நிதிச் சேவையில் 35 ஆண்டுகள் பழுத்த அனுபவம் கொண்டவர் சுனில் சுப்ரமணியம். சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அண்மை யில் பதவியேற்றிருக்கும் இவர், நாணயம் விகடன் இதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்.டி-யானபிறகு அவர், சுந்தரம் சர்வீசஸ் என்கிற புதிய ஃபண்ட் வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் ஒரு புதிய ஃபண்ட் மூலம் திரட்டிய அதிக தொகை இதுவாகும். மேலும், இது நிறுவனத்தின் மூன்றாவது பெரிய புதிய ஃபண்ட் வெளியீடு இது.

பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு இறக்கம் கண்டுள்ளன. நிஃப்டி கடந்த மூன்று மாதங்களில் 8.50 சதவிகிதமும், சென்செக்ஸ் 7.80 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் லாபம் தரும் போர்ட்ஃபோலியோவை அமைப்பது எப்படி என சுனில் சுப்ரமணியத்திடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கிச் சொன்னார்.

ஈக்விட்டி ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு?

“பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் சார்ந்த டெப்ட் ஃபண்டுகள் முதலீட்டுக்குக் கிடைக்கின்றன. ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு பொதுவான ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அதாவது, ஒருவரின் வயதை 100-லிருந்து கழிக்க கிடைக்கும் எண்ணை சதவிகிதமாகப் பாவித்து, முதலீட்டுத் தொகையில் அந்த சதவிகிதத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவர வேண்டும். உதாரணமாக, ஒருவரின் வயது 30 என்று வைத்துக் கொள்வோம். 100-30 = 70 சதவிகிதத் தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது அதனை லார்ஜ்கேப் ஃபண்ட், மிட் கேப்கேப் ஃபண்ட், ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் செக்டோரல் ஃபண்ட் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

லார்ஜ்கேப் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் குறைவு, ரிட்டர்னும் குறைவு. மிட்கேப் ஃபண்டில் ரிஸ்க் நடுத்தர அளவு இருக்கும், வருமானமும் நடுத்தர அளவில் இருக்கும். ஸ்மால் கேப் ஃபண்டுகள் மற்றும் செக்டோரல் ஃபண்டுகளில் ரிஸ்க்கும் அதிகம், ரிட்டர்னும் அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கை முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் குறைக்கலாம்” என்றவர் சற்று நிறுத்தித் தொடர்ந்தார்.

முதலீட்டுக் காலத்துக்கேற்ப...

“மூன்றாண்டுகள் வரைக்கான குறுகிய கால முதலீடு என்கிற பட்சத்தில் முதலீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை லார்ஜ்கேப் ஃபண்டுகளிலும், 35 சதவிகிதத்தை மிட்கேப் ஃபண்டுகளிலும், மீதி 15 சதவிகிதத்தை ஸ்மால்கேப் மற்றும் செக்டோரல் ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும்.

இதுவே முதலீட்டுக் காலம் 3 - 5 ஆண்டுகள் எனில், முதலீட்டுத் தொகையில் 40 சதவிகிதத்தை லார்ஜ் கேப் ஃபண்டுகளிலும், 40 சத விகிதத்தை மிட்கேப் ஃபண்டு களிலும், மீதி 20 சதவிகிதத்தை ஸ்மால்கேப் மற்றும் செக்டோரல் ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டுக் காலம் 5 - 10 ஆண்டு கள் அல்லது அதற்கும் மேல் எனில், முதலீட்டுத் தொகையில் 25 சதவிகிதத்தை லார்ஜ்கேப் ஃபண்டு களிலும், 60 சதவிகிதத்தை மிட்கேப் ஃபண்டுகளிலும், 15 சதவிகிதத்தை ஸ்மால்கேப், செக்டோரல் ஃபண்டு களிலும் பிரித்து முதலீடு செய்யலாம்’’ என்றவரிடம், ‘‘இந்த ஃபண்டுகளில் எந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்?” என்று கேட்டோம்.

முதலீட்டு முறை

“சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் சிறு முதலீட்டாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் முதலீடு செய்துவந்தால் செல்வம் உருவாகும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து நீண்ட காலத்தில் அதிக லாபம் பார்க்க எஸ்.ஐ.பி முறைதான் சிறந்தது.

முதலீட்டுக் காலம் ஐந்தாண்டு களுக்குக் குறைவாக இருந்தால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் தயவு செய்துவர வேண்டாம். காரணம், பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கம்.

பொதுவாக, எந்த ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்றாலும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் மூலதன இழப்பு இருக்காது. குறைந்தது ஐந்தாண்டுகளுக்காகவாவது காத்திருக்க முடியும் என்றால் மட்டுமே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் முதலீடு செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருக்க முடியும்” என்றவர், நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் ஃபோலியோ எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னார்.

வருமானத்துக்கு வரி

“முதலீட்டில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் அக்ரசிவ் ஹைபிரீட் ஃபண்ட், கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்ட், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என வகைகள் இருக்கின்றன.

அக்ரசிவ் ஹைபிரீட் ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 70% பங்குகளிலும், மீதி 30% கடன் சார்ந்த ஆவணங் களிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டுக்கு ஈக்விட்டி வரிச் சலுகை கிடைக்கும். அதாவது, யூனிட்களை ஓராண்டுக்குமேல் வைத்திருந்து விற்கும்போது, மூலதன ஆதாயத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரி கிடையாது. மீதிக்கு 10% வரி கட்ட வேண்டிவரும்.

கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 65-100% கடன் சார்ந்த ஆவணங்களிலும், 0-35% நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டில் மூலதனத்துக்குப் பாதுகாப்பு இருக்கும். இதற்குக் கடன் ஃபண்ட் போல் வரிச் சலுகை உண்டு. அதாவது, மூன்றாண்டு களுக்கு மேல் யூனிட்களை வைத்திருந்து விற்றால், பண வீக்க விகித சரி கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் பங்குச் சந்தையின் சூழலுக்கேற்ப பங்குகளில் முதலீட்டினைக் கூட்டி, குறைத்து செய்யப்படும். இதற்கும் ஈக்விட்டி ஃபண்டுக் கான வரிச் சலுகை உண்டு.

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் பங்குச் சந்தையின் சூழலுக்கேற்ப 0-100 சதவிகிதம் நிறுவனப் பங்குகள், கடன் சார்ந்த ஆவணங்கள், ஆர்பிட்ரேஜ் முறையில் முதலீடு செய்யப்படும். மூன்று ஆண்டு கள் கழித்து முதலீட்டுத் தொகை தேவைப்படுவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். மூலதன ஆதாயத்தில் கடன் ஃபண்டுகளுக்கான வரி கட்ட வேண்டிவரும்’’ என்றவரிடம், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்கள் மற்றும் குறுகிய கால முதலீட்டுத் தேவைக்கு எது மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் ஃபோலி யோவை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டோம்.

தேவைக்கேற்ற முதலீடு

“அவசர கால செலவுக்கான தொகை மற்றும் குறுகிய கால தேவைக்கு லிக்விட் ஃபண்டில் போட்டு வைக்க வேண்டும். இதில் ஆண்டுக்கு 6-8% வருமானம் கிடைக்கும். வருமான வரிக்குப் பிறகு, வங்கி எஃப்டி-யைவிட லாபகரமாக இருக்கும். நடுத்தரக் காலத்துக்கு (3 ஆண்டுகள் வரை) ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 7-9% வருமானம் கிடைக்கும்.

மூன்றாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீடு எனில், ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (ஆண்டு வருமானம் 8-10%), பாண்ட் ஃபண்டுகள், கில்ட் ஃபண்டுகள் (ஆண்டு வருமானம் 8-10%) முதலீட்டுக்கு ஏற்றவை” என்றவர், இலக்கு சார்ந்த முதலீட்டு போர்ட் ஃபோலியோவை லாபகரமாக அமைப்பது குறித்து விளக்கினார்.

இலக்கு சார்ந்த முதலீடு

“பிள்ளைகளின் உயர்கல்வி (முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள்), பிள்ளைகளின் திருமணம் (முதலீட்டுக் காலம் 18-20 ஆண்டு கள்), ஓய்வுக்காலம் (முதலீட்டுக் காலம் 25-30 ஆண்டுகள்) என முதலீடு செய்து வருகிறார்கள். இந்த முதலீடுகளை எஸ்.ஐ.பி முறையில் மேற்கொள்வது லாபகரமாக இருக்கும். அடுத்து, இந்த முதலீடுகள் அனைத்தும் மிக நீண்ட காலத்துக்கு உரியவை என்பதால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யலாம். அதுவும் மிட்கேப் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்தால் இலக்குகளை எளிதில் அடைந்து விடலாம்’’ என்றார் சுனில் சுப்ரமணியம்.

இவர் சொன்னபடி, ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்ளலாமே!

- சி.சரவணன்

படங்கள்: தி.குமரகுருபரன்

சந்தையின் சூழ்நிலைக்கேற்ப முதலீடு செய்யும் ஃபண்ட்!

பங்குச் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப முதலீடு செய்யும் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யவிருப்பதாக சுனில் சுப்ரமணியம் தெரிவித்தார்.

‘‘இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 15-40% நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. 65-85% ஃபிக்ஸட் இன்கம் ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. ஆர்பிட்ரேஜ் மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் முதலீடும் மேற்கொள்ளப்படும். இந்த ஃபண்டில் சந்தை அதிகமாக இறங்கும் சூழல் காணப்பட்டால், ஃபிக்ஸட் இன்கம் ஆவணங்களில் முதலீடு அதிகரிக்கப்படும். சந்தையின் போக்கு ஏற்றத்தில் காணப்பட்டால் ஃபிக்ஸட் இன்கம் ஆவணங்களில் முதலீடு குறைக்கப்பட்டு, நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்படும். இந்த ஃபண்ட் மூலம் சராசரியாக நல்ல வருமானம் கிடைக்கும். வருமான வரியைப் பொறுத்தவரை, ஈக்விட்டி ஃபண்டுக்கு உரியதுதான் இதற்கும். இந்த ஃபண்டில் கடன் ஃபண்ட் போல் மூலதனப் பாதுகாப்பும் ஈக்விட்டி ஃபண்ட் போல் வரிச் சலுகையும் கிடைக்கும்” என்றார்.