Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

வாரத்தின் தொடக்கத்தில் பங்குகளின் விலை உயர்வினால், சந்தை சற்று ஏற்றமடைந்து,  நிஃப்டி 10600 புள்ளிகளைத் தாண்டியதால்  உற்சாகம் ஏற்பட்டது.  தீபாவளிப் பண்டிகை காரணமாக இடையில் ஒரு தினம் வர்த்தகம் நின்று,  மீண்டும் தொடங்கியபோதும்  இந்த உற்சாகம் நீடித்தது.

பங்குச் சந்தைக்குக் கிடைத்த நல்ல செய்தி என்னவென்றால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடைந்ததுதான். கச்சா எண்ணெயின் விலை, சமீபத்திய உயர்விலிருந்து 20% அளவுக்குச் சரிவடைந்ததுடன், பொருளாதாரம் பற்றிய பார்வையும் திடீரென மேல்நோக்கி உயரத் தொடங்கியதும் சந்தையின் போக்கில் மகிழ்ச்சியை உருவாக்கியது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும்,  ரூபாய் மதிப்பும் சற்று ஏற்றமடைந்த அதே வேளையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பங்கு முதலீடு  குறையாமல் இருந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் விற்பனை குறைந்ததும்,  கார்ப்பரேட் நிறுவனங்களின் நல்ல காலாண்டு முடிவுகள் வரத்தும்  வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

மொத்தத்தில், இந்தக் காரணிகளெல்லாம் சென்டிமென்டை பாசிட்டிவாக வைக்கப் போதுமானதாக இருந்தது. எனவே, நாம் இன்னும் நல்ல முன்னேற்றத்தை எதிர்நோக்கி இருக்கலாம். ஆனாலும், விரைவிலேயே தேர்தல்கள் அதன் நிழலைப் பரப்பத் தொடங்கி விடும் என்பதால், அரசியல் கூச்சல்கள் வழக்கம்போல் இருக்கும். 

வரவிருக்கும் வாரங்களில், பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் முடிவுகள் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அது சந்தையின் செயல்பாடுகளில் ஒருவித சலிப்பை ஏற்படுத்தலாம்.
நிஃப்டி, அதன் 200 நாள் மூவிங் ஆவரேஜான 10780 புள்ளிகளை  நோக்கிச் சீராகச் சென்று கொண்டி ருந்ததைப் பார்க்க முடிந்ததோடு, வங்கிப் பங்குகளும் சற்று புத்துயிர் பெற்றதைக் காண்பித்தன. இது, நிஃப்டியின் முன்னேற்றம் இன்னும் அதிகமாகத் தொடரலாம் என்பதையே காட்டியது. ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளும்கூட புத்துயிர் பெற்றதைப் பார்க்க முடிந்ததோடு, சென்டி மென்ட்டுக்கும்கூட அது நல்லதாக இருக்கிறது. 

சந்தை முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வைக்கும் அடி சற்று  மெதுவாக இருந்தாலும், அதன் போக்கு தற்போது மேல் நோக்கிச் செல்லத் தயாராகவே இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில், வாரத்தின் இடையில் இறக்கங்கள் இருந்தால், அதை வாங்குவதற்கான சந்தர்ப்பமாக வைத்துக் கொள்ளலாம் என எழுதியிருந்தோம். தற்போது முடிவடைந்துள்ள வாரத்தில், அந்த வாங்கு வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை.

அநேகமாக, வரும் வாரத்தில் அப்படி எதையாவது நாம் பார்க்கலாம். அப்படியான இறக்கங்கள், தொடர்ந்து நல்ல பங்குகளை வாங்குவதற்கான சந்தர்ப்பங்களாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கெய்தான் கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ்

தற்போதைய விலை: ரூ.14.20

வாங்கலாம்

பெரும்பாலான கெமிக்கல் நிறுவனப் பங்குகள் விலை நல்ல நிலையில் தொடர்கின்றன. குறிப்பிட்ட சில கெமிக்கல் பங்குகளின் ஏற்றத்திற்கு சீனாவின்  வளர்ச்சி உதவுகிறது. அதன்  விளைவை சார்ட்டிலும் காண முடிகிறது. கெய்தான் கெமிக்கல்ஸ், உரம் மற்றும் கந்தக அமிலம் தயாரிப்பில் ஈடுபடுகிறது. இந்த அமிலம் விற்பனைக்குச் சாதகமான சூழல் இருப்பதால் அதன் விலையில் உயர்வைக்காண முடிகிறது.

இந்த நிறுவனப் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவு முடிவுக்கு வந்து தற்போது நல்லதொரு பாட்டம் உருவாகி அதிலிருந்து பிரேக்அவுட்டாகி வலுவாக மேலேறுவதைக் காணமுடிகிறது. இதன் பங்கு விலை வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், ரூ.20-25 வரை உயரும் என எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.10 என வைத்து முதலீடு செய்யலாம்.

அரோபிந்தோ ஃபார்மா (AUROPHARMA)

தற்போதைய விலை: ரூ.815.30

வாங்கலாம்

பல முன்னணி ஃபார்மா பங்குகள், சந்தையில் வலுவாக அடிவாங்கியுள்ளன. ஆனால், அவற்றில் அரோபிந்தோ ஃபார்மா மட்டும் விதிவிலக்கு. இதன் விலையில் ஏற்பட்ட இறக்கம் ஓர் அளவோடு மட்டுப்படுத்தப்பட்டது.

விலைச் சரிவின்போது, இதன் விலை, ஒரு முக்கோண வடிவ பேட்டர்னை உருவாக்கியுள்ளது. தற்போது இதன் விலை பிரேக்அவுட்டாகி சமீபத்திய தேக்க நிலையையும் தாண்டி மேல்நோக்கி ஏறுவதைக் காண முடிகிறது. இந்த ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

 இந்த பிரேக் அவுட் வெற்றிகரமாக அமைந்து பங்கு விலை மேலும் உயரக்கூடும். குறுகிய கால இலக்கு விலை ரூ.850 வைத்து வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.795.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாடா மோட்டார்ஸ் (TATAMOTORS)

தற்போதைய விலை: ரூ.195.25

வாங்கலாம்

சந்தையிலுள்ள பெரும்பாலானவர்கள், ஒரு பங்கின் மதிப்பைக் கண்டறியும்போதெல்லாம் எதிர்பார்த்ததுபோல் செயல்படாமல் அதன் விலை கீழ்நோக்கிச் சரிவடைகிறது.

சமீபத்திய மோசமான முடிவுகளால் பல பங்குகளின் நிலை, மோசமாக மாறிவிட்டன. ஆனால், தற்போது இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்ன் மாற்றத்தின் அறிகுறியைக் காட்டுகிறது.  பங்கின் விலை மீட்சி சிறிதுகாலம் தொடருமென எதிர்பார்க்கலாம். குறுகிய கால இலக்கு விலை ரூ.225 என வைத்துக்கொள்ளவும்.  ஸ்டாப்லாஸ் ரூ.190 வைத்துக் கொள்ளவும்.

- டாக்டர் சி.கே. நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!