Published:Updated:

காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!
காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

பங்குச் சந்தை

பிரீமியம் ஸ்டோரி

ம்மைச் சுற்றி இருப்பவர்கள் சில முட்டாள்தனங்களை உண்மை என்று நம்பினார்கள் என்றால், நாமும் அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடுவோம் என்பதை அறுபது வருடங்களுக்கு முன்னாலேயே சாலமன் ஆஷ் (Solomon Asch) என்பவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். சமூக ஊடகங்கள் இந்த விஷயத்தை மிகவும் பூதாகரமாக ஆக்கி, அது ஹைநெட் வொர்த் போர்ட்ஃபோலியோவிற்கு உலை வைத்துவிடுகிறது. இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், ஒட்டுமொத்தமாக சமூகவலைதளங்களை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறுவழியில்லை.

சமூக வலைதளங்கள் என்பது உபயோகிப்பாளர்களை அடிமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வடிவமைக்கப்பட்டது. இவை மனிதனுடைய நேரத்தை ஒரேயடியாக எடுத்துக்கொண்டு, அவனுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இலக்குகளை அடையவிடாமல் செய்துவிடுகிறது. இதை அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்தால், உங்கள் செயல்திறனை நீங்கள் சுலபமாக இழக்கவும், தன்நிலையை மறந்து உலகத்துடன் இணைந்திருக்கும் நிலையிலும் இருப்பீர்கள். நெட் வொர்க்கிங் டூல்களின் உபயோகம் என்பது அந்த அளவுக்கு உங்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது.’’

- கால் நியுபோர்ட் (Cal Newport) தன்னுடைய புத்தகமான ’டீப் வொர்க்’ (‘Deep Work’ 2016) சொல்லியிருப்பது.

காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

சமூக வலைதளம் = சமூகம் தரும் அழுத்தம்

1950-களின் இறுதியில் சாலமன் ஆஷ் என்னும் போலந்து நாட்டின் சைக்காலஜிஸ்ட் அமெரிக்காவில் செய்த ஆராய்ச்சி ஒன்றின் மூலம் எப்படி நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நம்முடைய முடிவெடுக்கும் விதத்தில் எந்தளவுக்குப் பாதிப்பை எற்படுத்து கிறார்கள் என்பது குறித்து திடுக்கிடும் முடிவுகளை வெளியிட்டார்.

ஒரு சிறிய அறையில் நீங்கள் ஏழு பேருடன் ஒரு மேசையை சுற்றி உட்கார்ந்திருக்கிறீர்கள். உட்கார்ந் திருக்கும் அத்தனை பேரிடமும் அடுத்த பக்கத்தில் அருகில் இருக்கும் இரண்டு படங்களையும் காண்பித்து, இந்த மூன்று கோடுகளில் எந்தக் கோடு இன்னொரு படத்தில் இருக்கிற கோட்டின் அளவில் இருக்கிறது என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? அதிலும் எல்லோரிடமும் கேட்டபிறகு, கடைசியாக உங்களிடம் கேட்டால்..? பலமுறை பல்வேறு கார்டுகளைக் காட்டி (அதுவும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் கடைசியாக) இதே கேள்வியைக் கேட்டால்... உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

அந்த அறையில் இருப்பவர்களில் பெரும்பான்மை யானவர்கள் சொன்ன பதிலை நீங்கள் சொல்லியிருப்பீர்களா அல்லது நீங்கள் உங்களுக்கு சரியென்று தோன்றியதை மட்டுமே சொல்லியிருப்பீர்களா? (சரியான விடை ‘சி’).

இதில் இன்னும் கொடுமையாக, பலசமயம் உங்களுடன் இருக்கும் ஏழுபேரும் தவறான விடையையே தேர்ந்தெடுக்கின்றனர் என்போம். உங்களுக்கு அது தவறு என திட்டவட்டமாகத் தெரிந்தாலுமே இத்தனை பேர் சொல்கிறார்களே, அது தவறாக இருக்க வாய்ப்பில்லை. ஊரோடு ஒத்துவாழ்வோம் என்று அதையே தேர்ந்தெடுக்க முயல்வீர்களா, இல்லையா? அல்லது, ‘‘நீங்கள் எதை வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். நான் எனக்கு சரியென்றுபடுவதையே சொல்வேன்’’ என்று உங்களுக்குப் பட்டதை பட்டென்று சொல்வீர்களா?

இதன்மூலம் ஆஷ் என்ன கண்டறிந்தார் எனில், அறையில் இருக்கும் அனைவரும் தவறானதையே தேர்தெடுத்தபோது, நீங்களும் கூட்டத்தின் முடிவையே ஆமோதிப்பீர்கள் என்பதைத்தான். பலமுறை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நபர்கள் தவறான விடையாக இருந்தாலும், கூட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கள் சொன்ன விடையையே சரியென்று சொன்னார்கள். 12 முறை மிகவும் கவனத்துடன் இந்தச் சோதனை செய்யப் பட்டதில்,  75% ஒருமுறையேனும் இந்தச் செயலைச் செய்தார் கள். ஆனால், கண்காணிப்பு செய்யப்பட்ட குழுவில் ஒரு சதவிகிதத்தினரே தவறான விடையைச் சொன்னார்கள். 

காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

மனிதர்கள் மற்றவர்களின் சிந்தனையுடன் ஒத்துப்போவதில் (சமூக வலைதளம் மற்றும் நண்பர்கள், சுற்றத்தினர் போன்றவர்களுடன்) இருக்கும் பேராபத்தினை ஆஷ் நமக்கு நன்கு அறிவுறுத்தியிருக்கிறார். இது, எதனால் இப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். சுற்றியிருப்பவர்கள் தவறானதைச் சரியென்று சொன்னால், நாமும் அதைச் சரி யென்று நினைத்துக்கொள்வது சுலபமான ஒன்றாக இருப்பதாலேயே என்பதே ஆஷின் வாதம். சமூக வலைதளங்கள் நம் தெளிவான சிந்தனாசக்தியையும், சுதந்திரமான செயல்பாட்டையும் பெருமளவில் மழுங்கடித்துவிடு கிறது என்பதை கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஸ்ட்ராட்டஜிஸ்ட்டான ஜேம்ஸ் வில்லியம்ஸ் எழுதிய ‘Stand Out of the Light: Freedom & Resistance in the Attention Economy’ புத்தகத்தின் மூலமாக நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தெளிவாகச் சிந்திப்பது எப்படி?

முதலில், சமூக வலைதளங் களை விட்டு வெளியே வருவதே தெளிவான சிந்தனையைப் பெறுவதற்கான முதல்படி. கால் நியுபோர்ட் எழுதிய டீப் வொர்க், டேனியல் கோல்மென் (Daniel Goleman) எழுதிய ‘Focus’, அண்ட்ரெஸ் எரிக்சன் மற்றும் ராபர்ட் பூல்  (Anders Ericsson & Robert Pool) இணைந்து எழுதிய ‘Peak’ போன்ற புத்தகங்கள் காட்டும் திசையும் அதுவேதான். நீங்கள் நிஜமான நுண்ணறிவைப்  பெறவேண்டு மென்றால், நீங்கள் அதீத கவனத்தை (நடைமுறைப்படுத்துதல் மற்றும் சீரிய சிந்தனை போன்றவை) அந்த விஷயத்தில் செலுத்த வேண்டி யிருக்கும். ஒரு மீட்டிங்கில் இருந்து இன்னொரு மீட்டிங் என்று தாவிக்கொண்டும், இடையிடையே வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில்களை அனுப்பிக் கொண்டும் இருந்தால் கவனம் என்பதைக் கைக்கொள் வதற்கு வாய்ப்பே இருக்காது. சிரத்தையுடன் கூடிய கவனத்தைக் கைக்கொள்ளாமல் செய்யும் எந்தக் காரியமும் பெரிய அளவிலான பலனை அளிக்க வாய்ப்பேயில்லை.

முதலீட்டை எப்படிப் பாதிக்கிறது?

ஆழ்ந்து பகுத்தறிந்து செய்யப் படுகிற சிந்தனைகளே நம்முடைய செயல்பாட்டின் எல்லைகளை வகுக்கும் எல்லைக்கோடுகளை (Lakshman Rekha) தெளிவாகப் போடக்கூடியவையாகும். இந்தவித எல்லைக்கோடுகளே நம்மை நமக்கு எவையெல்லாம் நன்றாகத் தெரியும், எதற்கெல்லாம் நாம் அடுத்தவர்களை நம்பவேண்டியிருக்கும் என்பதைத் தெளிவாக உணரவைக்கும்.

எங்கள் நிறுவனத்தில் நாங்கள் இந்த எல்லைக்கோடுகளை எவ்வாறு வரையறுத்துள்ளோம் என்று  பார்த் தால், பின்வரும் நான்கு படிநிலை களே ஒரு நல்ல முதலீட்டிற்கு உதவுவதாக இருக்கும்.

முதல்படி: கடந்த பத்து வருடங் களில் ஒரு குறிப்பிட்ட அளவில் வளர்ந்திருக்கும் நிறுவனங்களையே கணக்கில் கொண்டும் (உதாரணத் திற்கு, வருடத்திற்கு 10% என்கிற அளவில் விற்பனை அளவு உயர்ந் திருக்க வேண்டும் என்பதைப் போன்றது), ஒரு குறிப்பிட்ட அளவி லான லாபம் இருக்க வேண்டும் (உதாரணத்திற்கு, வரிக்குப் பின்னால் RoCE என்பது 12% இருக்க வேண்டும்).

காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்!

இரண்டாம்படி: படிநிலை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்குள் இருக்கும் பங்கு கள் நம்முடைய வாடிக்கை யாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு உகந்ததாக இருக்குமா? அதாவது, என்னதான் மேலே சொன்ன சட்டதிட்டத்தில் பொருந்தினாலும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதிலும் ரிஸ்க் என்பது இருக்கவே செய்யும். அந்த ரிஸ்க்கை எடுக்க முதலீட்டாளர் தயாராக இருக்கிறாரா, அப்படி இல்லையென்றால் அவருடைய முதலீடுகள் அரசு கடன் பத்திரங்களிலேயே செய்யப்படவேண்டும்.

மூன்றாம்படி: இந்த இரண்டு படிநிலைகளும் சரிப்பட்டு வந்தாலுமே இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் ஒருவேளை வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து, அவர் முதலீடு செய்யத் தடை செய்யப்பட்ட பங்குகளாக அவை இருந்துவிட்டால் சிக்கல் இல்லையா? அவ்வப்போது பல பங்கு களில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்ய தடை வந்துபோகவே செய்கிறது. அதனால் இந்தப் படிநிலையையும் மனதில் கொள்ளவேண்டும்.

நான்காம்படி: முதலீட்டாளருக்கு இந்த முதலீடு தரும் லாபம் என்பது தொடர்ந்து போதுமானதாக இருக்குமா என்பதையும் பார்த்துக்கொண்டே, தொடர்ந்து முதலீடுகளைச் செய்ய வேண்டும். ஏனென்றால், காலப்போக்கில் சிலர் கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம் என்ற மனநிலையும், பணரீதியான சுதந்திரத்தையும் பெற்றுவிடக்கூடும்.

புத்திசாலித்தனமும், சரியான நிலைப்பாட்டை எடுப்பதும்  வெவ்வேறு குணாதிசயங்களாகும். நம்மிடம் இருக்கும் புத்திசாலித்தனம் என்பது கூட இருப்பவர்களால் கூடவோ, குறையவோ சற்றும் வாய்ப்பில்லை. அதேசமயம், சரியான நிலைப்பாட்டை எடுப்பதென்பதில் நம்முடன் இருப்பவர்களின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கவே செய்யும். எனவே, சில சட்டதிட்டங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டே நாம் முதலீட்டில் இறங்கவேண்டும். ஏனென்றால், சட்ட திட்டங்களே பங்குச் சந்தை குறித்த இரைச்சல்களில் இருந்து நம்மைக் காப்பாற்றி சரியான முடிவுகளை எடுக்க உதவி செய்யும்!

(முதலீடு வளரும்)

- செளரப் முகர்ஜி நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு