Published:Updated:

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

Published:Updated:
ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

க்விட்டி ஃபண்ட் வகைகளில் ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கு அடுத்து அதிக ரிஸ்க் உடையது மிட்கேப் ஃபண்டுகள். லார்ஜ்கேப் மற்றும் ஸ்மால்கேப் அல்லாத பங்குகள்  மிட்கேப் எனப்படுகின்றன. சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங் களை மார்க்கெட் மதிப்பின்படி, வரிசைப் படுத்தும்போது (high to low), 101-லிருந்து    250-வது ரேங்க் வரை உள்ள நிறுவனங்கள் மிட்கேப் பங்குகள் ஆகும்.

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

ஆம்ஃபியின் இணையதளத்தில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் வெளியிடும் அறிக்கையில், மிட்கேப் பங்குகள் எவை என்பது தெரிவிக்கப்படும். சுமார் 10,000 கோடிக்குமேல் மற்றும் 30,000 கோடிக்குள் சந்தை மதிப்புள்ள நிறுவனங்கள் இன்றைய அளவில் மிட்கேப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க், பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (ஜாக்கி உள்ளாடை), சோழமண்டலம் ஃபைனான்ஸ், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், கனரா வங்கி, ஃபெடரல் வங்கி, டாடா கெமிக்கல்ஸ், டாடா குளோபல் (டீ), அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் போன்றவை மிட்கேப் பங்கு களுக்கு எடுத்துக்காட்டாகும்.

செபி வரையறைபடி, 65 சதவிகிதத்திற்குக் குறையாமல் இந்தவகை ஃபண்டுகள், மிட்கேப் பங்குகள் மற்றும் மிட்கேப் பங்குசார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். மிட்கேப் வகையில் உள்ள நிறுவனங்கள், ஸ்மால்கேப் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில்  முதிர்ச்சிகொண்ட நிறுவனங்களாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

  சாதக, பாதகங்கள் 

மிட்கேப் ஃபண்டுகள் அதிக வளர்ச்சி உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், அந்த ஃபண்டுகளின் வளர்ச்சி விகிதம் நீண்ட காலத்தில் அபரிமிதமாக இருக்கும். இந்தவகை ஃபண்டுகள் சொத்து உருவாக்கத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். 10 வருடத்திற்கும் மேற்பட்டுள்ள இலக்கு களுக்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பணவீக்கத்தைத் தாண்டி அபரிமிதமான வருமானம் நீண்ட காலத்தில் கிடைக்கும்.

இந்தவகை ஃபண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளதோ, அதே அளவிற்கு ஏற்ற இறக்கங்களும் இருக்கும். தற்போது நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு, கடந்த ஒரு வருடத்தில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஆகவே, ஏற்ற இறக்கத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனநிலை உள்ளவர்கள் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

நீண்டகால எஸ்.ஐ.பி இந்த ஃபண்டுகளுக்கு உகந்தது. ஹைரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மொத்த முதலீட்டையும் எஸ்.டி.பி முறையில், இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டிற்கு உகந்த சில மிட்கேப் ஃபண்டுகள் இங்கே...

   ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட்

2011-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஃபண்டை நிர்வகிப்பவர் ஷ்ரேயாஷ் தெவால்கர். இவர் இதற்குமுன், பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த ஃபண்ட் சிட்டி யூனியன் பேங்க், க்ரூ ஃபைனான்ஸ், ஆஸ்ட்ரால் பாலிடெக்னிக், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் போன்ற பங்குகளை டாப் ஹோல்டிங்ஸாகக் கொண்டுள்ளது. ஃபைனான்ஸ், கெமிக்கல்ஸ், ஹெல்த்கேர், சர்வீசஸ் போன்ற துறைகளில் இதன் வெயிட்டேஜ் அதிகமாக உள்ளது. ஐந்து வருடங்களுக்குமுன் இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,53,427-ஆக உள்ளது.

   டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட்

 இதற்குமுன் இந்த ஃபண்ட் டி.எஸ்.பி-பி.ஆர் ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்ட் என அழைக்கப் பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ரேஷம் ஜெயின், வினீத் சாம்ப்ரே. ஃபைனான்ஸ், கெமிக்கல்ஸ், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் இதன் வெயிட்டேஜ் அதிகமாக உள்ளது. இந்த ஃபண்டின் டாப் ஹோல்டிங்ஸ் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.ஆர்.எஃப், ஆர்.பி.எல் பேங்க், மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ். போர்ட்ஃபோலி யோவில் கிட்டத்தட்ட 95% பங்குகளிலும், எஞ்சியது ரொக்கமாகவும் உள்ளது. சரியாக ஐந்து வருடங்களுக்குமுன் இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,55,857-ஆக உள்ளது.

   ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்

1993-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் கால் நூற்றாண்டைத் தாண்டிவிட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஹரி ஷியாம் சுந்தர் மற்றும் ஆர்.ஜானகிராமன். ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஃபினோலக்ஸ் கேபிள்ஸ், கன்ஸாய் நெரோலேக் பெயின்ட்ஸ், அப்போலோ டயர்ஸ் போன்ற பங்கு கள் இதன் டாப் ஹோல்டிங்ஸ். ஃபைனான்ஸ், இன்ஜினீயரிங், ஆட்டோ போன்ற துறைகளில் இதன் வெயிட்டேஜ் அதிகமாக உள்ளது. ஐந்து வருடங்களுக்குமுன் இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,61,094-ஆக உள்ளது.

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்!

டிசம்பர் 31, 2018 நிலவரப்படி 

ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்

மிட்கேப் ஃபண்டுகளிலேயே இதன் நிர்வகிக்கும் தொகைதான் அதிகம். ரூ.20,000 கோடிக்கும் மேலாக உள்ளது. பல மிட்கேப் ஃபண்டுகள் புதிய பணவரத்தை ஏற்றுக்கொள்ளாதபோதும், இந்த ஃபண்ட் தொடர்ந்து மொத்த முதலீட்டை ஏற்றுக் கொண்டு வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சிராக் சேத்தல்வத். சோழமண்டலம் ஃபைனான்ஸ், சுந்தரம் ஃபாசனர்ஸ், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், டோரண்ட் ஃபார்மா போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. ஃபைனான்ஸ், இன்ஜினீயரிங், கெமிக்கல்ஸ், ஆட்டோ போன்றவை இதன் டாப் துறைசார்ந்த முதலீடுகளாக உள்ளன. ஐந்து வருடங்களுக்கு முன் இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு  ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,61,633-ஆக உள்ளது.

   இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்

இங்கு பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளி லேயே குறைவான நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (ரூ.245 கோடி) மற்றும் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ள ஃபண்ட் இது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் நீலேஷ் தம்னாஸ்கர், பிரனவ் கோகலே. ஆர்.பி.எல் பேங்க், மஹிந்திரா ஃபைனான்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆதித்ய பிர்லா ஃபேஷன் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸ். ஃபைனான்ஸ், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங், எனர்ஜி போன்ற துறைகளில் அதிக வெயிட்டேஜைக் கொண்டுள் ளது. ஐந்து வருடங்களுக்குமுன் இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,60,018-ஆக உள்ளது.

   எல் & டி மிட்கேப் ஃபண்ட்

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் மேனேஜர் சௌமேந்திரநாத் லஹிரி மற்றும் விஹங் நாயக். சௌமேந்திரநாத் லஹிரி எல்&டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியாகவும் உள்ளார். பெர்ஜர் பெயின்ட்ஸ், ஆர்.பி.எல் பேங்க், சோழமண்டலம் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. ஐந்து வருடங்களுக்குமுன், இந்த ஃபண்டில் ஒருவர் செய்த முதலீடு ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,95,772-ஆக உள்ளது.

நாம் பரிந்துரை செய்துள்ள அனைத்து ஃபண்டுகளுமே நீண்ட காலத்தில் தங்களது பெஞ்ச்மார்க்கை பீட் செய்துள்ளது. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப இந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்யுங்கள்.

-  சொக்கலிங்கம் பழனியப்பன்,  டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்  (www.prakala.com)