Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

நான் எங்கே போனாலும் ஒரு கேள்வியை என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ‘‘உங்கள் நிறுவனத்தின் பெயரை மார்செல்லஸ் என்று வைத்திருக்கிறீர்களே, ஏன்?’’ என்பதுதான் அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலை இப்போது சொல்கிறேன். 

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

   யார் இந்த மார்செல்லஸ்?

லத்தீன் மொழியில் ‘மார்செல்லஸ்’ என்றால், சிறிய மாவீரன் என்று பொருள். இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான மார்செல்லஸ் யார் என்றால், ‘கேசியஸ் மார்செல்லஸ் க்ளே ஜீனியர்’ என்ற குத்துச்சண்டை வீரர் ஆவார். உங்களுக்கு நினைவில்லையா? பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரராகிய முகமது அலியின் பெயர்தான் அது. முகமது அலியின் நம்பிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் (சண்டைக் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும்) நம்மைப்போன்று குறைந்த  வளங்களை வைத்துக்கொண்டு பெரிய விஷயங் களைச் சாதிக்க நினைக்கும் மத்தியதர வர்க்க நபர்களுக்கு பெரியதொரு முன்னுதாரணமானதாகவும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய தாகவும் இருக்கும். இந்த தலைசிறந்த பாக்ஸரின் வெற்றிகள் அனைத்தும் உடல்பலத்தைவிட மனோபலத்தினாலேயே அமைந்தது. இவர் தோற்ற ஒரே ஒரு விஷயம், அவரை பீடித்த பார்க்கின்சன் நோய்தான். அதுவும் உடலைப் பாதிப்பதல்ல,  மூளையைப் பாதிப்பது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

   மாவீரனும் அவருடையை புகழ்பெற்ற சாதனைகளும்

புலிட்சர் விருதுபெற்ற டேவிட் ரெம்னிக்கின் நாவலான ‘கிங் ஆஃப் த வேர்ல்டு: முகமது அலி அண்டு தி ரைஸ் ஆஃப் தி அமெரிக்கன் ஹீரோ’(இந்த நாவல் பிற்பாடு திரைப்படமாக எடுக்கப்பட்டது) என்கிற புத்தகத்தில் முகமது அலியின் வாழ்க்கை தத்ரூபமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

கேசியஸ் மார்செல்லஸ் க்ளே அமெரிக்காவின் கென்டகி (லூயிஸ்வில்லி) எனும் இடத்தில் 1942-ம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய 12-வது வயதில் ஒரு அமெச்சூர் குத்துச்சண்டை வீரராகப் பயிற்சி பெற்ற இவர், 1960-ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றார். அதன்பின் உடனடியாக புரஃபஷனல் பாக்ஸராக மாறி, இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மூன்று வருடங் களுக்கு பின்னால் 1964-ல் உலக சாம்பியன்களுக்கான போட்டியில் யாராலும் வெல்லமுடியாது என்று நினைக்கப் பெற்ற சோன்னி லிஸ்டனை வென்று  முதல்முறையாக சாம்பியனானார். ‘வண்ணத்துப் பூச்சியைப் போல பற, தேனியைப்போல் கொட்டு, உறுமு இளைஞனே உறுமு’ என்று சோன்னி லிஸ்டனுடன் மோதுவதற்குமுன்  சொல்லிவிட்டுச் சென்றார் முகமது அலி.

உலக சாம்பியன் ஆனதற்குப் பின் நல்லதொரு கறுப்பு இன குத்துச்சண்டை வீரராக,  ஸ்பான்சர் களின் சொல்பேச்சு கேட்பவராக அவர் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவரோ உடனடி யாகத் தன்னுடைய அடிமைத்தனத்தைக் குறிக்கும் பெயரை முகமது அலி என்று மாற்றினார். அமெரிக்காவில் சிவில் உரிமைக்குப் போராடும் அவருடைய இனத்தவர்களின் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1966-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்கு (அமெரிக்கர்கள் கட்டாயமாகச் சேர்ந்து பணியாற்றவேண்டிய ஒரு விஷயம்) தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டார். ஏனென்றால், அவருடைய மதம் மற்றும் வியட்நாமில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அவருக்கு இருந்த கருத்து போன்றவை அதற்குக் காரணமாகக் காட்டப்பட்டது.  அமெரிக்க அரசு அவரை ராணுவப் பயிற்சிக்குச் சேராததற்காக கைது செய்து அவருடைய சாம்பியன் பட்டத்தைப் பறித்தது. அமெரிக்க அரசுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து 1971-ல் விலக்குப் பெற்றார்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

ஆனால், அதற்குப்பின் நடந்ததுதான் வரலாறு. 1970-களில் ஹெவிவெயிட் பிரிவில் உலக சாம்பியனாவதற்காக 21 பாக்ஸர்களைத் தோற்கடித்தது (ஜோ ‘ப்ளாக் பாம்பர்’ லூயிஸுடன் பகிர்ந்துகொண்டது) மற்றும் 14 வெற்றிகளை  (பெளட் ரகம்) பெற்றது (வெல்டர் வெயிட் சாம்பியனான ஜோஸ் நெப்போல்ஸுடன் பகிர்ந்துகொண்டது) போன்றவை பிந்தைய 25 வருடங்களுக்கு முறியடிக்கப்படாததொரு சாதனையாக இருந்தது. மேலும், ‘தி ரிங்’ என்னும் சஞ்சிகையில் ஆறு முறைக்கு மேல் ‘இந்த வருடத்தின் சிறந்த குத்துச்சண்டை வீரர்’ என்ற இடத்தையும் அவர் பிடித்திருந்தார். பி.பி.சி நிறுவனம், முகமது அலி 21-ம்  நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என்ற கெளரவ அந்தஸ்த்தையும் அளித்தது.

1970-களில் அவர் பங்கேற்ற இரண்டு குத்துச் சண்டை போட்டிகள் திரைப்படமாக வெளிவந்தன. 1974-ல் நடந்த போட்டி ‘ரம்பிள் இந்த ஜங்கிள்’ என்றும், 1975ல் நடந்த போட்டி ‘திரில்லர் இன் மணிலா’  என்றும் வெளிவந்தது.

1974-ல் நடந்த சண்டையில் அதுவரை யாராலும் வெல்ல முடியாத  ஜார்ஜ் போர்மேனை வென்றார். அந்தப் போட்டியில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் அது நடந்துமுடிந்தபின்னால் இரண்டு நாள்களுக்கு சிறுநீரில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. 1975-ல் நடந்த போட்டியில் முகமது அலி அவரை ஊக்குவித்துக்கொள்ள சொன்ன வாசகமான ‘எ கில்லா அண்டு எ த்ரில்லா அண்டு எ சில்லா, வென் ஐ கெட் தட் கொரில்லா இன் மணிலா’ என்பதிலிருந்தே ‘த்ரில்லர் இன் மணிலா’ என்ற பெயர் வைக்கப்பட்டது.

   முகமது அலியின் மரபு

முகமது அலி ஒரு பெரிய வீரராக அறியப் படுவதற்கு வெகுநாள்களுக்கு முன்னாலேயே  அவர் சில விஷயங்களுக்காக எடுத்த நிலைப்பாடுகள் அவரைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று அறிந்தே எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக, வியட்நாமுக்கு எதிராக ராணுவத்தில் சேர்ந்து போராடமாட்டேன் என்று 1966-ம் ஆண்டில் அவர் சொன்னார். அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பின்  வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

1961-ம் ஆண்டில் நேஷன் ஆஃப் இஸ்லாமில் அவர் உறுப்பினராகிறேன் என்று அவர் அறிவித்த போது நிறைய கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொலம்பியாவில் நிறைய கடைகளிலிருந்து அவருடைய ஆல்பங்கள் வெளியே எடுக்கப் பட்டது. பாக்ஸிங் நிர்வாகத்தினர் அவருடைய சாம்பியன் பட்டத்தைத் திரும்பப் பெறப் போவதாக மிரட்டினார்கள்.  (Source: https://www.independent.co.uk/arts-entertainment/muhammad-ali-is-a-hero-but-not-just-in-the-ring-1132296.html).

ராணுவத்தில் சேர்ந்து வியட்நாமில் சண்டை போட மாட்டேன் என்று சொன்னதற்காக அவருடைய உச்சபட்ச கேரியரில் ஐந்து வருடங்களை இழந்தார். ஆனால், அது அவருடைய பயிற்சியையும், முயற்சியையும் எள்ளளவும் பாதிக்கவில்லை. அதனாலேயே    1972-ம் ஆண்டில் மீண்டும் ஆட்டக்களத்தில் இறங்கி வெற்றி பெற முடிந்தது. பெரும்பாலும் அவரைவிட மிகவும் பலசாலிகளான இளைஞர் களை எதிர்த்தே அவர் சண்டையிட்டு வெற்றி பெற்றார்.  ஜார்ஜ் போர்மேன் (1974), ஜோ ப்ரேசர் (1975) என்ற இரு பயில்வான்களும், அவர்களைவிட உடல்பலத்தில் குறைவான அதே சமயம் மனபலத்தில் மிகவும் திடமான நபரான முகமது அலியிடம் தோற்றுப் போனார்கள்.  1974-ல் நடந்த போட்டியின் டாக்குமென்ட்ரியான ‘வென் வீ வேர் கிங்ஸ்’ என்ற படத்தைப் பார்த்தால் இது உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

சண்டைக்களத்தில் இருந்த அதே அளவிலான உற்சாகம் முகமது அலிக்கு நலிந்தவர்களுக்கு உதவுவதிலும் இருந்தது. தானம் தரும் (Philanthropy) என்பது பெரிய அளவில் நிலவாத அந்தக் காலத்திலேயே அவர் ஆசியாவில் வாழும் தொழு நோயாளிகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பாலஸ்தீனிய அகதிகளுக்கும், உலகின் பல நாடுகளில் வசிக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வந்தார்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!

  முகமது அலி கற்றுத் தரும் பாடம்

அவருக்கு இருந்த தைரியத்தில் மிகவும் சிறிய துளி அளவே நமக்கு இருக்கிறது என்றாலும், அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அவர் சரியென்று நம்பியதற்காக, அவர் களமிறங்கி செயலாற்றிய விதம் ஒன்றே. கொள்கைக்காக கேரியர், சாம்பியன் பட்டம்,  சம்பாத்தியம் என எதையுமே விட்டுக் கொடுக்க அவர் துணிந்தவராக இருந்தார். ஆப்பிரிக்க, அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு இன்றுவரை அவரே ஒரு பெரும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

1984-ம் ஆண்டில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நான் உடல் ரீதியாகப் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நான் வாழ்வில் பெற்ற சாதனைகளுக்கு நிகரானவையே. ரிஸ்க் எடுக்கத் தைரியமில்லாத ஒரு மனிதனால் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

  தேவை மன உறுதி

முதலீட்டில் வெற்றி பெற நமக்குச் சரியென்று பட்ட நேர் எதிர்மறை விஷயங்களைத் (Contrarian) தீர்க்கமானதொரு மனஉறுதியுடன் நடைமுறைப்படுத்தப் பழகிக்கொள்ளவேண்டும். முகமது அலி வாழ்ந்த காலகட்டத்தில் முக்கிய பிரச்னைகளில் அவர் எடுத்த நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது, நாம் கான்ட்ரேரியன் முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவதற்கான உத்வேகத்தை அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

- செளரப் முகர்ஜி , நிறுவனர்,  மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)

“நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி  இருக்கவேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்படியே இருக்கும் சுதந்திரம் உள்ளவன்.’’

– முகமது அலி!