Published:Updated:

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

வெளிநாடுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்) உள்ளனர்.  என்.ஆர்.ஐ-களின் செல்வ மதிப்பு சுமார் 1 ட்ரில்லியன் டாலராக (சுமார் 73 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் ஜி.டி.பி-யில் 40% ஆகும். என்.ஆர்.ஐ-களின் எண்ணிக்கையில் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ-களுக்கான நிதி அம்சங்கள் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

 என்.ஆர்.ஐ-கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்போது அவசியம் கவனிக்கவேண்டிய பல அம்சங்கள் உள்ளன. என்.ஆர்.ஐ-கள் சம்பாதிப்பதுடன்,  தங்கள் தாய்நாட்டில் முதலீடு செய்வது மற்றும் வரி விதிப்பு போன்ற வற்றையும் கூடுதலாகக் கையாள வேண்டியிருக்கிறது. இதனால், இரு (நாடுகளின்) அமைப்புகள் மற்றும் விதிமுறைகள் என்ஆர்ஐ-களை சிக்கலுக்கு உள்ளாக்கிவிடுகின்றன.

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

1. வருமானம்

ஒரு என்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பிரஜை), இந்தியாவுக்கு வெளியே சம்பாதிக்கும் அனைத்து வருமானம் குறித்தும் தெரிவிக்க வேண்டிய அவசியமோ அல்லது அதற்கு இந்தியாவில் வரிச் செலுத்த வேண்டிய அவசியமோ இல்லை. ஆனால், ஒரு என்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ இந்தியாவில் சம்பாதிக்கும்  அனைத்து வருமானங்களுக்கு இந்தியாவில் வரிச் செலுத்த வேண்டும். வாடகை, சொத்து, நிலம், தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயம் உள்ளிட்ட வருமானம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருவாய் போன்றவை இதில் அடங்கும்.

2. வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை, என்.ஆர்.ஐ-களுக்கான முக்கியமான வித்தியாசமே அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்படும் கீழ்க்கண்ட விதிமுறைகள்தான்.

அ. என்.ஆர்.ஐ-கள் தங்களது சொந்த ஊரில்  வங்கிக் கணக்குகள் ( தனி நபர் அல்லது முதன்மை நபர் - single or primary holder) வைத்திருக்க அனுமதியில்லை. அப்படி வைத்திருந்தால், வெளிநாடு சென்றபின்னர் அது என்.ஆர்.ஓ       (NRO) கணக்குக்கு மாற்றப்படும்.

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ஆ. என்.ஆர்.ஐ-கள் தங்களது சொந்த ஊரில் கூட்டுக் கணக்கு (ஆனால், முதன்மை நபராக அல்லாமல்) வைத்திருத்தல்.

 நெருங்கிய உறவினருடன் இணைந்து என்.ஆர்.ஐ-கள் சொந்த ஊரில் கூட்டுச் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. ஆனால், அது முன்னாள் அல்லது ஜீவித்திருப்பவர் (former or survivor) என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அதுபோன்ற என்.ஆர்.ஐ-களின் நெருங்கிய உறவினர்கள், அந்தக் கணக்கை அந்த என்.ஆர்.ஐ-களின் வாழ்நாள் முழுக்க இயக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த விஷயத்தில் என்.ஆர்.ஐ-கள் கட்டாயம் ஆதார் எண் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

இ. என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ (Non-Resident External) ஆகிய இரு கணக்குகளுக்குமே ஆதார் அவசியமில்லை.

3. முதலீடு

என்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ-கள் தாய்நாட்டில் வாழும் இந்தியர்களைப் போன்றே ஏறக்குறைய அனைத்து சொத்துகளிலும் முதலீடு செய்யலாம். ஆனால், இதில் வேளாண் நிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. பொதுவாக, என்.ஆர்.ஐ-கள் முதலீடு மூலம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதை அனுப்புதல் (Remittance) என்று கூறலாம்.

அமெரிக்கா அல்லாத அனைத்து என்.ஆர்.ஐ-களும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிதித் திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் என்.ஆர்.ஐ-களுக்கு மட்டும் மூலதன சந்தை திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வழிகள் மாறுபட்டதாக இருக்கும்.

4. காப்பீடு

சில என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் வசிக்கும் போது காப்பீட்டு பாலிசிகளை வாங்கியிருக்கலாம். பிறகு அவர்கள் என்.ஆர்.ஐ-களாக ஆகியிருக் கலாம்; சிலர் தங்களது குடியுரிமையையேகூட மாற்றியிருக்கலாம். இந்தப் பிரிவைச் சேர்ந்த    என்.ஆர்.ஐ-களுக்கு எழுப்பப்படும் முதல் கேள்வியே, அவர்களது குடியுரிமை மாறியதால் இந்தியாவில் உள்ள அவர்களுக்கான  பாலிசிகள் பாதிக்கப்படுமா என்பதுதான்.

 அதுபோன்ற பாலிசிகளை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன், அவர்களது பாலிசிகளுக்கு இப்போதும் க்ளெய்ம் கோர முடியும். ஆனால், மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் சிகிச்சை எடுத்தால் தான் க்ளெய்ம் கோர அனுமதிக்கப்படுவார்கள்.

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

5. வரி விதிப்பு

இந்தியாவில் வரி விதிப்பு என்பது ஒருவர் இந்தியரா அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியரா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், அனைத்து வகையான வருமானத்துக்கும் வரி விதிப்பு என்பது ஒரே சீராகத்தான் உள்ளது. ஆனாலும், என்.ஆர்.ஐ-களுக்கான டிடிஎஸ் (TDS - வருமான மூலத்தில் பிடிக்கப்படும் வரி) விகிதம் கணிசமாக வேறுபடுகிறது.

உதாரணமாக, ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை எடுத்துக் கொண்டால், இந்தியர்களுக் கான டி.டி.எஸ் 10 சதவிகித மாகவும், அதுவே என்.ஆர்.ஐ-களுக்கு 30 சதவிகிதமாகவும் உள்ளது. ஒருவேளை, என்.ஆர்.ஐ வசிக்கும் நாடு, இந்தியாவுடன் டி.டி.ஏ.ஏ ( இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம்) ஒப்பந்தம் செய்துகொண்டிருந் தால், அப்போது அந்த               என்.ஆர்.ஐ, டி.டி.எஸ் விகிதத்தைக் குறைக்குமாறு கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கு மாற்றாக, அதுபோன்ற என்.ஆர்.ஐ-கள் தங்களது வருமான வரிக் கணக்குத் தாக்கலை  இ- ஃபைல் (e-File) மூலம் தாக்கல் செய்து, பிடிக்கப் பட்ட டி.டி.எஸ்-ஐ திரும்பக் கோரலாம். இதேபோல், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை களிலும் என்.ஆர்.ஐ-களுக்குப் பிடிக்கப்படும் டி.டி.எஸ் விகிதம் கணிசமான வேறுபாடு கொண்டதாக உள்ளது.

பெரும்பாலான என்.ஆர்.ஐ-களின் மனதில் இருக்கும் இன்னொரு பொதுவான கேள்வி, இந்தியாவில் வசிக்கும் தனது மனைவியின் கணக்குக்குப் பணம் அனுப்பி, அவரது கணக்கு மூலம் முதலீடு செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதுதான். தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியம்தான் என்றாலும், சம்பந்தப் பட்டவரின் மனைவிக்கு, சொந்தமாக வருமானம் ஈட்டியதற்கான வருமான மூலம் எதுவும் இருக்காது என்பதால், வருமான வரித் துறையினர் அந்த என்.ஆர்.ஐ மீது ‘சேர்த்தல் பிரிவு’ (clubbing clause) வரி விதிப்பை அமல்படுத்துவர்.

முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

6. வெளிநாட்டுக்குப் பணத்தை எடுத்துச் செல்லுதல்

ஒரு என்.ஆர்.ஐ, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவதற்குப் பதிலாக இங்கிருந்து கொண்டு செல்வதும் உண்டு (Repatriation). ஒரு என்.ஆர்.ஐ இந்தியாவில் தனக்குச் சொந்தமான சொத்துகள் அல்லது பரம்பரை சொத்துகளை விற்று, அந்த பணத்தை தான் வசிக்கும் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல விரும்பினால், அதற்குண்டான அனைத்து வரிகளையும் அவர் கட்டுவது டன், ஆடிட்டரி டமிருந்து அதற்குரிய சான்றிதழைப் பெற்று, தனது வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்லும் வங்கியிடம் அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 என்.ஆர்.ஐ-க்கு உண்டான நன்மைகளை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம். என்.ஆர்.ஐ-களுக்கு அதிகம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு   10-20 ஆண்டுகளுக்கான காலத்துக்கு மட்டுமே என்பதால், அவர்கள் இந்தக் கால அவகாசத்தையும் சம்பாதிக்கும் பணத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி, தாங்களாகவே சரியான இலக்கு அடிப்படையில் திட்டமிட்டு, அதன்மூலம் தங்கள் நிதி நிலைமையைப் பாதுகாப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தியாவில் வசிப்பவருக்கு உண்டான அதே முதலீட்டு அணுகுமுறைதான் என்.ஆர்.ஐ -களுக்கும். என்றாலும், இதற்கு நல்ல திட்டமிடல் அவசியம் என்பதை என்.ஆர்.ஐ-கள் உணர வேண்டும்!

 - லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam.blogspot.in

 தமிழில்: பா.முகிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு