நாணயம் விகடன் 2005 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அது இரு வார இதழாக (15 நாள்கள்) இருந்தது. நாணயம் விகடன் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரைக்கும் பல்வேறு முதலீடுகள் என்ன லாபம் கொடுத்திருக்கிறது என்பதை ஆராய்ந்தோம்.

2006 ஜனவரி முதல் 2018 அக்டோபர் வரையில் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த திட்டங்கள், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். நாணயம் விகடன் தொடங்கிய இந்த 13 ஆண்டு காலத்தில் ஒருவர் எஃப்.டி-யில் மட்டுமே முதலீடு செய்திருந்தால், சுமார் 7.69% வருமானத்தை ஈட்டியிருப்பார். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 8.87% வருமானம் கிடைத்திருக்கும். பங்குச் சந்தையில் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 17.56% வருமானம் கிடைத்திருக்கும்.

உண்மையான வருமானம் எவ்வளவு?

ஒரு முதலீட்டில் உண்மையான வருமானம் என்பது பணவீக்க விகிதத்தைக் கழித்தால் கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகள் 10 மாதங்களில் எஃப்.டி கொடுத்த சராசரி வருமானம் 7.78 சதவிகிதமாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பணவீக்கம் (விலைவாசி உயர்வு) சராசரியாக 7.14 சதவிகிதமாக உள்ளது. ஆக, உண்மையான வருமானம் என்பது எஃப்டி மூலம் கிடைத்தது 0.64%தான். இங்கு வருமான வரிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதையும் எடுத்திருந்தால் எஃப்.டி மூலம் கிடைத்த வருமானம் என்பது ஜீரோ என்பதே உண்மை.

அதிகபட்ச, குறைந்தபட்ச வருமானம்

கடந்த 12 ஆண்டுகள் 10 மாதங்கள் பல்வேறு முதலீடுகள் கொடுத்த வருமானத்தை அடுத்த பக்கத்தில் அட்டவணையாகத் தந்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் எஃப்.டி.க்கான வட்டி அதிகபட்சம் 9.10%, குறைந்த பட்சம் 6.5% ஆக உள்ளது. உண்மையான வருமானம் என்பது எஃப்.டி மூலம் கிடைத்தது 0.64 சதவிகிதம்தான்.

தங்கம் அதிகபட்சம் 29.6 சதவிகிதம் வருமானம் கொடுத்த நிலையில், ஓராண்டில் 28% விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகள் 10 மாதங்களில் தங்கம் கொடுத்த சராசரி வருமானம் 8.30% ஆக உள்ளது. இங்கு உண்மையான வருமானம் என்பது 1.16 சதவிகிதம்தான்.

பங்குச் சந்தை அதிகபட்சம் 74.29 சதவிகிதம் வருமானம் கொடுத்த நிலையில், ஓராண்டில் 34.42% வீழ்ச்சி கண்டிருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகள் 10 மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தையின் சராசரி வருமானம் 17.58% ஆக உள்ளது. இங்கு உண்மையான வருமானம் என்பது 10.44% ஆகும்.

அஸெட் அலோகேஷன்

பொதுவாக, முதலீட்டின்மூலம் ரிஸ்க்கைக் குறைக்கவும், அதிக வருமானமும் பெற அதனைப் பிரித்து அஸெட் அலோகேஷன் படி முதலீடு செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு, தங்கம், எஃப்.டி அல்லது கடன் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 30 வயதுள்ள ஒருவர் இந்தக் காலத்தில் அஸெட் அகோகேஷன்படி முதலீடு செய்திருந்தால், அவருக்கான ரிஸ்க் குறைவதுடன், அவரால் அதிக வருமானத் தையும் அவர் பெற்றிருப்பார்.

பொதுவாக, நம்மவர்கள் பலர் முதலீட்டில் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள். அந்த வகையில் அவர்கள் பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில், நீண்ட காலத்தில் இந்த முதலீடுகளில் உள்ள ரிஸ்க் பரவலாக்கப்படுவதுடன், வருமானமும் இதர முதலீடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானம் கொண்டதாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். ஏற்கெனவே சொன்னபடி, அஸெட் அலோகேஷனை பின்பற்றினால் யாருமே நல்ல லாபம் பெறமுடியும்.

- சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

தப்பு செய்றது தப்பில்ல.

செஞ்ச தப்பையே திரும்பத் திரும்ப செய்றதுதான் தப்பு!