Published:Updated:

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் கிட்டத்தட்ட 80% முதலீட்டாளர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லாதவையாக இருக்கின்றன. மீதமுள்ள 20% செய்திகளுமே புரமோட்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுகளை (நடவடிக்கைகளை அல்ல)  சொல்பவையாகவே இருக்கின்றன. இதனால் இன்றைக்கு வெளியாகும் செய்தித்தாள்களில் இருக்கும் பல விஷயங்களைப் படிக்காமலே தவிர்த்து விடலாம். நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறேன்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

ஒரு புரமோட்டர் நான் இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னால், அவர் தன்னுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்யத் தயாராகிறார் என்று அர்த்தம் இல்லை. அதேபோல், ஒரு புரமோட்டர் இந்தியாவில் அதிகரித்துவரும் ரெகுலேட்டர்களின் கண்டிப்புத்தன்மை எனக்குக் கவலையளிக்கிறது என்று சொன்னாலுமே, அதை நினைத்து முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.  இதேபோல்தான் அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகளைக் குறித்தும் முதலீட்டாளர்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

சரி, மீதமிருக்கும் இருபது சதவிகித விஷயங்களில் முதலீட்டாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

* நிறுவனங்களின் புரமோட்டர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுடைய பங்குகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்கிறார்களா அல்லது அவர்கள் நிறுவனப் பங்குகளையோ அல்லது வேறு எதையாவதையோ வாங்குகிறார்களா? அவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்றால் ஏன் விற்கிறார்கள் என்பதற்கான காரணத்தை அறிய முற்படவேண்டும். வாங்கினால், அது குடியிருப்பதற்கான பங்களாவானாலும் சரி, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பங்கானாலும் சரி – அது ஒரு முக்கியமான புல்லிஷான விஷயமாகவே (நல்லதொரு காலாண்டு முடிவையோ, அது குறித்த எதிர்பார்ப்பையோவிட) பார்க்கப்படவேண்டும். வார்த்தைகளைவிட நடவடிக்கைகளே அதிக அர்த்தம் கொண்டவை என்பதை முதலீட்டாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள், உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் அவர்கள் எங்கே அவர்களது நேரத்தைச் செலவிடுகிறார்கள், ஒரு அகில இந்திய அரசியல் தலைவர் ஒரு மாநிலத்தின் தலைநகருக்குச் சென்று ஒரு மாநில அரசியல் தலைவரைச் சந்திக்கிறார் என்பது அவருடைய பத்திரிகை அறிக்கை அல்லது மேடைப் பேச்சைவிட அதிக விஷயங்களை உணர்த்தவல்லது. ஒரு அரசியல் தலைவர் பலமுறை வழிபாட்டுத்தலங்களிலும், மத குருமார்களுடனும் தன்னுடைய போட்டோக்கள் வரும்வகையில் நடந்துகொள் கிறார் என்றால், அது பட்ஜெட்டைவிட முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்பட வேண்டும். ஒரு மந்திரியின் மனைவியின் பெயர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் பட்டியலில் இருக்கிறது என்றால், அது ஒரு கொள்கை முடிவு குறித்த அறிவிப்பைவிட முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படவேண்டும். அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை, அவர்களின் அவர்களின் வார்த்தைகளைவிட நடவடிக்கைகளே ஓங்கி ஒலிக்கும் ஒரு விஷயம் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, புரமோட்டர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். எந்தவொரு நடவடிக்கையும் காரணகாரியம் இல்லாமல் நடப்பது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் அடித்தட்டு மக்கள் குறித்த செய்திகளே நகரத்தில் வசிக்கும் மக்கள் குறித்த (டிராபிக் ஜாம், காற்று மாசு போன்ற) செய்திகளை விட முதலீட்டாளர்களுக்கு மிக மிக உதவியான ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு, பின்வரும்   (இந்திய மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினரைப் பாதிக்கும்) விஷயங்களைப் பாருங்கள்.

ஜனவரி மாத மத்தியில் பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை பருவநிலை மாறுதல் எப்படி மீனவர் களையும், மீன்பிடிக்கும் தொழிலையும் பாதிக்கிறது என்பது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டது. இந்தச் செய்தியில் கடந்த ஆறு மாதங்களில் 37 மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து வருடங்களில் 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முக்கியமாக, பெரும்பாலான இறப்புகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்திலேயே நடந்துள்ளது. கடந்த பத்துவருடங்களில் வங்காள விரிகுடாவில் அதிக அளவிலான புயல்கள் உருவாகியுள்ளன. வருடத்திற்கு வருடம் இந்த புயல்கள் அதிக உக்கிரம் கொண்டவையாகவே இருக்கின்றன. புயல் குறித்த எச்சரிக்கை விடப்படும்முன் மீனவர்கள் புயலுக்கு உள்ளே போய் சிக்கிக்கொள்கின்றனர்

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

சத்தீஸ்கர் குறித்து மேல்மட்டத்தில் இருக்கும் நபர்கள் சொல்லும் கதை அங்கே நக்சலைட்கள் அதிகமாக இருப்பதால், பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்பதாகும். ஆனால், நிஜத்தில் நிலைமை அப்படியில்லை. பிரச்னைகளிலிருந்து சத்தீஸ்கர் மீண்டுவருகிறது என்பதை மறுக்கமுடியாத அளவிற்கு வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கடந்த வருடம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், சத்தீஸ்கரில் ஒவ்வொரு மாவட்ட தலைமையகம் இருக்கும் இடங்களிலும் ஒரு கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதற்கான மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிகம் இருந்த பிஜப்பூர் பகுதியின் நிர்வாகம் இதுபோன்ற விளையாட்டு அரங்கம் அமைக்க கடந்த ஆண்டு மே மாதம் முடிவு செய்தது. எட்டு மாதங்களுக்குபின், அங்கே 240 மாணவர்கள் பத்து விதமான விளையாட்டுகளில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவால் அங்கீகரிக்கப் பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கே பயிற்சிபெற்ற மாணவர்கள் மாநில அளவில் 45 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் மிண்ட் பத்திரிகை ஒரு நீண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் அகில இந்தியரீதியாக, தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லுதல் என்பது ஒரு வட்டவடிவிலான சுழற்சியிலேயே இருக்கிறது. தொழிலாளர்கள் இந்தியாவில் பல ஊர்களில் வேலை பார்க்கின்றனர்.

2016-17-ம் ஆண்டிற்கான எக்கனாமிக் சர்வே என்ன சொல்கிறது என்றால், 10 கோடி பேர் இடம்பெயர்ந்து வேலை செய்துகொண்டி ருக்கின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளர் களில் பெரும்பாலானோர் ஆண் களாகவும், சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பிவைக்கும் வகையில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேலைக்குச் செல்பவர்களாகவும், உலக அளவில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தாங்களாகவே சுயவிருப்பத்தின் பேரில் ஊர்விட்டு ஊர்சென்று பணிபுரிபவர் களாகவும் இருக்கின்றனர்.

செய்தித்தாள்களில் வரும் செய்திகளை அப்படியே நீங்கள் அர்த்தம் செய்துகொண்டீர்கள் என்றால், உங்களுக்கு இந்தியா சரியான பாதையில் செல்லவில்லை என்ற தவறான புரிந்துகொள்ளலே உருவாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஊடங்களில் பணிபுரிபவர்கள் இந்தியாவை நியூயார்க், சிங்கப்பூர், லண்டன் போன்ற இடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லும் நபர்களாகவே இருக்கின்றனர். உங்களையும் என்னையும்போல் செளகர்யமாக நகரத்தில் இல்லாத 80 -90% நபர்களைக் குறித்த செய்திகளைப் (மிகக் குறைவாக வெளியிடப்படுபவை) படித்தால், நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு நன்கு புரிய ஆரம்பிக்கும்.

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

அடித்தட்டு மக்களுக்கு வாழ்க்கை என்பது கடினமான ஒன்றாக இருக்கிறபோதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வருகிறது.  இந்த உயர்வு என்பது பின்தங்கிய மாநிலங்கள் என்று நாம் நினைத்துப் பார்க்காத மாநிலங்களிலும்கூட நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இதே நிலைதான் சி.இ.ஓ-களின் பேச்சுகள் குறித்து நீங்கள் படிக்கும்போதும். மேலெழுந்த வாரியாக நீங்கள் சி.இ.ஓ-களின் பேச்சைப் படித்தால், அதிரடிச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படாவிட்டால் நிறுவனங்களின் முன்னேற்றம் கடினமான ஒன்றாகிவிடும் என்பதைப் போன்ற தோற்றமே நம்முடைய மனதில் உருவாகும். நாம் பிறந்த காலத்திலிருந்தே எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்தப் பாட்டையே பாடி வருவதால் (அதை நாம் கேட்டும் வருவதால்) நம்முடைய மனநிலையும் அப்படியே ஆகி விட்டது. இந்தப் பாட்டை பாடும் புரமோட்டர் களே மற்றொரு புறம் ஸ்டார்ட்அப்களில் முதலீடுகளைச் செய்துகொண்டும், மும்பையில் பங்களாக்களையும், வளமான கிராமப்புறங்களில் பண்ணை வீடுகளையும் வாங்கிக் கொண்டி ருக்கிறார்கள்.

அதேபோல்தான், அரசியல்வாதிகளும். அவர்களுடைய குடும்பங்களும் புரமோட்டர் களைப் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே நாம் இவர்களுடைய வார்த்தைகளைப் பின்னுக்குத் தள்ளி, நடவடிக்கை களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

(முதலீடு வளரும்)