எனது பேரக் குழந்தைகள் (வயது 2, 4) இருவருக்கு தலா ரூ.3,000 வீதம் உயர்கல்விச் செலவுக்காக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து, அவர்களின் 18 வயதில் அவர்களே எடுத்துக்கொள்ள முடியுமா? இடையில் வேறு செலவுக்காகப் பெற்றோர் பணத்தை எடுக்க முடியாத வாறு செய்ய முடியுமா?

க.சிற்றம்பலம், திருச்செந்தூர்.

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

"உங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் தங்கள் பேரக் குழந்தை களின் பெயரிலேயே மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி தொடங்க முடியும். நீங்கள் (பரிசளிப்பவர்) முதலீட்டாளராக சி.கே.ஒய்.சி.(CKYC) பதிவு செய்ய வேண்டும். உங்களது பான் கார்டு, ஆதார் கார்டு, குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குழந்தையின் பெயரில் எஸ்.ஐ.பி ஆரம்பித்து கார்டியனாக தாய் அல்லது தந்தை பெயரை எழுதி, கையொப்பம் இட்டு, வங்கிக் காசோலை நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பரிசளிப்பவர் (தாத்தா / பாட்டி) ரூ.3,000 மதிப்புள்ள காசோலையை எழுதி விண்ணப்பத்திலும் எஸ்.ஐ.பி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும். மாதந்தோறும் எந்தத் தேதியில் எஸ்.ஐ.பி தொகையை எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். லாக் இன் காலம் 18 ஆண்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 18 வயது ஆனவுடன் அந்தக் குழந்தையின் வங்கிக் கணக்கில் (18-வது வயதில் புதிய சேமிப்பு வங்கிக் கணக்கைத் தொடங்கி காசோலை நகலையும் கொடுத்தால்) தொகை மாற்றப் படும். முதலீட்டுக்கு ஆக்ஸிஸ் சில்ட்ரன் ஸ்டார் கிஃப்ட் ஃபண்டைத் தேர்வு செய்யலாம்."

கடந்த 2016 ஏப்ரல் முதல் எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ரூ.10,000 முதலீடு செய்துவருகிறேன். இப்போது ஈக்விட்டி ஃபண்ட் சரிவர வருமானம் தராத சூழலில் எனது பணத்தை எடுத்திடலாமா?

ராம்குமார், மதுரை

கோவர்த்தன் பாபு, நிதி ஆலோசகர்

"எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த வேண்டாம். எஸ்.ஐ.பி நோக்கமே, மார்க்கெட் குறைவாக உள்ள காலங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். குறைவாக உள்ள காலங்களில் முதலீட்டுக்கு, அதிக யூனிட்கள் கிடைக்கும். மீண்டும் மார்க்கெட் உச்சத்திற்குச் செல்லும்போது, நல்ல லாபம் இருக்கும். பொறுமையாக எஸ்.ஐ.பி-யைத் தொடரவும்."

எனது என்.ஆர்.ஐ மகன், மொத்தமாக ரூ.10 லட்சத்தையும், மாதாமாதம் எஸ்.ஐ.பி முறையில் 20,000 ரூபாயையும் நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறான். தகுந்த ஆலோசனை கூறவும்.

கதிரேசன், திருச்சி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

"உங்கள் மகன் அமெரிக்காவிலோ கனடாவிலோ இருக்கும்பட்சத்தில், இந்தியாவில் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் தான் முதலீடு செய்ய முடியும். அரபு நாடு களிலோ, ஐரோப்பா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பவர் களுக்கோ இத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. நீண்ட கால முதலீட்டிற்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நெக்ஸ்ட் பிஃப்டி ஃபண்ட், ஃப்ராங்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவை நல்ல ஃபண்டுகளாக இருக்கும். ரூ.10 லட்சத்தைக் குறிப்பிட்ட ஃபண்ட் நிறுவனங்களின் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து அடுத்த 10 மாதங்களுக்கு சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் மேலே குறிப்பிட்ட ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றி முதலீடு செய்யவும்."

தொகுப்பு: தெ.சு.கவுதமன்