முதலீட்டாளர்களைப் பொதுவாக, இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சேமிப்பாளர் (saver) என்பது ஒருவகை, முதலீட்டாளர் (investor) என்பது இன்னொரு வகை. ஒருவரால் 100% சேமிப்பாளராகவோ அல்லது 100% முதலீட்டாளராகவோ இருக்க முடியாது. எப்படி என்று பார்ப்போமோ?

நம்மில் சிலர் கடன் வாங்குவதில் விருப்பமில்லாமல் இருக்கலாம். அதனால், ஒரு பொருளை வாங்குவதற்குப் போதிய பணத்தைச் சேர்த்ததற்குப்பின்னரே அந்தப் பொருளை வாங்குவோம். ஜெய் என்ற வெளிநாட்டுவாழ் இந்தியர், தான் வீடு வாங்கவேண்டும் என்று முடிவு செய்தபோது, வங்கியில் கடன் எதுவும் வாங்கவில்லை. தன்னுடைய வருமானத்தின் மூலம் வீடு வாங்குவதற்குரிய முழுத் தொகையான 50 லட்சம் ரூபாயை சேமித்தபின் வீடு வாங்கினார். ஜெய், செய்தது சேமிப்பு. எனவே, அவர் நிச்சயமாக ஒரு சேமிப்பாளர்தான்.

ஜெய், வீடு வாங்குவதற்குத் தேவையான ரூ.50 லட்சத்தைச் சேமிக்க ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டின் விலை பெரிய அளவில் ஏறியிருக்கலாம். 50 லட்சம் ரூபாய் வீட்டை வாங்குவதற்கான பணத்தை 2005-லிருந்து சேமிக்கத் தொடங்கியிருந்தார் என்றால், 2010-ல் அதே வீட்டின் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கும்.

எப்போது சேமிப்பாளராக இருக்க வேண்டும்?

வீட்டு உபயோகப் பொருள்கள், கேட்ஜெட்ஸ் மற்றும் வாகனங்கள் (Depreciating Assets) வாங்கும்போது மட்டும் சேமிப்பவர் களாக இருப்பது பயனுள்ளதாக இருக்கும். பொருள்களை வாங்குவதற்கான தொகை 100% இல்லை என்றாலும்கூட, 70 சதவிகிதத் தொகையைச் சேமித்துக்கொண்டு நீங்கள் வாங்க விரும்பிய பொருளை வாங்கலாம்.

இப்படிச் செய்யும்போது உங்களின் கடன் தொகை / இ.எம்.ஐ கட்டும் அளவு கணிசமாகக் குறையும். இதனால், நீங்கள் வேகமாக மீதித் தொகையைக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்த முடியும்.

எப்போது முதலீட்டாளராக இருக்க வேண்டும்?

வீடு போன்ற சொத்துகளை (Appreciating Assets) வாங்கும்போது முதலீட்டாளராக இருப்பதுதான் நல்லது. ஒரு முதலீட்டாளர் வீட்டை வாங்குவதற்காகக் குறைந்த அளவு முன்பணம் செலுத்திவிட்டு, மீதித் தொகையைச் செலுத்த கடன் வாங்கிக் கொள்ளலாம்.

2005-ல் ஜெய் வீடு வாங்க முடிவெடுத்த போது அவரிடம் 10 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஒரு வீடு வாங்குகிறார். மீதத் தொகையான 40 லட்சம் ரூபாயை 7 ஆண்டுகள் வீட்டுக் கடன் வாங்கி, அந்த வீட்டை வாங்குகிறார். 13 லட்சம் ரூபாய் வட்டியோடு சேர்த்து அவரது வீட்டுக் கடனை அடைக்கிறார் என்று வைத்துக்கொண்டால், அவரது சொத்து மதிப்பு இப்போது 80 லட்சம் ரூபாயாக இருக்கும். இதுவும் முதலீட்டின் மூலம் அவர் பெற்ற லாபம்தானே!

அசையும் / அசையா சொத்துகளை அதன் மதிப்பு உயர்வதை வைத்தோ குறைவதை வைத்தோ முதலீட்டாளராகவோ, சேமிப்பாளராகவோ இருக்கலாம் என்று முடிவுசெய்வது எளிது. ஆனால், நிதிச் சார்ந்த சொத்துகளை வாங்குவதில் எப்படி முடிவு எடுப்பது, அதன் மதிப்பு உயரும் என்றோ, குறையும் என்றோ எப்படி முடிவு செய்வது? இந்த ரகசியம் 8-ம் வகுப்பு கணக்குப் பாடப் புத்தகத்திலேயே இருக்கிறது..

தனிவட்டி Vs கூட்டு வட்டி

நிதித் திட்டம் தொடர்பான முதலீட்டை நீங்கள் வாங்கும்போது, அது தனிவட்டி (simple interest) அல்லது கூட்டுவட்டி (compound Interest) என்ற இந்த இரண்டில் எதன் அடிப்படையில் வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். தனி வட்டி முதலீட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வங்கி டெபாசிட். அதே வங்கி அதிக கூட்டு வட்டி முதலீட்டையும் வைத்திருக்கிறது, அது மிகவும் பிரபலமான தொடர் வைப்பு (ஆர்.டி) திட்டமாகும்.

தனிவட்டியின் முக்கிய அம்சங்கள்

1. மூலதன அதிகரிப்பு (capital appreciation) இருக்காது. முதலீட்டுத் தொகை ரூ. 1 லட்சம் என்பது 10 ஆண்டு முடிவிலும் ரூ.10 லட்சமாக இருக்கும்.

2. வழக்கமாக, வட்டி மாதம்/காலாண்டு/ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

3. பணவீக்கத்தால் 10 ஆண்டுகளில் வட்டிப் பணம் அதன் மதிப்பை இழக்கும்.

4. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு பத்திரங்கள், மணிபேக் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் / டேர்ம் டெபாசிட்டுகள் போன்றவையெல்லாம் தனிவட்டி தரும் முதலீடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்.

கூட்டு வட்டியின் முக்கிய அம்சங்கள்

1. நீண்ட காலத்தில் மூலதனம் பெருகுகிறது. ஆண்டுக்குச் சராசரியாக 8% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் ரூ.1 லட்சம் என்பது பத்து ஆண்டுகளில் ரூ.2.15 லட்சமாக அதிகரிக்கிறது.

2. நீண்ட காலத்தில், பணவீக்கத்தை முறியடிக்கிறது; பணம் அதன் உண்மையான மதிப்பில் உயர்கிறது.

3. ஒருவரின் வாழ்க்கையில் முதலீட்டுப் பெருக்கம் (Accumulation) மற்றும் ஓய்வூதிய (Retirement) நிலைகளுக்கு ஏற்ற தாகக் கூட்டு வட்டி அளிக்கும் முதலீடுகள் இருக்கின்றன.

வங்கிகளின் தொடர்வைப்புத் திட்டங்கள், தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள், பணி யாளர் சேமநல நிதி (இ.பி.எஃப்), பொது சேமநல நிதி(பி.பி.எஃப்) மற்றும் மூலதன முதலீட்டுத் திட்டங்கள் கூட்டு வட்டி / வருமானம் அளிக்கும் முதலீட்டிற் கான எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு சிறந்த முதலீட்டாளர் ஆண்டு தோறும் கூட்டு வளர்ச்சி தரும் முதலீட்டையையே தேர்வு செய்வார். மூலதனம் மற்றும் வட்டி / வருமானம் நம்முடைய முதலீட்டைப் பல மடங்காக்கும்.

நீங்கள் சேமிப்பாளரா அல்லது முதலீட்டாளரா?

சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்குமான வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும் நன்கு தெரிந்துகொண்டபின்பு, நம்மில் பலர் முதலீட்டாளராக இருக்கத்தான் விரும்பு கிறோம். ஆனால், உண்மையில் நம்முடைய செயல்பாடுகள் எல்லாம் சேமிப்பாளருக்கு உரியதாகவே இருக்கிறது. நீங்கள் யார் என்ற ரகசியத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் முதலீட்டில் உங்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, அதுவாக இருக்கலாம்.

வயலிலிருந்து அறுவடை செய்த நெல்லை அப்படியே எடுத்து வைத்திருந்தால், அது சேமிப்பு. காரணம், அந்த நெல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், விதைக்கப்படாத அந்த நெல்லிலிருந்து புதிய நெல் வராது. ஆனால், அந்த நெல்லை எடுத்து வயலில் விதைப்பது முதலீடு. ஒரு நெல்லை விதைத்தால், அந்த நெல்லிலிருந்து நூற்றுக்கணக்கான நெல்கள் வரும். ஒரு நெல் நூற்றுக்கணக்கான நெல்களாக மாறுவதுதான் கூட்டு வளர்ச்சி.

பொருளாதார ரீதியாக நீங்கள் வெற்றி அடைய, கூட்டு வளர்ச்சி தரும் முதலீடு களைக் கண்டுபிடித்து உங்கள் போர்ட் ஃபோலியோவில் சேர்த்து, உங்கள் முதலீடு பன்மடங்காக உயர வாழ்த்துகள்!

(நிறைவு பெற்றது)

- லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam.blogspot.in

தமிழில்: ச.அழகுசுப்பையா

படங்கள்: தே.தீட்ஷித்