Published:Updated:

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?
இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

மியூச்சுவல் ஃபண்ட்

பிரீமியம் ஸ்டோரி

மது பங்குச் சந்தை ரோலர் கோஸ்டர் போல் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்தச் சமயத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீடுகளைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருகிறார்கள். ஆனால், அவர்களே எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகளில் (Exchange Traded Fund, சுருக்கமாக, ETF) முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். அது என்ன இ.டி.எஃப்?

இடிஎஃப் என்றால்..?

இ.டி.எஃப் என்பதன் விரிவாக்கம் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்.  இதனைப் பங்குச் சந்தை  ஃபண்ட் என்று சொல்லலாம். பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை  ஆக்டிவ் ஃபண்ட் மற்றும் பேஸிவ் ஃபண்ட் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஆக்டிவ் ஃபண்ட் என்பது தனிப்பட்ட பங்குகளின் தரத்தை ஆராய்ந்து,   அவற்றில் முதலீடு செய்யப்படுவது. இந்த வகை ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜருக்குத் தனித்திறமை வேண்டும். சரியான பங்குகளில் முதலீடு செய்யவில்லை எனில், பெரும் நஷ்டம் வந்துவிடும். எனவே, சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப  சிறப்பாகச் செயல்பட்டு, அதிக வருமானம் தர ஃபண்ட் மேனேஜர் முயற்சி எடுப்பார். 

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

ஆனால், பேஸிவ் ஃபண்ட் என்பது ஏதாவது ஒரு பங்குச் சந்தை குறியீட்டை அச்சு அசலாக பின்பற்றி, அந்தக் குறியீட்டில்  இடம் பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். உதாரணமாக, பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ், என்.எஸ்.இ-யின் நிஃப்டி குறியீட்டில் இடம் பெறும் பங்குகளில் அதன் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப முதலீடு செய்யும் ஃபண்டுகளை  குறிப்பிடலாம்.  இந்த பேஸிவ் ஃபண்டுகளில் இரண்டு வகை. ஒன்று இண்டெக்ஸ் ஃபண்ட், மற்றொன்று இ.டிஎஃப்.

இந்த இ.டி.எஃப்-கள்,  பங்குகளைப் போல, பங்குச் சந்தையில் தினமும் வர்த்தகமாகக் கூடியது. பொதுவாக, ஆக்டிவ் ஃபண்டுகளில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும். அப்படிப்பட்ட ஏற்ற இறக்கம் பேஸிவ் ஃபண்டுகளில்  இருக்காது.  இந்த ஃபண்டுகளை நிர்வகிக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. இந்த அம்சம்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்திழுக்கிறது.

இ.டி.எஃப்-ல் ஈக்விட்டி, கோல்டு, கமாடிட்டி என பல வகைகள் இருக்கின்றன. அதாவது, இவற்றின் மூலஆவணங்கள், நிறுவனப் பங்குகளாகவோ, தங்கம் போன்ற கமாட்டி களாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ இருக்கும். சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீடுகளை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் ஈக்விட்டி இ.டி.எஃப்-கள்தான் இந்தியாவில் அதிகம்.

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

இண்டெக்ஸ் ஃபண்டுகள்

பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ், என்.எஸ்.இ-யின்  நிஃப்டி என ஏதாவது ஒரு இண்டெக்ஸை  எடுத்துக்கொண்டு அதில் இடம் பெற்றுள்ள  பங்குகளின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அதில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பங்குகளிலும் முதலீடு செய்வது இண்டெக்ஸ் ஃபண்ட் என்படும்.உதாரணமாக, சென்செக்ஸில் 30 பங்குகள் இருக்கின்றன. இந்த 30 பங்குகளிலும் அவற்றின் விகிதாசாரத்துக்கேற்ப முதலீடு செய்வதுதான் சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட். இந்த இண்டெக்ஸ் ஃபண்டில் ஃபண்ட் மேனேஜர்  அதிக ஆராய்ச்சி எதையும் செய்யத் தேவையில்லை.   ஒரு இண்டெக்ஸில் ஒரு பங்கு இருக்கும்வரை அதில் முதலீடு செய்யப்படும். என்றைக்கு அந்தப் பங்கு அந்த இண்டெக்ஸை விட்டு வெளியேறு கிறதோ, அப்போது அதிலுள்ள முதலீட்டையும் திரும்ப எடுத்துவிடுவார் ஃபண்ட் மேனேஜர். 

அதிக ரிஸ்க் காரணமாக, பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் தனிப்பட்ட பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்கள், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சந்தை சரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.  இண்டெக்ஸ் ஃபண்ட்களை மியூச்சுவல் ஃபண்ட் மூலம்தான் வாங்க, விற்க முடியும்.

இ.டி.எஃப் சாதகங்கள்

இதில் முதலீடு செய்ய  டீமேட் கணக்குத் தேவை. இதனை பங்குச் சந்தைகளின் மூலம்தான்  வாங்கவும், விற்கவும் முடியும்.

பங்குச் சந்தை வர்த்தக நேரத்தில் எப்போது வேண்டுமானலும் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்; விற்று, முதலீட்டைத் திரும்ப பெறலாம். பங்குகளைப் போன்றே இவற்றை எளிமையாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் 2.5% வரை இருக்கும். ஆனால், இண்டெக்ஸ் ஃபண்டு களில் 0.5%, இடிஎஃப்-ல் 0.2% எனக்  குறைவாகவே இருக்கும்.

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

வருமானம்

பங்குச் சந்தையில் தனிப்பட்ட பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு மிக அதிகமான லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ தரும். ஆனால், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் மிக அதிகமான லாபம் அல்லது நஷ்டத்தைத் தராமல், சராசரியான லாபம் தரவல்லது.  2018 மார்ச் மாதத்துடன் முடிந்த  ஓராண்டு காலத்தில் சுமார் 40% ஆக்டிவ் ஃபண்டுகள், அவற்றின் பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தந்துள்ளன. அதாவது, 60% இண்டெக்ஸ் ஃபண்டுகள் ஆக்டிவ் ஃபண்டுகளை விட சிறப்பாகச் செயல் பட்டிருக்கின்றன. கடந்த அக்டோபர் 11-ம் தேதி நிலவரப்படி, நமது பங்குச் சந்தைகளில் செயல்பட்டு வரும் டாப் 10 இ.டி.எஃப்-களின்  வருமானம், கடந்த ஐந்தாண்டுகளில் 12% - 27% வரை உள்ளன. பொதுவாக, சர்வதேச அளவில் ஆக்டிவ் ஃபண்டுகளைவிட இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகள் பிரிவில் பாஸிவ் ஃபண்டுகளைவிட ஆக்டிவ் ஃபண்டுகள் அதிக வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

சிறந்த போர்ட்ஃபோலியோ

நிஃப்டி இண்டெக்ஸை எடுத்துக்கொண்டால், 50 நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பங்குகள் 13 துறைகளைச் சேர்ந்தவையாக உள்ளன. இவற்றில் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், ஐ.டி.சி, மாருதி சுஸூகி போன்ற அந்தந்தத் துறைகளில் முன்னணியில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனப் பங்குகள் இடம் பிடித்துள்ளன. இவற்றின் அடிப்படையில் இயங்கும் நிஃப்டி  இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப் சிறந்த துறைகள் மற்றும் சிறந்த நிறுவனப் பங்குகளைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த போர்ட்ஃபோலியோவாக இருக்கிறது. அந்த வகையில், இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப் நல்ல வருமானம் தர அதிக வாய்ப்புள்ளது.   

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

சென்செக்ஸ், நிஃப்டி போன்ற இண்டெக்ஸ் களில் இடம்பெற்றிருக்கும் பங்குகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தருவதாக இருக்கும். இவற்றில் சில பங்குகள் சில சமயத்தில்  ஏறுமுகமாகவும், சில சமயம் இறங்குமுகமாகவும் இருக்கும். பல பங்குகளில் முதலீடு செய்தால்தான் சராசரியாக அதிக வருமானத்தைப் பெற முடியும். ஒரு குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் எல்லாப்  பங்குகளிலும் தனிப்பட்ட சிறு முதலீட்டாளர் களால் முதலீடு செய்ய முடியாது. மேலும், இண்டெக்ஸில் இடம்பெற்றிருக்கும் பங்குகள் திடீரென அதிலிருந்து வெளியேறவும் செய்யலாம்.  இதனைக் கவனித்து சிறு முதலீட்டாளர்கள் செயல்படுவது கடினம். எனவே, சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-கள் இருக்கின்றன.

இந்தியாவில் சுமார் 550  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. இதில்  இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப்-கள் உள்ளிட்ட 65 பாஸிவ் ஃபண்டுகளும் அடங்கும். இவை பெரும்பாலும் சென்செக்ஸ் அல்லது நிஃப்டி இண்டெக்ஸ்களின் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. ஒரு மிட்கேப் இண்டெக்ஸ் ஃபண்ட் திட்டமும், மூன்று பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டுகளும் உள்ளன.

பி.எஸ்.இ-யில் கோல்டு இ.டி.எஃப்-கள் உள்ளிட்ட 53 இ.டி.எஃப்-கள் பட்டியலிடப் பட்டுள்ளன. என்.எஸ்.இ-யில் 27 ஈக்விட்டி       இ.டி.எஃப்-கள், 15 குளோபல் இ.டி.எஃப்-கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைவான ஃபண்டு களே இருப்பதால், இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யப்பட்ட தொகை நம் நாட்டில் குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில், இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் தொகை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எஸ் அண்டு பி பி.எஸ்.இ இண்டைசீஸ் நிறுவனத்தின் இந்திய பிசினஸ் தலைவர்  கோயல் கோஷ் இ.டி.எஃப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

‘‘இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு ஏற்றது. இதில், சந்தைக் குறியீடுகளின் வருமானம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இ.டி.எஃப்-கள் குறைந்த ரிஸ்க், குறைந்த கட்டணம் அதிக வெளிப்படைத் தன்மை, எளிதில் பணமாக்கும் தன் மையைக்கொண்ட தாகும். இ.டி.எஃப்-க்கு அண்மைக் கால  உதாரணம், பாரத் 22 இ.டி.எஃப்-ஐ குறிப்பிடலாம். இதன் மூலம் மத்திய அரசு, அதன் பங்கு விலக் கலைக் குறைந்த செலவில் மேற்கொண்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் பி.எஃப் தொகை இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இதனால், இ.டி.எஃப் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்றார்.

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

யாருக்கு  ஏற்றது?

தற்போதைய நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பலரும்  ஆக்டிவ் ஃபண்டுகளை அதிகம் விரும்பு கிறார்கள்.  காரணம், அவை தரும் அதிக வருமானம். ஆனால், இந்த ஃபண்டுகள் குறுகிய காலத்தில் அதிக நஷ்டத்தையும் தரக்கூடியவை என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால், அதிக ஏற்றமோ, இறக்கமோ வேண்டாம்; சராசரியான வருமானம் போதும் என்பவர்கள் நீண்ட கால நோக்கில் இண்டெக்ஸ் மற்றும் இ.டி.எஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நீண்ட காலத்தில் எஃப்.டி-யைவிட சற்று அதிக வருமானத்தை வருமான வரிச் சலுகை யுடன்  எதிர்பார்ப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய் பவர்கள், மூத்த குடிமக்கள் போன்ற வர்கள் இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தை அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அவர்களின் போர்ட் ஃபோலியோவில் சுமார் 10-15 சதவிகித தொகையை இண்டெக்ஸ் ஃபண்ட் / இ.டி.எஃப் முதலீட்டுக்கு ஒதுக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

-சி.சரவணன்

இ.டி.எஃப், இண்டெக்ஸ் ஃபண்டுகளை எப்படித் தேர்வு செய்வது?

1. குறைவான டிராக்கிங் எரர்

இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப்-ல் உள்ள ஒரு பங்கின் விகிதம் எந்த அளவில் உள்ளதோ, அதே அளவில் அந்தப் பங்கை அதன் போர்ட்ஃபோலியோ இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். இண்டெக்ஸில் பங்குகளின் விகிதம் பல்வேறு காரணங்களால் தினமும் மாறும். அப்படி  மாறும்போது, இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்-ன்  போர்ட்ஃபோலியோ மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றும்போது விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதை ‘ட்ராக்கிங் எரர்’ (Tracking Error) என்பார்கள். இது குறைவாக இருப்பது நல்லது. அதாவது, இண்டெக்ஸ் வருமானம் மற்றும் இ.டி.எஃப்-க்கான வருமான வித்தியாசம் குறைவாக இருப்பது நல்லது.

2. குறைவான செலவு விகிதம்   

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், ரெகுலர் பிளான்களில் செலவு விகிதம் 2-2.5 சதவிகிதமாக இருக்கும். இதுவே டைரக்ட் பிளானில், 1-1.5 சதவிகிதமாக இருக்கும். இண்டெக்ஸ் ஃபண்டுகளில் இது சுமார் 0.5 சதவிகிதமாகவும், இ.டி.எஃப்-களில் சுமார் 0.2 சதவிகிதமாகவும்  உள்ளன. அந்த வகையில், செலவு விகிதம் குறைவதன்மூலம் கணிசமான அளவில் கூடுதல் வருமானம் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.5,000 வீதம் 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து,  அந்த முதலீட்டுக்கு ரெகுலர் பிளானில் 11% வருமானம் கிடைக்கிறது என்றால், டைரக்ட் பிளானில் 12% வருமானம் ஆண்டுக்குச் சராசரியாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.  அப்போது ரெகுலர் பிளானைவிட டைரக்ட் பிளானில் ரூ.2,13,800 அதிக வருமானம் கிடைத்திருக்கும்.  இதுவே இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப் எனில், இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும்.

3. வருமான ஒப்பீடு   

குறிப்பிட்ட இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப்  வருமானம் கடந்த 3, 5, 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்துள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

4. எளிதில் பணமாக்குதல்

முதலீட்டை நினைத்த நேரத்தில் பணமாக்கும் (லிக்விடிட்டி) வாய்ப்பு ஒரு இ.டி.எஃப் திட்டத்தில் உள்ளதா என்பதை ஆராய்ந்து, முதலீடு செய்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு