Published:Updated:

இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?
இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?

ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்

பிரீமியம் ஸ்டோரி

ல்ல வேலை, ஓரளவு நிறைவான வருமானம், தனது ஓய்வுக் காலத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் உதவும் வகையில் சிறு சிறு சேமிப்புகள், சில முதலீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீடு என்று அமைதியான முறையில் சீராக நகர்கிறது வாழ்க்கை.  

இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?

இந்தச் சமயத்தில், முதலீட்டு நோக்கில் இன்னொரு வீடு வாங்கும் எண்ணம் பலரது மனதில் வரும். இரண்டாவது வீட்டை முழுவதும் பணம் கொடுத்து வாங்கினாலும், வீட்டுக் கடன்மூலம் வாங்கினாலும் அது லாபகரமாக இல்லை. காரணம், வீட்டின் மதிப்பில் சுமார் 2% தொகைதான் வீட்டு வாடகையாகக் கிடைக்கிறது.

நீண்ட கால வீட்டுக் கடன் (குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்) என்பது, நமது இயல்பான வாழ்க்கை முறையையும், மன நிம்மதியையும் எந்த நேரத்திலும் பாதிக்கவல்லது. ஒரு பெரிய தொகையை, நீண்ட காலத்திற்கு, நாம் வீட்டுக் கடனாகப் பெற்று, இ.எம்.ஐ முறையில் திரும்பச் செலுத்தும்போது, அதைத் தாண்டி வேறு எந்த முதலீட்டையும் செய்ய முடியாத படிக்கு நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது. நம் அறிவுக்கும், திறனுக்கும் ஏற்ப இன்னும் அதிகமான வருமானத்திற்கு வாய்ப்புள்ள வேலையைத் தேடுவதற்குப் பதிலாக, இருக்கும் வேலையிலேயே ஒருவித பாதுகாப்பைத் தேட வைத்துவிடுகிறது வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. வீட்டுக்கடன் என்பது நமக்கு மன உளைச்சலைத் தந்து, வாழ்வின் எல்லை வரை நம் மனநிம்மதியைக் குலைத்துவிடுவதாகவும் உள்ளது.

இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?

இ.எம்.ஐ கடனைத் திரும்பச் செலுத்தும் 15 வருட அல்லது 20 வருட வாழ்க்கையில் சிக்கிக் கொள்பவர்கள் யார் என்று பார்த்தால்,   இன்றைய, நவீன முதலீட்டு முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதவர்களும், தெரிந்திருந்தும் அதில் முதலீடு செய்யத் தயங்கி ஒதுங்கி நிற்பவர் களும்தான்.

ஆடியோ கேசட்டிலிருந்து, எம்பி3 பிளேயர் களுக்கு எளிதாக மாறிவிட்டோம். பிலிம் காமிரா விலிருந்து டிஜிட்டலுக்கும் எளிதாக மாறி விட்டோம். ஆனால், ஆயுள் காப்பீடு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பாரம்பர்ய  சேமிப்பு முறை களிலிருந்து, இன்றைய டிஜிட்டல் யுகத்துக்குத் தகுந்தபடி முதலீட்டு முறைக்கு மாறுவதற்கு மட்டும் நாம் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.   

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ கட்டுவதாகக் கடன் வாங்கி, அதனை அத்தனை ஆண்டுகளும் கஷ்டப்பட்டு, கட்டி முடித்தாலும், அந்த வீட்டின் மூலம் பெரிதாக வாடகை வருமானம் எதையும் பார்க்க முடியாது.  தற்போதைய நிலையில் வீட்டின் மதிப்பும் பெரிதாக அதிகரிக்க வாய்ப்பில்லை.

எனவே, முதலீட்டு நோக்கில் வீட்டுக் கடன் வாங்குவதற்குப் பதிலாக, வீடு வாங்க வைத்திருக் கும் டௌன் பேமென்ட் (Down payment) பணத்தை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்யலாம்.

இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?

இப்படி செய்தபின், வீட்டுக் கடனுக்கு  மாதந்தோறும் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகையைவிட சிறியத் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், அதாவது, மாதந்தோறும்  ரூ.6,000-ஐ தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். வீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட  பல லட்சம் ரூபாய் அதிகமான வருமானம் கிடைப்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு சில ஆண்டுகள் முன்புவரை, அனைத்து வங்கிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்தன. ஆனால் இப்போதோ, ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே,  வீட்டுக் கடன்மூலம் முதலீட்டு நோக்கில் இரண்டாவது, மூன்றாவது வீடு வாங்க நினைப்பவர்கள் அந்த முடிவை மறுபரிசீலனை செய்வது அவசியம்.  குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற அடிப்படை நிறைவேறிவிட்டால், மீண்டும் மீண்டும் அந்த வகை முதலீட்டையே நாடுவதைவிட அதிக வருமானம் தரும் முதலீடுகளைக் கவனிக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு