Published:Updated:

சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?
சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?

பங்குச் சந்தைஏ.கே.பிரபாகர் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர்

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் காணப்பட்ட தொடர் சரிவு, அக்டோபர் தொடக்கத்திலும் நீடிப்பது, முதலீட்டாளர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. சந்தையின் சரிவுக்கு ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு ஆகிய சர்வதேச மேக்ரோ காரணிகள் முக்கியக் காரணமாக அமைந்த நிலையில், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடி, யெஸ் பேங்க் சிக்கல் போன்றவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதை மேலும் சரிவை நோக்கித் தள்ளியது. இந்த நிலையில், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தை மத்திய அரசு கைப்பற்றியதால், சந்தையில் அதன் தாக்கம் மற்றும் அது குறித்த கவலைகள் சற்றுக் குறையத் தொடங்கியிருந்தன.

ஆனாலும், அக்டோபர் 3-ம் தேதியன்று, ஒருபக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73 ரூபாய் அளவுக்குச் சரிந்த நிலையில், மறுபக்கம் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்தது முதலீட்டாளர்களிடையே குறிப்பாக, அந்நிய முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், அன்றைய தினம் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்று வெளியேறினர். அந்நிய முதலீட்டாளர்கள் மட்டும் சுமார் 1,550 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறினர்.

சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?

இதனால் சென்செக்ஸ் 36,000 புள்ளிகளுக்குக் கீழேயும், நிஃப்டி 10,900 புள்ளிகளுக்குக் கீழேயும் சரிவடைந்தன. இந்த நிலையில், இந்தச் சரிவு நிலை தற்போதைக்கு முடிவுக்கு வராது என்பதை உணர்த்தும் விதமாக அக்டோபர் 4-ம் தேதியன்றும் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்தது. சென்செக்ஸ் முந்தைய நாளைவிட அதிகமாக அதாவது, 826 புள்ளிகள் அளவுக்குச் சரிவைச் சந்தித்து 35,166-ஆகக் காணப்பட்டது. வெள்ளி யன்றும் சந்தைகள் அதிக சரிவை சந்தித்தன.

நிஃப்டியில் எய்ச்சர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, டி.சி.எஸ் மற்றும் கெயில் ஆகியவற்றின் பங்குகள் 2.5% சரிவடைந்த நிலையில், இவற்றுடன் சேர்த்து மொத்தம் 41 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இத்தனைக்கும் யெஸ் பேங்க், லார்சன் அண்டு டூப்ரோ, டாடா ஸ்டீல் மற்றும் வேதாந்தா போன்ற நிறுவனங்களின் பங்குகள் 0.53% முதல் 2.11% வரை ஏற்றம் கண்டன.

சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?

இதனிடையே, ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகக் கடன்   (இ.சி.பி) மூலம் 10 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டிக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது, எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதற்கான டாலர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பதால், வரும் நாள்களில் டாலர்களுக்கான தேவை குறையும். அப்படிக் குறைந்தால், அது ரூபாய் மதிப்பை உறுதியான நிலையில் வைத்திருக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், சந்தையின் தற்போதைய இறக்கம் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.   “இதுபோன்ற நிலை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவது இயல்புதான். இதற்குமுன்  2008-ம் ஆண்டில் இதேபோன்ற சந்தை சரிவை நாம் சந்தித்தோம். ஆனால், சந்தைச் சரிவுக்கான காரணங்களில் ஒன்றான கச்சா எண்ணெய்யின் விலை, அப்போது சர்வதேச சந்தையில், பேரல் ஒன்றுக்கு 140 டாலராக இருந்தது. இருப்பினும், தற்போது (அக்டோபர் 4) 86 டாலராகக் காணப் பட்டாலும், ரூபாய் மதிப்பு சரிவினால் 2008-ல் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமான அல்லது அதற்கு ஈடான பாதிப்புகளை நாம் உணர்கிறோம். இருப்பினும், பங்குச் சந்தையின் தற்போதைய இறக்கமான போக்கு இன்னும் 6 முதல் 7 மாதங் களுக்கு நீடிக்கலாம். ஒரு பெரிய கரெக்‌ஷனுக்குப் பின்னர் நிலைமை சீராகலாம். நாம் எப்போதும் சொல்கிறபடி முதலீட்டாளர்கள்,  தங்கள் முதலீடு களைப் பிரித்து, நீண்டகால அடிப்படையில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நல்லது” என்று தெரிவித்தார்.

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த இறக்கம் நல்லதொரு முதலீட்டு வாய்ப்பு!

- பா.முகிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு