பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைவான ரிஸ்க் உடைய லார்ஜ்கேப் ஃபண்ட் வகையைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். இதற்கு நேரதிரானவை ஸ்மால்கேப் ஃபண்டுகளாகும். இவை அதிக ரிஸ்க் உடையவை மற்றும் அதிக வருமானம் தரக்கூடியவை. இந்த வகை ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். இந்த ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள, சந்தை மதிப்பின்படி, டாப் 250 நிறுவனப் பங்குகளைத் தாண்டி முதலீடு செய்யும்.

செபியின் அறிவிப்பின்படி, இந்த ஃபண்டுகள் குறைந்தது 65% ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். எஞ்சியதை லார்ஜ், மிட் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்துகொள்ளலாம். செபியின் வரையறையின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் சந்தை மதிப்பின்படி வரையறைப்படுத்தும்போது, டாப் 250 நிறுவனங்கள் அல்லாதவை ஸ்மால்கேப் நிறுவனங்கள் எனப்படுகின்றன. இன்றைய சந்தை மதிப்பின்படி, சுமார் ரூ.10,000 கோடிக்குக்கீழ் உள்ள நிறுவனங்கள் ஸ்மால்கேப் நிறுவனங்கள் என அழைக்கப்படு கின்றன. ஸ்மால்கேப் கேட்டகிரியின் மொத்த சந்தை மதிப்பு ரூ.21 லட்சம் கோடிக்கும் மேலாகும். உதாரணம்: ஸ்மால்கேப் கேட்டகிரியில் உள்ள சில ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள்: கரூர் வைஸ்யா பேங்க், சியட், டி.டி.கே பிரஸ்டீஜ், கஜாரியா செராமிக்ஸ், விகார்ட், எஸ்.கே.எஃப் பியரிங்ஸ், பேட்டா இந்தியா, ஈக்விட்டாஸ் பேங்க், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ராம்கோ சிஸ்டம்ஸ்.

ஸ்மால்கேப் ஃபண்டுகள் வளர்ந்து வரக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், இந்த விதமான ஃபண்டுகளின் வளர்ச்சி விகிதம் நீண்டகாலத்தில் அபரிமிதமாக இருக்கும். 10 வருடத்திற்கும் மேலான இலக்கு களுக்காக இந்த வித ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் இந்த வகை ஃபண்டுகளிலிருந்து நீண்டகாலத்தில் கிடைக்கும். இதைக் கடந்த காலத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள் தந்துள்ள சிறப்பான வருமானத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த வகை ஃபண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளதோ, அதே அளவிற்கு ஏற்ற இறக்கங்களும் இருக்கும். தற்போது பி.எஸ்.இ ஸ்மால்கேப் குறியீடு, ஜனவரி 2018-ல் அடைந்த தனது உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 29% குறைவாக உள்ளது. இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் சர்வசாதாரணம். ஆகவே, இந்த விதமான ஏற்ற இறக்கத்தைத் தாங்கக்கூடியவர்கள் மட்டும் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். நீண்டகால எஸ்.ஐ.பி இந்த ஃபண்டு களுக்கு உகந்ததாக அமையும். ஹைரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மொத்த முதலீட்டையும், எஸ்.டி.பி முறையில், இந்த வகை ஃபண்டுகளில் செய்யலாம்.

ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீட்டிற்கு உகந்த சில ஃபண்டுகளை அட்டவணையில் தந்துள்ளோம். அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் இனி...

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் மார்கன் ஸ்டேன்லி மியூச்சுவல் ஃபண்டு களை, ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியபோது வந்த ஃபண்டாகும். முன்பு மார்கன் ஸ்டேன்லி ஏ.சி.இ ஃபண்ட் என அழைக்கப்பட்டது. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியதும் 2014-ல் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் & மிட்கேப் ஃபண்ட் என பெயர் மாற்றப்பட்டது. 2016-ல் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் என பெயர் மாற்றப்பட்டது.

இதன் ஃபண்ட் மேனேஜர், சிரக் சேத்தல்வத் ஆவார். இவர் ஒரு கைதேர்ந்த ஃபண்ட் மேனேஜர். இந்த ஃபண்ட் கெமிக்கல்ஸ், சர்வீசஸ் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் அதிகமான வெயிட்டேஜை வைத்துள்ளது. அரபிந்தோ ஃபார்மா, என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ், சம்பல் ஃபெர்ட்டிலைசர்ஸ், ஷார்தா கிராப்கெம், சொனாட்டா சாஃப்ட்வேர் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.
ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் 28-11-2018 வரை குளோஸ் எண்டட் திட்டமாக இருந்தது. இப்போது ஓப்பன் எண்டட் திட்டமாக மாறியுள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் அனுபம் திவாரி ஆவார். இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ், கெமிக்கல்ஸ் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகளில் அதிகமான வெயிட்டேஜை வைத்துள்ளது. இதன் டாப் ஹோல்டிங்ஸ் சிட்டி யூனியன் பேங்க், டி.சி.என்.எஸ் குளோத்திங், என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ், வி.எஸ்.டி இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகளாகும். இதன் போர்ட்ஃபோலியோவில் தற்போது 35 பங்குகள் இடம்பெற்றுள்ளது. இப்போது ஓப்பன் எண்டட் திட்டமாக மாற்றப்பட்டு உள்ளதால் இனிவரும் காலங்களில் பணவரத்து அதிகரிக்கும் போது, பங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எல் அண்டு டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்: இந்த ஃபண்ட் இன்னும் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்யவில்லை. இருந்த போதிலும் இதன் உயரிய செயல்பாட்டைக் கருத்தில்கொண்டு பரிந்துரை செய்கிறோம்.

இதன் ஃபண்ட் மேனேஜர் சௌமேந்திரநாத் லஹிரி ஆவார். இவர் இந்த நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அலுவலரும் ஆவார். இதன் வெயிட்டேஜ் இன்ஜினீயரிங், கெமிக்கல்ஸ் மற்றும் சர்வீசஸ் துறைகளில் அதிகமாக உள்ளது. ஹெச்.இ.ஜி, ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், ஃப்யூச்சர் ரீடெய்ல், இப்கா லேபாரட்டரீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் முதலீடு பரவலாக 86 பங்குகளில் உள்ளது.

ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர்கள் த்ருமில் ஷா மற்றும் சமீர் ரச் ஆவார்கள். 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் இதுவரை நல்ல வருமானத்தைத் தந்துள்ளது. கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகளில் இதன் வெயிட்டேஜ் அதிகமாக உள்ளது. வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ், வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், தீபக் நைட்ரைட், விந்தியா டெலிலிங்ஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. தற்போது இந்த ஃபண்ட், எஸ்.ஐ.பி மற்றும் எஸ்.டி.பி முறையில் மட்டும் புதிய முதலீடுகளைப் பெற்றுக்கொள்கிறது. மொத்த முதலீடுகளைப் பெறுவதில்லை.

எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்: எஸ்.பி.ஐ ஸ்மால் அண்டு மிட்கேப் என்று முன்பு அழைக்கப்பட்ட ஃபண்ட், தற்போது எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் என அழைக்கப்படுகிறது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து புதிய முதலீடுகளை எஸ்.ஐ.பி / எஸ்.டி.பி முறையில் பெற்றுக் கொள்கிறது.

இதன் ஃபண்ட் மேனேஜர் ஆர். ஸ்ரீனிவாசன் ஆவார். எஃப்.எம்.சி.ஜி, ஃபைனான்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் அதிக வெயிட்டேஜைக் கொண்டுள்ளது. புளூ ஸ்டார், ஹாக்கின்ஸ் குக்கர்ஸ், சிம்ரன் விண்ட் புராஜக்ட், தமிழ்நாடு நியூஸ் பிரின்ட், மேரிகோ போன்ற நிறுவனப் பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. 2009-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் இதுவரை நன்றாகச் செயல்பட்டுள்ளது. மொத்த முதலீட்டை இந்த ஃபண்ட் ஏற்றுக் கொள்வதில்லை. எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி (மாதம் ஒருமுறை) மூலம் மட்டுமே ரூ.25,000-க்கு உட்பட்டு ஏற்றுக் கொள்கிறது.)

(அலசுவோம்)

- சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)