந்தமான வீட்டையும் வாடகைக்கு விட்டு நிர்வகித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வாடகைதாரர்கள் மாறுவதால், அந்த வீடுகளில் இன்னொரு வாடகைதாரரைக் குடியமர்த்த  கான்ட்ராக்டர்களுடன்,  இணைந்து வேலை செய்ய வேண்டி யிருப்பதுடன், வீட்டுப் புரோக்கரை யும் தேட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தச் சொத்துகளை நிர்வகிக்க அவர் எங்கும் செல்லாமல், இங்கேயே இருக்க வேண்டியிருக்கும். 

பெரும்பாலான முதியவர்கள் அவர்களது சொத்துகளை விற்க முடிவு செய்யப்படும்போது, கறுப்பு பணத்தைக் கையாள்வதில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர்களிடம் எதுவும் சொல்லாமலேயே,  உண்மை யான விலைக்கேற்ப அல்லாமல், மிகக் குறைந்த விலையைக் குறிப் பிட்டே பத்திரங்களைத் தயார் செய்து, அந்தப் பரிவர்த்தனைகளை ஏற்குமாறு நிர்பந்திக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டிலாகி, பெற்றோர் இருவரும் காலமாகிவிடுவது போன்ற  சந்தர்ப்பங்களில், சொத்துகளை மாற்றுவதும் விற்பதும் மிகவும் சிக்கலாகிவிடும். அவர்களுக்கு இது நேர விரயம் மட்டுமல்லாது, சட்ட நடைமுறைகள் குறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாதது, வரி செலுத்துவது, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவது, விற்ற பணத்தை டாலராகத் திரும்ப எடுத்துச்செல்வது குறித்த பேங்க் வழி முறைகள் சரி யாகத் தெரியாதது போன்றவற்றினால் அசையா சொத்துகளை விற்பது என்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிடும். 

முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்?

அசையும் சொத்துகளை எப்போது நகர்த்த வேண்டும்?

நீங்கள் வருவாய் ஈட்டும் காலங்களில், உங்களுடைய அசையும் முதலீடுகளின் ஒருபகுதி, உங்களது தனிப்பட்ட நிதித் தேவைகள் மற்றும் லட்சியங்களையொட்டி இருக்கும் வகையில் திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. இந்த முறையைப் பின்பற்றினால், ‘சொத்து ஏராளம், பணம் பற்றாக்குறை (Asset Rich, Cash Poor)’ என்ற நிலையை நீங்கள் ஒருபோதும் எதிர்கொள்ள நேராது.

மேலும், ஓய்வு பெற்றவுடன், உங்களிடம் கூடுதலாக இருக்கிற அசையா சொத்துகளை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாகப் பணமாக மாற்றிக்கொள்வது நல்லது.   அப்படிச் செய்தால் பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டிலாகும் போது, அங்கேயே அவர்களுக்குச் சொந்தமான சொத்தை நிர்வகிக்கவே முன்வருவார்கள்.

மாறாக, வளர்ச்சியடையாத  நமது புறநகரில் கிடக்கும் காலி மனைகளை நிர்வகிக்க அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு அதிக சொத்துகளை நீங்கள் தர நினைத்தால், அதனை உடனடியாகப் பணமாக மாற்றும் வகையில் (Liquid Assets) மாற்றிக்கொடுங்கள்.

இதுவரை நாம் பார்த்த மூன்று சொத்து முறைகளில்  பல்வேறு தேர்வுகள், ரிஸ்க்குகள் & ஒவ்வொரு சொத்துக்குமான வருவாய் போன்றவற்றைப் புரிந்துகொண்டு, உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களை (Goals) நிறைவேற்றுவதற்கேற்ற கலவையான சொத்துகளை (Right Asset Mix) உருவாக்குங்கள். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுங்கள்.

(ரகசியம் தொடரும்)

தமிழில்: பா.முகிலன்