வெற்றிகரமான முதலீட்டுக்கு அறிவு என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் ஒழுக்கத்தைக் குறித்தும், நேரத்தைக் குறித்தும் பார்ப்போம்.

ஒழுக்கம் எப்போது எளிது?

வெற்றிகரமான முதலீட்டுக்கு முதலீட்டு ஒழுக்கம் மிகவும் அவசியம். சரியான சொத்தில் நீண்ட காலத்துக்கு நாம் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அதற்கு நிச்சயம் நல்ல வருவாய் கிடைக்கும். உதாரணமாக, சுரேஷ் என்பவரை எடுத்துக்கொள்வோம். ஆசியராக வேலை பார்த்த அவர், 15 ஆண்டு காலத்துக்கு வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ-யைக் கட்ட வேண்டியுள்ளது. அவர், தனது மாதாந்திர இ.எம்.ஐ-யைத் தவறாமல் கட்டி வந்தால்தான், கடன் தவணைக் காலம் முடிவடையும்போது, அந்த வீடு அவருக்குச் சொந்தமாகும். ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ கட்டுவது மிகப் பெரிய பொறுப்பு என்பது மட்டுமல்ல, முதலீட்டாளர் தரப்பில் அதற்கு ஒழுக்கமும் தேவை.

அதேபோன்றுதான், சர்மிளா என்ற பெண்ணை எடுத்துக்கொள்வோம். அவர், தனது பெற்றோரின் மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத்தைக் கட்டி வருகிறார். ஆண்டு பிரீமியத்தை அவர் ஒழுக்கமான முறையில் கட்டினால்தான், அவரது பெற்றோரால் மருத்துவமனை பயன்களைப் பெற முடியும்.

நம்மில் பெரும்பாலானோர், சுரேஷ் மற்றும் சர்மிளாவைப் போன்று, நமது மாதத் தவணைக் கட்டணங்களை எப்படியோ கஷ்டப்பட்டு சரியான முறையில் கட்டிவிடுகிறோம். அப்படிக் கட்டினால்தான், சொத்துகளையோ அல்லது மருத்துவமனை தொடர்பான பலன்களையோ நம்மால் அனுபவிக்க முடியும்.

இந்த இரண்டு பேர் விஷயத்திலும், ஒரு மூன்றாவது நபர் (வங்கி அல்லது இன்ஷூரன்ஸ் கம்பெனி) மூலம் கடன் / பிரீமியம் தவணையைத் தவறாமல் கட்டுவதற்கான ஒழுக்கம், அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஒழுக்கம் எப்போது கடினம்?

தற்போது, கதிர் என்ன செய்தார் என்று பார்ப்போம். அக்கவுன்டன்டாகப் பணிபுரியும் அவர், ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி முறையில் 25,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார். சமீபத்தில் பங்குச் சந்தை சரிவுக்கு உள்ளானதால், அவரது தற்போதைய போர்ட்ஃபோலியோ 12% கீழிறங்கியது. எனவே, அவர் தனது எஸ்.ஐ.பி-யை நிறுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறார். அவர் தனது எஸ்.ஐ.பி-யை நிறுத்தினால், அவருக்கு இழப்பேதும் ஏற்படாது என்றாலும், நீண்ட கால அடிப்படையிலான அவரது செல்வ வளர்ச்சிக்கு அது தடை போடுவதாக அமையும்.

மேற்சொன்ன இரண்டு உதாரணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சுரேஷ் அல்லது சர்மிளா தங்களது தவணைக் கட்டணங்களை நிறுத்தினால், அவர்கள் தங்கள் வீடு மற்றும் மருத்துவமனை தரும் பலன்களை இழக்க நேரிடும். ஆனாலும், கதிருக்கு இது பொருந்தாது. ஏனெனில், எஸ்.ஐ.பி என்பது தாமாகவே முன்வந்து கட்டுவது. குறிப்பிட்ட கால தவணையில் அதைக் கட்ட வேண்டும் என்று யாரும் அவரைக் கட்டாயப் படுத்தவில்லை. ஆனாலும், அவர் எஸ்.ஐ.பி மூலம் ஒழுக்கமான முறையில், நீண்ட காலத்துக்குத் தனது முதலீட்டைத் தவறாமல் செலுத்துவது இன்னும் சவாலாக இருக்கிறது.

முதலீட்டுக்கு உதவும் ஒழுக்கம்

இந்தச் சூழலில், கதிர் தனது கவனம் முழுவதை யும் தன் நீண்ட கால இலக்குகள்மீது வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் அவர் தனது நிதி இலக்குகளை நிறைவேற்ற விரும்பினால், சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றிக் கவலைப் படாமல், அவர் தனது எஸ்.ஐ.பி மூலமான முதலீட்டைத் தொடர வேண்டும். சந்தையின் குறுகிய கால ஏற்ற இறக்கம், அவரது முதலீட்டு அணுகுமுறையைத் தீர்மானிக்க அனுமதித்தால், அவரது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, அவரிடம் போதுமான பணமில்லாமல் போகலாம்.

நேரம்தான் பணம்

நேரத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள, சர்மிளா (வயது 25), கதிர் (வயது 35) ஆகியோரது முக்கியமான வாழ்க்கை லட்சியத்தை நாம் பார்ப்போம். அவர்கள் இருவருமே, 55 வயதில் ஓய்வு பெற்றுவிட வேண்டும் எனவும், இன்றைய செலவு மதிப்பில் மாதம் ரூ.50,000 ஓய்வுக்கால ஊதியம் பெற வேண்டும் எனவும் லட்சியங் களாகக் கொண்டுள்ளனர். அவரவருக்குரிய ஓய்வுக்கால இலக்குகளை அடைய, சர்மிளா மாதனமொன்றுக்கு ரூ.16,000 சேமிக்க வேண்டும். அதேசமயம் கதிர், மாதம் ரூ.30,000 சேமிக்க வேண்டும். ஏனெனில், கதிரைவிட சர்மிளா 10 வயது இளையவர். அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் உள்ளன. அதே சமயம், கதிர் ஓய்வுபெற 20 வருடங்கள் மட்டுமே உள்ளன. இருவருக்குமான கால வித்தியாசம் 10 ஆண்டுகள் மட்டுமே என்ற போதிலும், கதிர் இரண்டு மடங்கு சேமிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், அவரது பணம் பல்கிப் பெருக குறைவான கால அவகாசமே உள்ளது.

சர்மிளா போன்ற இளம் வயதினர், 25 வயதில் 16,000 ரூபாயைச் சேமிப்புக்காக ஒதுக்கும் அளவுக்கு வருமானம் உடைய வராக இல்லாமல் இருக்கலாம். அப்படியான சூழலில், அதற்கு மாற்றாக ரூ.8,000 போன்ற சிறிய தொகையுடன்கூட அவர்கள் தங்கள் முதலீட்டைத் தொடங்கி, இலக்கை அடைவதற்கு ஒவ்வோர் ஆண்டும் 10 - 15% வரை தங்கள் முதலீட்டை அதிகரித்து வரலாம்.

அதேபோன்றே, கதிர் அவரது மகளின் உயர் கல்விச் செலவுக் காக, ரூ.10 லட்சம் (இன்றைய மதிப்பில்) சேமிக்க விரும்பினால், அவரது மகளின் 10 வயதிலிருந்தே முதலீட்டைத் தொடங்குவது அவசியம். இதில், கதிர் மாதம் ஒன்றுக்கு 15,000 ரூபாயை மட்டும் சேமித்தால் போதுமானது. ஒருவேளை அவர் மகள் ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும் வரை சேமிப்பைத் தள்ளிப்போட்டால், மாதம் ஒன்றுக்கு 35,000 ரூபாய் அல்லது அதற்குமேல் சேமிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், அவரது பணம் வேலை செய்யவும், பல மடங்காகப் பெருகவும் தேவையான கால அவகாசத்தை அவர் தரவில்லை.

ஆகமொத்தத்தில், நேரம்தான் பணம். உங்களது நிதி இலக்கு களை அடைய உங்களுக்கு லாட்டரி பரிசு அடிக்கவோ அல்லது நீங்கள் ஒரு லட்சாதிபதி யாக வேண்டும் என்றோ அவசியமில்லை. நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம் என்ன வெனில், உங்கள் பக்கம் அறிவு, ஒழுக்கம் மற்றும் நேரத்தைக் கொண்டிருந்தால், சிறிய அளவு பணத்தைக் கொண்டுகூட, உங்களது வாழ்க்கை லட்சியங்கள் அனைத்தையும் உங்களால் நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதுதான்!

(ரகசியம் தொடரும்)

- லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam.blogspot.in

தமிழில்: பா.முகிலன்