பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகதான். ஆனால், பங்குச் சந்தைகளில் நாம் செய்யும் முதலீடுகூட சில சமயங்களில் நம் காலை வாரி விட்டுவிடுகிறது. டி.ஹெச்.எஃப்.எல், இந்தியா புல்ஸ், யெஸ் பேங்க் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்திருந்தன. இதனால், ஃபண்ட்களின் என்.ஏ.வி மதிப்பும் சரிவைக் கண்டிருக்கிறது.

எவ்வளவு முதலீடு?

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, டி.ஹெச்.எஃப்.எல் பங்குகளில் 15 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.1,110 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன. இதர மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.546 கோடிக்கு முதலீடு செய்துள்ளன. யெஸ் பேங்க் பங்குகளில் பெரிய மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.4,387 கோடிக்கும், இதர மியூச்சுவல் ்ஃபண்டுகள் மொத்தம் ரூ.4,810 கோடிக்கும் முதலீடு செய்துள்ளன.

பங்குகளின் விலை வீழ்ச்சி ஃபண்டுகளின் என்.ஏ.வி-யில் பெரிய பாதிப்பை உருவாக்குகிறது. உதாரணமாக, டாடா பி/இ ஃபண்டில் யெஸ் பேங்க் சுமார் ரூ.364 கோடி மதிப்புள்ள பங்குகள் இருக்கின்றன. யெஸ் பேங்க் பங்கில் 7% பங்குகளாக இருக்கிறது. ஒரே நாளில், யெஸ் பேங்க் 29% வீழ்ச்சியுற்றதும் டாடா பி / இ ஃபண்டின் என்.ஏ.வி 2% குறைந்தது.

இதேபோல், எடெல்வைஸ் ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் ரூ.119 கோடி மதிப்புக்கு யெஸ் வங்கியின் பங்குகள் இருக்கிறது. இது அந்த ஃபண்டின் 2.65% முதலீடாகும். ஒரே நாளில் இந்த ஃபண்டின் என்.ஏ.வி 1.1% குறைந்து காணப்பட்டது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க மற்றும் சீனா வர்த்தகப் போர் ஆகியவற்றின் காரணமாகவும் மற்றும் இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பதாலும், எந்தவொரு சிறிய எதிர்மறை செய்திகள் வந்தாலும் பங்குச் சந்தையில் இன்னும் சில திருத்தங்களைக் காணலாம்.

இந்தத் தருணத்தில் முதலீட்டாளர்கள், ஐந்து வருடங்களுக்கு முன்பு மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால் லாபத்தை எடுத்துவிடுவது நல்லது.

இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்த தொகையை விட்டுவிட்டு, லாபத்தை மட்டும் கடன் சார்ந்த நிதியில் வைத்திருக்கலாம். மேலும், எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை நிறுத்தாமல், சிறிது காலம் பொறுமையுடன் தொடர்ந்தால் நிச்சயம் இந்த முதலீடு அதிக வருமானத்தைக் கொடுக்கும்.

புதிய முதலீடுகள்?

குறைந்த காலத்தில் சந்தை எங்கே செல்லும் என்று தீர்மானிப்பது மிகவும் கடினம். எனவே, குறைந்தபட்ச ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், 2-3 வருட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பும்பட்சத்தில், கடன் சார்ந்த திட்டங்களான கிரெடிட் ரிஸ்க் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சற்று அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள், ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், சிறப்பாக நிர்வகிக்கப்படும் லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

- எஸ்.ஸ்ரீதரன் ,நிதி ஆலோசகர், wealthladder.co.in